You are here
nanbargalin_parvaiyil_marx நூல் அறிமுகம் 

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் – த.ச.சுப்பாராவ்

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் த.ச.சுப்பாராவ் | பாரதி புத்தகாலயம் பக்.80, விலை ரூ.70 விஞ்ஞான மானுடவியலாளரும், வரலாற்று பொருள்முதல் வாதியும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சக ஆசிரியரும், மூலதனத்தைப் படைத்தவருமாகிய மார்க்ஸ். மனித இனத்திற்கே சொந்தமானவர். தோழர் சுப்பாராவின் அசுரத்தனமான உழைப்பில் மற்றொரு மணி மகுடமாக வந்துள்ள மார்க்ஸ் குறித்த சிறப்பான நூல் இது. மார்க்ஸ் எனும் பொருளாதார மேதையான அரசியல் தத்துவ ஆசிரியனைப்பற்றி நிறைய புத்தகங்கள் தொடர்ந்து வாசிக்கிறோம். ஆனால் மார்க்ஸ் எனும் மனிதரைப் பற்றி நாம் சிறிதளவே வாசித்துள்ளோம். இந்த நூலில் அவரோடு நெருங்கிப் பழகி வாழ்ந்த அவரது நண்பர்களான காரல் லீப்னி ஹ்ட் மற்றும் பால் லஃபார்க்கே ஆகியோரின் அரிய பதிவுகள் இடம் பெற்றுள்ளன. வாசிக்க வாசிக்க மனதின் நெகிழ்வும் கண்களில் நம்மையும் அறியாமல் கண்ணீரும் வருகிறது. மார்க்ஸோடு நடைப் பயணம், மார்க்ஸோடு…

Read More
vannam-poosiya-paravai நூல் அறிமுகம் 

வண்ணம் பூசிய பறவை – ஜெர்ஸி கோஸின்ஸ்கி

வண்ணம் பூசிய பறவை ஜெர்ஸி கோஸின்ஸ்கி | தமிழில்: பெரு. முருகன் புலம், பக்.307, விலை ரூ.225 ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டு உடனடியாக யூத மொழியிலும் ஆங்கிலத்திலும் வந்த நாவல். ஆனால் போலிஷ் மொழி நாவல் என்றே பொதுவாக அது அறியப்பட்டதற்கு காரணம் கோலின்ஸ்கி போலந்தில் பிறந்த யூதர். இரண்டாம் உலக யுத்தத்தின்போது நாஜிக்களால் தாய், தந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு விட்ட ஐந்து வயது சிறுவனின் துயரக் கதையே இந்த நூல். 1965ல் வெளிவந்தது. அகதியாய் அனாதையாய் திரியும் ஒரு சிறுவனை பின்பற்றி நகரும் இந்த கதை நமக்கு மனித இனத்தின் வக்கிரமான கொடிய வஞ்சக உலகை ஆழமாக விவரித்து விம்மிப் பரிதவிக்க வைக்கிறது. மேற்கு ஐரோப்பாவின் பல்வேறு கிராமங்களில் அவன் அடைக்கலமாகிறான். ஆனால் சிறுவன் எதிர் கொள்வதெல்லாம் குரூரங்களையும், கொடூரங்களையும் மட்டுமே சமூகம் அவன் மீது சுயநலம்…

