You are here
ஒரு குடும்பத்தின் ஷெட்ரின் கதை நூல் அறிமுகம் 

ஒரு குடும்பத்தின் ஷெட்ரின் கதை – தமிழில்: நா.தர்மராஜன்

ஒரு குடும்பத்தின் ஷெட்ரின் கதை தமிழில்: நா.தர்மராஜன் | பாரதி புக் ஹவுஸ், பக். 115, விலை ரூ.60 ஷெட்ரின் புரட்சிக்கு முந்தைய ரஷ்யமொழி படைப்பாளி. தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். ரஷ்ய புரட்சி ஏற்பட்டதன் பின்னணியில் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை தோழர் நா.தர்மராஜன் மொழி பெயர்த்தார். முன்பே இதை வாசித்திருக்கிறேன். தற்போது மீண்டும் பதிப்பித்திருக்கிறார்கள். என்ன அற்புதமான எழுத்து. நிலவுடைமை சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும் குடும்பம் இறுதியில் முற்றிலும் அழிந்துபோகிறது. கடைசியாக மிஞ்சுபவர்கள் போர் புரியும் அவனது மருமகள் அன்னின்காவும் மட்டுமே. போர் புரியும் நிலவுடைமை சமூக எஜமானர் சமூக பண்ணை முதலாளி. கருமித்தனமும் வெட்டிப் பேச்சு சுரண்டல் குணம் அவனது உடன் பிறந்தது. பண்ணை அடிமை முறைக்கு எதிராக ஜார்மன்னனுக்கு எதிராக உள்ளது என தடை செய்யப்பட்ட புத்தகம் இது. ஆனால் ஷெட்ரினின்…

Read More
Suvadi Padhukappu Varalaru நூல் அறிமுகம் 

சுவடிப் பாதுகாப்பு வரலாறு – முனைவர் ப. பெருமாள்

சுவடிப் பாதுகாப்பு வரலாறு முனைவர் ப. பெருமாள் | கோவிலூர் மடாலயம், பக். 240, விலை ரூ.135 சீனர்கள் காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பே தமிழ் மண் பருத்தியிலிருந்து தகடுபோல எழுதப் பயன்படுத்திய காகிதம் ஒன்றை கி.மு. 327ல் கொண்டிருந்ததாக இந்த நூலின் ஆரம்பத்திலேயே ஒரு சூப்பர் அதிர்ச்சி நமக்கு காத்திருக்கிறது. அலெக்சாந்தர் படைதளபதி நிர்சூஸ் இதை பற்றி சொல்கிறார் முனைவர் பெருமாள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தின் பாதுகாவலர் மற்றும் நூலகம் மிக நேர்த்தியாய் நம் தமிழின் இதுவரை சொல்லப்படாத சுவடி பாதுகாப்பு வரலாற்றை தொகுத்து தருகிறார். சுவடி எனும் சொல் எழுதி முடிக்கப்பட்ட நூலை குறிக்கும். தமிழில் நூல், சுவடி, மடல், ஓலை, ஏடு, இதழ், தந்திரம், தூக்கு, பனுவல், பொத்தகம் எல்லாமே ஆதிகால சொற்கள். யாவுமே புத்தகத்தைக் குறிப்பவை. பாதுகாப்பாக சுவடிகளை கையாளப் பயன்படுத்தும்…

Read More
Nee Ezhudha Marukkum Enadhazhagu நூல் அறிமுகம் 

நீ எழுத மறுக்கும் எனதழகு கவிதைகள் – இளம்பிறை

நீ எழுத மறுக்கும் எனதழகு கவிதைகள் இளம்பிறை, டிஸ்கவரி புக்பேலஸ் | பக். 247, விலை ரூ. 230 ‘என்னை நீ ஆக்காமல்/ இருப்பாயா நீ’ என நெஞ்சுக்கு நேராக ஆட்காட்டி விரலை காட்டி எச்சரித்த மவுனக்கூடு. தொகுப்பு நாட்களில் இருந்து கவிஞர் இளம்பிறை பரிட்சயம். பிறகு ஒரு போதில் தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற சென்ற நாளில் நானும் பெறுகிறேன் என்று இணைந்த வரை அப்புறம் பத்து பதினைந்து ஆண்டு கழித்து இப்போது இந்த கவிதைத் தொகுப்பின் மூலம் முழுமையாய் அறிகிறேன். மனசாட்சிக்கு எரியூட்டும் கனப்பு. பிறகென்ன/ வார்த்தை கிடைத்தவரை/ எழுத்தாய் வடித்துவிட்டு மிக்க நிதானமாக விறகுகளுடன் சேர்த்து எரிப்பேன் எனது வீணையையும்/ என பொங்கும் வரிகள் சமூகத்தின் அடிமை சட்டங்களை எரிக்கத் துடிக்கின்றன. உழைக்கும் மக்களை சித்தரிக்கும் நேர்மையை சிற்பி பாராட்டுகிறார். தூயகாற்றை சுவாசித்து…

Read More