மீண்டெழும் மறுவாசிப்புகள் – 8: கிருஷ்ணனின் வம்சத்தில் கஜினிமுகமது!

ச.சுப்பாராவ் நான் மிகப் பொறுமையான வாசகன். எத்தனை கடினமான புத்தகமாக இருந்தாலும், சலிப்பூட்டுவதாக இருந்தாலும், அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து முடித்துவிடும் நிதானமும், பொறுமையும் உள்ளவன். என்னையே பொறுமை இழந்து, தூக்கிப் போட்டுவிடுவோமா என்று நினைக்க வைத்த ஒரு நாவலும் கைக்குக்கிடைத்த கொடுமையை என்னவென்பது? கதைகள்     எல்லையற்ற கற்பனையால் உருவாகின்றன என்று நமக்குத் தெரியும். எனினும், ஓரளவு நம்பகத்தன்மை எனும் ஒரு எல்லைக்குள்தான் அந்த    எல்லையற்ற கற்பனை இருக்க வேண்டும். அந்த எல்லையை மீறிய எல்லையற்ற கற்பனை எரிச்சல்பட வைத்தாலும், இக்கட்டுரைக்காகப் பொறுமைகாத்துப் படித்தேன். யான்பெற்ற இன்பத்தை(!) நீங்களும் பெறுவீராக! முதலில் அந்த எல்லையற்ற கற்பனைகளின் ஒரு பட்டியல். பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் மாமனான(?) பீஷ்மர் (நாவலில் சத்தியமாக இப்படித்தானய்யா இருக்கிறது!) இறந்தது கிமு 3067 மே மாதத்தில். ஹரி என்ற கடவுளைத்தான் கிரேக்கர்கள் ஹெர்குலிஸ் என்றார்கள். கலியுகம்…

Read More