Read More
keezhadi-tamil-inaththin-muthal-kaaladi நூல் அறிமுகம் 

கீழடி – தமிழ் இனத்தின் முதல் காலடி – நீ.சு. பெருமாள்

கீழடி – தமிழ் இனத்தின் முதல் காலடி நீ.சு. பெருமாள் மேன்மை வெளியீடு பக்.79, ரூ.80. மேன்மை இதழில் இக்கட்டுரைகளை நான் வாசித்திருந்தாலும் ஒரு தொகுப்பாக வாசிக்கும்போது தோழர் பெருமாளின் பங்களிப்பை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. மிகவும் நேர்மையான எவ்வகையிலும் ஒரு தலைபட்சமாக அணுகாமல் உணர்ச்சிகளுக்கும் இடம் தராமல் அறிவியல் பூர்வமாக ஒரு அகழ்வாராய்ச்சியை நம் கண்முன் நிகழ்த்துகிறார் அவர். கீழடி ஆய்வு உலகிற்கே மிக சிறப்பான செய்தியை முன்வைக்க இயலும். ஆப்பிரிக்க, அய்ரோப்பிய அறிஞர்கள் துடிக்கிறார்கள். ஆய்வு முடிவுகளுக்காக தவிக்கிறார்கள் மத்திய மோடி அரசோ அயோத்தியில் மியூசியம் அமைக்கிறது. இல்லாத சரஸ்வதி நதியை தேட 140 கோடி செலவு செய்கிறது. நம் தமிழரின் 3000 வருட பாரம்பரியத்தை மிக தெளிவாக முன்வைக்கும் கீழடியை இருட்டடிப்புச் செய்கிறது. பெருமாள் போன்றவர்கள் பிடிவாதமாக வேலை தொடர்கிறார்கள். தமிழர்களின்…

Read More
tamilnadu-varalaaru நூல் அறிமுகம் 

தமிழ்நாட்டு வரலாறு – பேரா. அ.இராமசாமி

தமிழ்நாட்டு வரலாறு பேரா. அ.இராமசாமி | என்.சி.பி.எச். பக்.359, விலை ரூ. 260 தமிழ் நிலப்பரப்பின் வரலாறு என்பது இத்தனை ஆழமாக விரிவாக இதுவரை எழுதப்படவில்லை. இந்தியாவை விந்திய சாத்பூரா மலைத் தொடர்களும் நர்மதை, தபதி நதிகளும் வட இந்தியா தென் இந்தியா என்று இரண்டாக பிரிகின்றன. தென் இந்தியாவில் தக்காண பீட பூமிக்கும் தெற்கே குமரியும் கிழக்கு மற்றும் மேற்கே கடலும் சூழ்ந்த பிராந்தியமே தமிழகம் என தொல்காப்பிய சிறப்புப் பாயிரம் சொல்கிறது என தொடங்கும் இந்த நூல் மிக நேர்த்தியாக இந்த நிலப்பரப்பின் மக்கள் வரலாறை சொல்லிச் செல்கிறது. புதை பொருட்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள் வட நூல் செய்திகள் கோயில் சிற்பங்கள் என ஆதாரங்களுடன் வரலாறு அறிவியல் முறைப்படி இந்த வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. கி.மு. 35000 தொடங்கி நீதிக் கட்சியின் காலமாகிய…

Read More
ஒரு குடும்பத்தின் ஷெட்ரின் கதை நூல் அறிமுகம் 

ஒரு குடும்பத்தின் ஷெட்ரின் கதை – தமிழில்: நா.தர்மராஜன்

ஒரு குடும்பத்தின் ஷெட்ரின் கதை தமிழில்: நா.தர்மராஜன் | பாரதி புக் ஹவுஸ், பக். 115, விலை ரூ.60 ஷெட்ரின் புரட்சிக்கு முந்தைய ரஷ்யமொழி படைப்பாளி. தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். ரஷ்ய புரட்சி ஏற்பட்டதன் பின்னணியில் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை தோழர் நா.தர்மராஜன் மொழி பெயர்த்தார். முன்பே இதை வாசித்திருக்கிறேன். தற்போது மீண்டும் பதிப்பித்திருக்கிறார்கள். என்ன அற்புதமான எழுத்து. நிலவுடைமை சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும் குடும்பம் இறுதியில் முற்றிலும் அழிந்துபோகிறது. கடைசியாக மிஞ்சுபவர்கள் போர் புரியும் அவனது மருமகள் அன்னின்காவும் மட்டுமே. போர் புரியும் நிலவுடைமை சமூக எஜமானர் சமூக பண்ணை முதலாளி. கருமித்தனமும் வெட்டிப் பேச்சு சுரண்டல் குணம் அவனது உடன் பிறந்தது. பண்ணை அடிமை முறைக்கு எதிராக ஜார்மன்னனுக்கு எதிராக உள்ளது என தடை செய்யப்பட்ட புத்தகம் இது. ஆனால் ஷெட்ரினின்…

