You are here
Kavipithan மற்றவை 

பாட்டிகள் பாட்டிகளாக இல்லை – கவிப்பித்தன்

பாட்டிகள் பாட்டிகளாக இல்லை – கவிப்பித்தன் எதிர்பாரா தருணத்தில் மஞ்சள் வெயிலோடு பெய்கிற அபூர்வமான மாலை நேரத்து மழையைப் போல… அந்த ‘கதைத் தாத்தா’ எங்கள் ஊருக்கு வருகிற ஒவ்வொரு முறையும் திருவிழா நாளின் குதூகலத்தோடு கொண்டாடித் தீர்ப்போம். வெள்ளை நிற அரைக்கைச் சட்டையும், கணுக்கால் தெரிய தூக்கிக் கட்டிய வெள்ளை வேட்டியுமாக தாங்கித் தாங்கி நடந்தபடி… பின்மாலையில்… திடீர் விருந்தாளியைப் போல ஊருக்குள் நுழைவார் தாத்தா. எப்போது வந்தாலும் ஊரின் நடுவில் இருக்கிற ஏட்டுத் தாத்தாவின் வீட்டுத் திண்ணையில் தான் உட்காருவார். அவரைப் பார்த்ததுமே குஷி பிறந்துவிடும் எங்களுக்கு. பள்ளிக்கூடம் போகிற, போகாத எல்லா பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து அவருக்காக சாப்பாடு வாங்க… விளக்குவைத்த பிறகு இரண்டு அலுமினிய குண்டான்களைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக ஓடுவோம். ஒரு குண்டானில் களியும், இன்னொரு குண்டானில் குழம்பும் வாங்கிக்கொள்வோம்….

Read More
வானொலி தமிழ் நூல் அறிமுகம் 

வானொலி தமிழ் நாடக இலக்கியம் – ந. அருண் குமார்

நான் நிறைய வானொலி புத்தகங்கள் படித்துளேன். அந்த வரிசையில் நான் பாரதி புத்தகாலயம் சென்றபோது இந்த புத்தகத்தின் முகப்பு அட்டை என்னை மிகவும் ஈர்த்தது, விடுவேனா உடனே அதை எடுத்துவிட்டேன். முதலில் சில பக்கங்கள் படிக்கும் போதே இந்த புத்தகத்தை நாம் இப்போதே முழுமையாக படித்திட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுகிறது. இந்த நூல் வானொலியில் தமிழ் நாடக இலக்கியத்தை பற்றி மட்டும் சொல்லவில்லை; வானொலியின் வரலாறு குறிப்பாக அகில இந்திய வானொலியின் தமிழ் நாட்டு நிலையங்களின் தொடக்கத்தையும் வரலாறையும் சிறப்பாகக் கூறியுள்ளது. இந்த புத்தகத்தின் 10வது பக்கத்தில் அமெரிக்க வானொலி ஒன்று எவ்வாறு நாடகம் ஒன்றில் வேற்றுகிரகவாசிகள் பூமியை தாக்க வருகிறார்கள்யென்பதை தத்ரூபமாக ஒளிபரப்பியது அதை உண்மை என்று நம்பி மக்கள் பீதியடைந்து தெருக்களில் ஓடினார்கள் என்பதை விவரித்துள்ளார், இதை நான் ஒரு அமெரிக்க ஆங்கில…

Read More
Ranangal கட்டுரை 

ரணங்கள்: மதக்கலவரங்களின் கீரல்களினூடான ஒரு விசாரனை – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

