You are here
சமூக உணர்வுடன் கூடிய படைப்புகளே தற்போதைய தேவை நிகழ்வு 

சமூக உணர்வுடன் கூடிய படைப்புகளே தற்போதைய தேவை

சமூக உணர்வுடன் கூடிய படைப்புகளை கொண்டு வருமாறு படைப் பாளிகளுக்கும், பதிப்பாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இளங்கோ சாலையில், புத்தகங்களுடன் புத்தாண்டு கொண் டாட்டத்திற்கு பாரதி புத்தகாலயம் ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் யூமா வாசுகியை ஜி.ராமகிருஷ்ணன் கவுரவித்தார். பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதி, பத்திரிகையாளர் அ.குமரேசன் மொழிபெயர்த்த “மூலதனம் நூலை எதற்காகப் படிக்க வேண்டும்?” என்ற சிறுநூலையும் வெளியிட்டார்.இந்நிகழ்வில் பேசிய ராமகிருஷ்ணன், “நம் முன்னோர்கள் நமக்கு அளித்த சமூகத்தை விட, சிறந்த சமூகத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் தர வேண்டும்.அதற்கான சிந்தனையை, சமூக மாற்றத் திற்கு பாடுபடக்கூடிய உணர்வை இந்தத்தலைமுறைக்கு ஊட்ட வேண்டும். அந்த வகையில் படைப்பாளிகள் படைப்புகளையும், பதிப்பகங்கள் புத்தகங்களையும் கொண்டு வரவேண்டும்” என்றார். கவிஞர் ஈரோடு தமிழன்பன்…

Read More
மறுசுழற்சி செய்! பயன்படுத்து! வீணாக்காதே! நிகழ்வு 

மறுசுழற்சி செய்! பயன்படுத்து! வீணாக்காதே! – பொன். தனசேகரன்

பழைய காகிதம், பாட்டில்கள், தீக்குச்சி, நூல், ஸ்ட்ரா, வால் டியூப், போன்று நம்மால் தூக்கி எறியப்படும் சாதாரணப் பொருள்களிலிருந்து அறிவியல் விளையாட்டுப் பொருட்களை உருவாக்கி அதனைப் பள்ளிக் குழந்தைகளிடம் பிரபலப்படுத்தி அவர்களுக்கு அறிவியல் பாடங்களில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறார் கான்பூர் ஐஐடி முன்னாள் மாணவர் அரவிந்த் குப்தா. ஒரு நாள் புத்தர் மடாலயத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.  “எனக்கு புதிய போர்வை வேண்டும்” என்றார் சீடர் ஒருவர். “உனது பழைய போர்வை என்ன ஆனது” என்று கேட்டார் புத்தர். “அது பழையதாகி நைந்து போய்விட்டது. அதனால் அதனை தற்போது விரிக்கப் பயன்படுத்துகிறேன்.” என்றார் சீடர். புத்தர் மீண்டும் கேட்டார். “உனது பழைய விரிப்பு என்ன ஆனது?” “விரிப்பு பழையதாகி விட்டதால், நைந்து போய்விட்டது. எனவே, அதை வெட்டி தலையணை உறையாகப் பயன்படுத்தி வருகிறேன்” இது சீடரின் பதில். …

Read More
vaskodakama கட்டுரை 

வாஸ்கோடகாமா – மயிலம் இளமுருகு

பூமியில் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் மற்றொரு பகுதியில் வாழ்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் தொடக்க காலத்தில் ஆர்வமற்று இருந்தனர். காலப்போக்கில் நாம் இந்த நாட்டில் வாழ்வதைப் போன்றே வேறொரு நாட்டிலும் மக்கள் இருப்பார்களோ என்ற ஆவல் தோன்றியது. அதன் காரணமாக பிற நாடுகளைக் கண்டறிவதில் விருப்பம் காட்டினர்.மட்டுமன்றி வியாபாரத்திற்காகவும் மற்ற நாடுகளைக் கண்டறிவதில் முனைந்தனர். அதில் நாடுகளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு நாட்டினருக்கும் போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் வேட்டை எஸ்.கண்ணன் அவர்கள் தொடக்ககால பயணம், மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி அதனூடாகப் உலகச் சந்தை தோற்றம் போன்றவற்றை சுருக்கமாக கூறியுள்ளார். பிறகு தான் எடுத்துக் கொண்ட பொருளான வாஸ்கோடகாமா குறித்தும் அவருடைய கடற்பயணம் பற்றியும் விரிவாகச் சொல்லியுள்ளார். சிறந்த மொழியியலாளர் சாம்ஸ்கி கூறியுள்ள கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். இப்போது நடப்பது கலாச்சாரங்களின் போர் என்று சொல்லியுள்ளவை சிந்திக்கத்தக்கவை….

Read More
mirdad-book மற்றவை 

சிந்தனை உலகில் முதலும் முடிவுமான ஞானநூல் – கவிஞர் புவியரசு

மிகெய்ல் நைமியின்      மிர்தாதின் புத்தகம் உலக ஞான நூல்களில் தலை சிறந்ததான இந்தப் படைப்பின் பெயரே, ‘மிர்தாதின் புத்தகம்தான். பத்தாண்டுகளுக்கு மேலாக, வெளிவந்த நாளிலிருந்து அடக்கமான அலையடிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்தப் படைப்பிற்கு மேலான நூல் இல்லை என்கிறார் ஓஷோ. நீண்ட ஞான தாகம் கொண்டவர்களின் தவிப்பை நிரந்தரமாகப் போக்கவல்ல சிந்தனைக் களஞ்சியம் இது.  உலகின் படைப்பாளிகள் அனைவரும் தமது மனதின் அடியாழத்தைப் படம் பிடித்துக் காட்டவே ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் தோற்றுப் போனார்கள். இவன் ஒருவன் மட்டுமே அதில் வெற்றி பெற்றான் என்கிறார் ஓஷோ. இந்த மகத்தான நூலைப் படைத்தது, எந்த இந்திய மகரிஷியும் அல்ல. இதன் ஆசிரியர் ‘மிகெல் நையி’ இவர் லெபனான் நாட்டுக்காரர்! கலீல் ஜிப்ரானின் அருமை நண்பர். ஜிப்ரானின் உழைத்தவர். நைமியின் உறவு இல்லாமற் போயிருந்தால் அவன் எப்போதோ…