Read More
Suvadi Padhukappu Varalaru நூல் அறிமுகம் 

சுவடிப் பாதுகாப்பு வரலாறு – முனைவர் ப. பெருமாள்

சுவடிப் பாதுகாப்பு வரலாறு முனைவர் ப. பெருமாள் | கோவிலூர் மடாலயம், பக். 240, விலை ரூ.135 சீனர்கள் காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பே தமிழ் மண் பருத்தியிலிருந்து தகடுபோல எழுதப் பயன்படுத்திய காகிதம் ஒன்றை கி.மு. 327ல் கொண்டிருந்ததாக இந்த நூலின் ஆரம்பத்திலேயே ஒரு சூப்பர் அதிர்ச்சி நமக்கு காத்திருக்கிறது. அலெக்சாந்தர் படைதளபதி நிர்சூஸ் இதை பற்றி சொல்கிறார் முனைவர் பெருமாள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தின் பாதுகாவலர் மற்றும் நூலகம் மிக நேர்த்தியாய் நம் தமிழின் இதுவரை சொல்லப்படாத சுவடி பாதுகாப்பு வரலாற்றை தொகுத்து தருகிறார். சுவடி எனும் சொல் எழுதி முடிக்கப்பட்ட நூலை குறிக்கும். தமிழில் நூல், சுவடி, மடல், ஓலை, ஏடு, இதழ், தந்திரம், தூக்கு, பனுவல், பொத்தகம் எல்லாமே ஆதிகால சொற்கள். யாவுமே புத்தகத்தைக் குறிப்பவை. பாதுகாப்பாக சுவடிகளை கையாளப் பயன்படுத்தும்…

Read More
Nee Ezhudha Marukkum Enadhazhagu நூல் அறிமுகம் 

நீ எழுத மறுக்கும் எனதழகு கவிதைகள் – இளம்பிறை

நீ எழுத மறுக்கும் எனதழகு கவிதைகள் இளம்பிறை, டிஸ்கவரி புக்பேலஸ் | பக். 247, விலை ரூ. 230 ‘என்னை நீ ஆக்காமல்/ இருப்பாயா நீ’ என நெஞ்சுக்கு நேராக ஆட்காட்டி விரலை காட்டி எச்சரித்த மவுனக்கூடு. தொகுப்பு நாட்களில் இருந்து கவிஞர் இளம்பிறை பரிட்சயம். பிறகு ஒரு போதில் தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற சென்ற நாளில் நானும் பெறுகிறேன் என்று இணைந்த வரை அப்புறம் பத்து பதினைந்து ஆண்டு கழித்து இப்போது இந்த கவிதைத் தொகுப்பின் மூலம் முழுமையாய் அறிகிறேன். மனசாட்சிக்கு எரியூட்டும் கனப்பு. பிறகென்ன/ வார்த்தை கிடைத்தவரை/ எழுத்தாய் வடித்துவிட்டு மிக்க நிதானமாக விறகுகளுடன் சேர்த்து எரிப்பேன் எனது வீணையையும்/ என பொங்கும் வரிகள் சமூகத்தின் அடிமை சட்டங்களை எரிக்கத் துடிக்கின்றன. உழைக்கும் மக்களை சித்தரிக்கும் நேர்மையை சிற்பி பாராட்டுகிறார். தூயகாற்றை சுவாசித்து…