ரணங்கள்: மதக்கலவரங்களின் கீரல்களினூடான ஒரு விசாரனை – எஸ்.ஜி.ரமேஷ்பாபு பிர்தவ்ஸ் ராஜகுமாரனின் ‘ரணங்கள்’ நாவலின் 320 பக்கங்களையும் படித்து முடித்ததும். இது என்ன? சம்பவங்களின் தொகுப்பாக, இடையிடையில் பின்குறிப்புகளூடாக அந்தந்த காலங்களின் நிகழ்வுகள் குறிக்கப்பட்டு ஒரு ‘முழு நாவல் பேக்கேஜ்’ இல்லாமல் இருக்கிறதே என வாசகர்கள் நினைக்கக்கூடும். ஆனால் தோழர் அ.மார்க்ஸ் இந்நாவல் குறித்து தனது முன்னுரையில் கூறியுள்ள ‘இலக்கண’ வரையறையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதை முன்மொழிகிறேன். ‘நாவல் இலக்கணம், இலக்கியம், இலக்கிய நுட்பம், பாத்திர படைப்பு என்றெல்லாம் நுணுகி ஆராய்ந்து இது ஒரு இலக்கியமாகத் தேறியுள்ளதா இல்லையா எனச்சொல்லும் விற்பன்னர்கள் சற்றே ஒதுங்கிக்கொள்வது நல்லது. உங்களின் இலக்கிய, இலக்கண வரையறைக்குள் இது அடங்காமல் போகலாம். இது எந்த ஒரு தனி மனிதனின் வரலாற்றையும் சொல்லவில்லை. ஒரு ஊரின், ஒரு சமூகத்தின், ஒரு காலகட்டத்தின் வரலாற்றைச் சொல்லுகிறது. புதின…

Read More

ஆயகலைகளில் 12 கலைகளின் அறிமுகமும் அனுபவமும் – மயிலம் இளமுருகு

மனிதப் பரிணாம வளர்ச்சியில் மிக அரிய கண்டுபிடிப்பு நெருப்பைக் கண்டுபிடித்தாகும். இதன் தொடர்ச்சியாக இடம், சூழல், வசதி வாய்ப்புகள், சமூகப் பின்புலம் போன்றவற்றின் காரணமாக மேலும் பலதோற்றம் கொண்டன. தன் வசதிக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் இவை உருக்கொண்டன. மனிதர்கள் இவற்றை நாளடைவில் பொது சமூகத்தின் நன்மைக்காகவும் வெளிப்படுத்தினர். அப்படியாக கலைகள் தோற்றம் கொண்டு பரிணமித்தன. இது மனித அறிவின் முதிர்ச்சி என்று சொல்லலாம். அக்காலத்திலேயே கலைகள் 64 என்று கூறிய வகைப்பாடு இருந்துள்ளது. நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களும் சரி; இலக்கணங்களும் சரி; அதனை உறுதிப்படுத்துகின்றன. மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக இவை இருக்கின்றன. கலைகள் மூலமாக பொருளாதார சமூகப் பின்னணியையும் அறிந்துகொள்ள முடிகின்றது. பல்வேறு கலைகள் இருப்பினும் மிக முக்கியமான கலை மொழி என்று நாம் சொல்லலாம். அதன் வளர்ச்சியாக பேச்சுக்கலை, எழுத்துக்கலைஇப்படி ஒவ்வொன்றாக நாம் அடுக்கிக்கொண்டே…

Read More
kan-theriyaatha-isaingyan-nalla-nilam_FrontImage_668 கட்டுரை 

மகிழ்ச்சியின் ஊற்று – பாவண்ணன்

லியோ தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, மக்சீம் கார்க்கி போன்றோர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ரஷ்ய மொழியில் எழுதிய மற்றொரு முக்கிய எழுத்தாளர் விளாதிமிர் கொரலேன்கோ. அவர் 15-07-1853 அன்று உக்ரைனில் தென் மேற்குப் பகுதியிலுள்ள ஜித்தோமிர் என்ற சிறு நகரத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் வழக்கறிஞர். ஆனால் கொரலேன்கோ தன் சிறுவயதிலேயே அவரை இழந்துவிட்டார். ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தை நடத்திச் செல்ல கொரலேன்கோவின் தாயார் மிகவும் சிரமப்பட்டார். பசியும் பட்டினியுமாக நாட்கள் கழிந்தன. அச்சூழலில் கொரலேன்கோவால் தன் கல்வியைச் சரியாகத் தொடரமுடியவில்லை. இருபது வயதிலேயே கல்லூரியிலிருந்து விலகிவிட்டார். கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்துக்குத் துணையாக இருந்தார். கொரலேன்கோ தொடக்கத்தில் ஒரு பத்திரிகையில் பிழை திருத்துபவராக சிறிது காலம் வேலை செய்தார். அந்தப் பத்திரிகை சர்வாதிகாரத்தை எதிர்த்து புரட்சிகர இளைஞர்களைப்பற்றிய செய்தியை வெளியிட்டது என்னும் காரணத்துக்காக காவல்துறையின் தொல்லைக்கு ஆளானது….

