மொழிபெயர்ப்பாளனின் வாதைகள் யாருக்கும் தெரிவதில்லை!

நேர்காணல்: யூமா வாசுகி சந்திப்பு: கமலாலயன் ஒளிப்படங்கள்: மாணிக்கசுந்தரம் அறிமுகம் ஓவியர், கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், சிறார் இலக்கியச் செயல்பாட்டாளர் என பல பரிமாணங்கள் கொண்டவர். இயற்பெயர், மாரிமுத்து. கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் நுண்கலையில் பட்டயம் (Diploma) பெற்ற ஓவியர். இவர் எழுதிய ‘ரத்த உறவு’, ‘மஞ்சள் வெயில்’ ஆகிய நாவல்கள், வாழ்க்கையின் வலிகளையும் உக்கிரங்களையும் உலுக்கி எடுக்கும் மொழியில் பேசியவை. ‘ரத்த உறவு’ நாவல் 2000மாவது ஆண்டில் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கிய சிறந்த நாவலுக்கான பரிசு பெற்றது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘உயிர்த்திருத்தல்’ இவரது சிறுகதைத் தொகுதி. ‘தோழமை இருள்’, ‘அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’, ‘என் தந்தையின் வீட்டைச் சந்தையிடமாக்காதீர்’, ‘சாத்தானும் சிறுமியும்’ ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். ‘மரூனிங் திக்கெட்ஸ்’ என்பது, இவர் பத்திரிகைகளில் வரைந்த கோட்டோவியங்கள் அடங்கிய நூல். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமாக…

Read More