Read More
Avalagal Kurithu நூல் அறிமுகம் 

அவலங்கள் நூல் குறித்து – சம்சுதின் ஹீரா

சரியான தருணத்தில் பேசப்படாத உண்மைகள், பொய்களை மட்டுமல்ல பேரழிவையும் ஏற்படுத்தி விடுகின்றன.. ஒர் எழுத்தாளன் என்பவன் ஒரு சமூகம் சொல்லத் தயங்கி நிற்கும் பொருளை, அந்தச் சமூகத்தை நோக்கி, சமூகத்தின் சார்பாக, சமூகத்தின் குரலாகப் பேசவேண்டுமென்பார் ச.தமிழ்ச்செல்வன். நீண்ட நெடிய ஈழ விடுதலைப் போராட்டம் உச்சத்திலிருந்த காலத்தையும் அது வீழ்ச்சியடைந்த காலத்தையும் எவ்வளவோ இலக்கியங்கள் இரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவற்றில் பெரும்பாலான இலக்கியங்கள் நாயக பிம்பங்களைக் கட்டமைக்கவோ அல்லது ஏற்கனவே கட்டிவைக்கப்பட்டிருந்த புனித பிம்பங்களின் மீது சிறு கீரலும் விழாதவாறு கவனமாகப் பூசி மொழுகவோதான் செய்தன. அவற்றிலெல்லாம் பேசப்படாத நுண்ணரசியலை, தற்போதைய இளைய தலைமுறைப் படைப்பாளிகளின் நவீன இலக்கியங்கள், மக்களின் குரலில் உரக்கப் பேசத்துவங்கியிருக்கின்றன. இப்போக்கானது ஈழ இலக்கியங்களில் ஆரோக்கியமான முன்னெடுப்பையும் காத்திரமான விவாதங்களையும் வலுவாகக் கோரி நிற்கின்றன. இலக்கியங்கள் என்பவை சமூகத்தின்…

Read More
enna_padikalam_puthiyana_virumbu நூல் அறிமுகம் 

புதியன விரும்பு – மாலன்

இப்போதெல்லாம் வீடுகளில் , குறிப்பாக நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களில், அதிகம் விவாதிக்கப்படுவது அரசியல் அல்ல. அன்றாடச் செய்திகள் அல்ல.வாரப் பத்திரிகைகளில் வெளியாகும் தொடர்கதைகளோ, தொலைக்காட்சித் தொடர்களோ அல்ல. ஏன் சினிமாக்கள் கூட அதிகம் இல்லை எனச் சொல்லி விடலாம். அவர்கள் பின் எதைப் பற்றித்தான் பேசுகிறார்கள்? இப்போதெல்லாம் +2 தேர்வுகள் முடிவுகள் வெளியாகும் போது 95% சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்கள் கூட மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதில்லை. நிறையப் பேர் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறார்களே, கட் ஆப் எப்படி உயரும், நம் எதிர்காலம் என்னாகும் என்ற கவலையைச் சுமந்து கொண்டுதான் உலவுகிறார்கள் இப்போதெல்லாம் பொறியியல் கலந்தாய்வுக்கு இரண்டாம் வாரம் அழைக்கப்படும் மாணவர் கூட சற்றே துவண்டுதான் நடக்கிறான். அவன் மனம் நமக்கு நல்ல கல்லூரி கிடைக்க வேண்டுமே என்று சதா பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறது மாணவர்கள் நிலை…

Read More
Melapalayam நூல் அறிமுகம் 

மேலப்பாளையம்: ஊரின் திருப்பெயரால்… – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

கிச்சான புகாரி மற்றும் அவரது நண்பர்கள் சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை சங்கிலியால் பிணைத்து, தெருவில் அழைத்துச்செல்லும் போது இந்து ஆலயங்களுக்கு முன்னால் விழுந்து வணங்கச்சொல்லி அடித்தது காவல்துறை. “நாகர்கோவில் செல்ல பேருந்துக்காக நின்றிருந்த என்னை பெயர் மற்றும் ஊர் கேட்டதும், அடித்து ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்று “அல் – உம்மா தீவிரவாதியா நீ, துலுக்கப்பயலே, மாட்டுக்கறி தின்னு உங்களுக்கெல்லாம் கொழுப்பு அதிகமாயிடுச்சுடா” என அடித்து நொறுக்கினர்” – அப்துல்லாஹ் (வயது 24) “சித்தரஞ்சன்னு ஒரு ஆய்வாளர். எங்கள் ஊர் முஸ்லிம் சிறுவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச்செல்வார். குண்டு கேஸ் போடாம இருக்கனும்னா 10,000 பணம் கொடுங்கன்னு மிரட்டுவார். பணம் இல்லை என்றால் தீவிரவாத வழக்கு போடுவார்” – முத்து வாப்பா. “வேலைக்கு போக நின்ன என்ன பிடிச்சிகிட்டு போயி…

Read More