Read More
Ruskin Pande நேர்காணல் 

குழந்தைகளின் ரசனை ஒரு சமூகக் குறியீடு – ரஸ்கின் பாண்ட்

இந்தியாவின் தலைசிறந்த சிறார் இலக்கியப் படைப்பாளியான ரஸ்கின் பாண்ட் 1934ல் ஒரு பிரித்தானிய விமானப்படை அதிகாரிக்கு பஞ்சாபில் பிறந்தார். தனது பத்து வயதில் தந்தையை இழந்த அவர் சிம்லாவில் பிஷப் காட்டன் பள்ளி விடுதியில் வளர்ந்து சிறுவயதிலிருந்தே எழுத தொடங்கினார். தான் ஓர் இந்தியர் என்பதில் பெருமிதம் கொண்டவர். தன் பதினாறாவது வயதில் இர்வின் டிவினிட்டி இலக்கியப் பரிசு பெற்றவர். சிறார்களுக்கான இவரது ரஸ்டி கதாபாத்திரம் மிகப் பிரபலம். எ பிளைட் ஆஃப் பிஜியான்ஸ், எ ரூம் ஆன் தி ரூஃப் உட்பட சிறார்களுக்கான 50 நூல்களின் ஆசிரியர். 1992ல் சாகித்ய அகாடமி விருதும், 1999ல் பத்மஸ்ரீ, மற்றும் 2014ல் பத்ம பூஷண் விருதும் பெற்றார். ஏகலைவா பதிப்பகத்திற்காக அவர் அளித்த பிரத்யேக நேர்காணல். நன்றி: www.ekalvya.com சந்திப்பு: அரவிந்தன் தமிழில்: ஆயிஷா இரா. நடராசன். கேள்வி:…

Read More

வாசிப்பாயா… ஆயிஷா இரா.நடராசன்

அன்பார்ந்த குட்டி நண்பர்களே நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்கற் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? நீங்கள் நிறைய புத்தகங்களை வாசிக்கிறீர்கள் என்று அர்த்தம். – ஜவஹர்லால் நேரு (சுதந்திரதின உரை. 1959) 1. அற்புத உலகில் ஆலிஸ் (Alice’s Adventures in wonder land) உங்களுக்குத் தெரியுமா?? முயல்கள் பூமிக்கு சற்று கீழே பொந்துகளில் தான் வசிக்கின்றன. உங்களைப் போல எட்டு வயது சிறுமி ஆலிஸ் தன் உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றபோது தான் அந்த அதிசயம் நடக்கிறது. புத்தாடைகள் உடுத்திய முயல் ஒன்று அவசரமாக ஒரு பொந்தில் ஓடி மறைவதைப் பார்த்தாள் ஆலிஸ். அவள் பொந்தில் எட்டிப் பார்த்து இறங்கிட முயற்சி அவ்வளவுதான்.. விழுந்தாள் விழுந்தாள்… விழுந்துகொண்டே இருந்தாள் அவள். பல மைல் ஆழம் கொண்ட குழி அது. பொத்தென்று போய் விழுந்தாள். என்ன அதிசயம்! அடி…