Read More
Koonduku Veliye நூல் அறிமுகம் 

கூண்டுக்கு வெளியே – டாக்டர் ந. பன்னீர்செல்வம்

கூண்டுக்கு வெளியே டாக்டர் ந. பன்னீர்செல்வம் | அந்திமழை, பக்.182, விலை ரூ.16 தேசிய உயிரியல் பூங்காக்களில் முக்கிய பணியில் தொடர்ந்து இருந்து 2015ல் ஓய்வு பெற்றவர் மருத்துவர் ந.பன்னீர்செல்வம். வனவிலங்கு மருத்துவர் என்கிற முறையில் தனது அனுபவங்களை அவர் ஒரு புத்தகமாக எழுதி இருப்பதற்கே நாம் அவருக்கு கடன்பட்டிருக்கிறோம். ஏனெனில் இப்படியான தொகுப்புகள் மிக அபூர்வம். சொன்னால் நம்புவீர்களா. நான் ஒரே இரவில் மடமடவென வாசித்து முடிக்கும்படி சுவாரசியமாக அதை எழுதி செல்கிறார். சூப்பர். யானை அனுபவத்தோடு நூல் தொடங்குகிறது. திருவையாறு கோவில் யானை மதம் பற்றியது. யானை மூலவிக்ரஹத்தை சேதப்படுத்தும் உடனே சுட்டுக் கொன்றுவிட முடிவெடுக்கிறார்கள். பன்னீர் சார் யானையையும் காப்பாற்றி கடவுளையும் காப்பாற்றி கடமையாற்றுகிறார். கால்நடை மருத்துவர் வேறு; வனவிலங்கு மருத்துவர் வேறு என்பதை திருவண்ணாமலை கோயில் யானை சம்பவம். அழகாக விவரிக்கிறது….

Read More
un_kazhuththai_chutrikondu நூல் அறிமுகம் 

உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது – சிமாண்டோ என்கோஜி அடிச்சி – த. வடகரை ரவிச்சந்திரன்

உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது சிமாண்டோ என்கோஜி அடிச்சி த. வடகரை ரவிச்சந்திரன் பாரதிபுத்தகாலயம், பக்.256, விலை ரூ.250. நைஜீரிய நாவலான பயாப்ஃராவை நோக்கி (Destination Biafra) யை தமிழில் மொழி பெயர்த்த நாட்களில் பூச்சியமச் செட்டா (நாவலாசிரியை) மட்டுமல்ல; அடிச்சி உட்பட பலரது எழுத்துக்களை உள்வாங்க வேண்டி இருந்தது. ஈழத்தைப் போலவே ரத்தக் களறிகளுடன்முற்றிலும் சிதைக்கப்பட்ட இக்போ இனத்தின் விடுதலைப் போராட்டம் பற்றி எழுதி முடிக்கவே முடியாது. இதோ மற்றுமொரு அற்புதம். அடிச்சியின் கதைகளை கல்குதிரையிலும், மணல்வீடு இதழ்களிலும் நான் ரவிச்சந்திரன் மொழி பெயர்ப்பில் வாசித்துள்ளேன். 2009ல் வெளிவந்த ‘உன் கழுத்தை சுற்றிக் கொண்டிருப்பது (The Thing around your neck)’ தொகுதி முழுவதையுமே தமிழில் தற்போது பாரதி புத்தகாலயம் வெளியிடுவது மிகுந்த சிறப்பாகும். அடுத்து அவரது Half of the yellow sun நாவலையும்…

Read More
Madhvadha Arasiyal நூல் அறிமுகம் 

மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம் – டி.ஞானையா

நூலின் பெயர் : மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம் ஆசிரியர் : டி.ஞானையா பதிப்பகம் : என்சிபிஎச். விலை. ரூ.80 இதை நீங்கள் வாசித்து முடிக்கும் முன் இந்திய கொலைபாதக மதவெறி அரசியல் ஒரு நிமிடத்துக்கு மூன்று பேர் என்ற விகிதத்தில் அப்பாவி மக்களை காவு வாங்குகிறது. எனும் பாசிச காலத்தில் இப்போது வாழ்கிறோம். அத்தகைய மதவெறிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றன. கவுரிலங்கேஷ் இருப்பது இரண்டாம் பட்ச பட்டியலில்தான். கொலை, பட்டியலின் முதல் தர வரிசையில் அறிஞர்கள், விஞ்ஞானிகள், மக்கள் எழுத்தாளர்கள் உள்ளனர். பண்டாரங்கள் தவிர வேறு யாவுமே கம்யூனிச தேசத் துரோகிகள். இந்த சூழலில் இந்தப் புத்தகம் மிக அற்புத தேவை. இதில் நம் பாரம்பரியத்தை, பன்முக அடையாளமான வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்சும், சங்பரிவார கும்பலும் எப்படி சிதைத்தெறிகின்றன என்பதை ஆழமான ஆதாரங்களோடு அவர்…

Read More