Read More
Sa Kandasamy கட்டுரை 

ஏன் நவீன இலக்கியம் அறியப்படுவதில்லை – சா. கந்தசாமி

கவிஞர்கள், நாவலாசிரியர்கள், சிறுகதை நாடக ஆசிரியர்கள் தம் படைப்புகள் வழியாக நூறு, நூற்று ஐம்பதாண்டுகள் முன்னே இருக்கிறார்கள். அவர்கள் எழுதும் மொழியின் சொற்கள்தாம் நிகழ்காலத்தினுடையதாக இருக்கின்றன. ஆனால் படைப்பு என்பது மொழி வழியாகவே மொழியைக் கடந்து விடுகிறது. படைப்பாளர்கள் தங்களுக்கென்று ஒரு தனி மொழியை உருவாக்கிக் கொண்டு விடுகிறார்கள். அது எப்பொழுதும் வாழும் மொழியாக உயிர்ப்புடன் இருக்கிறது. எழுதப்பட்ட மொழியில்தான் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதில்லை; எம்மொழியில் மொழி பெயர்த்தாலும் அது உயிரோடு இருக்கிறது. ஓர் படைப்பு என்பது அசலாக இருக்கும் வரையில் எழுதப்பட்ட மொழி; காலம் படைப்பாளன் வாழ்க்கை என்பதெல்லாம் இல்லாமல் போய்விடுகிறது. எனவேதான் அது எழுதப்பட்டக் காலத்தில் அதிகமாக அறியப்படாமல் போய் விடுகிறது. ஆகையால் படைப்புக் கலைஞன் முன்னே இருக்கிறான் என்று சொல்லப்படுகிறது. இலக்கிய உரையாசிரியர்கள், நவீன இலக்கிய விமர்சகர்கள் எல்லாரும் இருநூறு முன்னூறு ஆண்டுகள்…

Read More
ivan-turgenev கட்டுரை 

ரஷ்யாவின் கே.ராமச்சந்திரன் – ச.சுப்பாராவ்

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், இருபது கிராமங்கள், ஐயாயிரம் அடிமைகள் கொண்ட ஒரு சிற்றரசியின் மகன் அவர். அந்த சிற்றரசிற்கு வேண்டிய அனைத்தும் அங்கேயே உற்பத்தி செய்யப்பட்டன. தனியாக மருத்துவர்கள் இருந்தார்கள். அரண்மனையில் ஒரு இசைக் குழுவும், நாடகக் குழுவும் இருந்தன. சிற்றரசி தனது தர்பாரில் அமர்ந்து ஆட்சிசெய்தாள். ஒரு எளிய போர்வீரனை அவனது அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டு அரண்மனை மாப்பிள்ளையாக வைத்துக் கொண்டாள். அவரும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு பொழுதுபோகாத நேரத்தில் அடிமைப் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருந்தார். அடிமைகள் சிற்றரசியின் உத்தரவில்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. உத்தரவின்றி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. நாய் வளர்க்க முடியாது. அவள் உத்தரவின் பேரில் பெற்ற குழந்தையும் பிறந்தவுடன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு விடும். அவளது சிற்றரசிற்குள் போலீஸ் வரக்கூடாது. அனுமதி பெற்று போலீஸ் கமிஷனர் மட்டும்…

Read More

வாசிப்பை வசப்படுத்தும் மாணவனே… வாழ்வு வளமாகும்

வாசிப்பை வசப்படுத்தும் மாணவனே… வாழ்வு வளமாகும். இன்று கல்வியின் முகம் மாறி இருக்கிறது. ஆனால் இதை உணர்ந்தவர் சிலரே. இருபத்தோராம் நூற்றாண்டுக்கான கல்வி குறித்து பேசும் யுனெஸ்கோவின் கல்வி ஆவணம். படித்தல், எழுதுதல் மற்றும் கணக்கிடுதல் (Reading, Writing and Arithmetic) எனும் பழைய அடிப்படையை பின்னுக்கு நகர்த்தி, கற்றலின் நோக்கம், அறிந்து கொள்ள கற்றல் (Learing to Do) மாற்றங்களில் நிலை கொள்ள (Learning to Be) மற்றும் ஒன்று கூடி வாழ கற்றல் (Learning to Live together) என்று அறிவித்துள்ளது. படைப்பாக்கம், சுய சிந்தனை, தலைமைப் பண்பு, தகவல் பரிமாற்றம், சுய சார்பு, மாற்று கலாச்சாரங்களை அறிதல் போன்ற பண்புகளை வளர்க்கவே கல்வி என அது கல்வியின் நோக்கங்களை வரையறுக்கிறது. 1996ன் டெலார் கமிட்டி அறிக்கை திறன்களின் (Competencies) அடிப்படையில் 21ம் நூற்றாண்டு…

Read More