You are here
சமூக உணர்வுடன் கூடிய படைப்புகளே தற்போதைய தேவை நிகழ்வு 

சமூக உணர்வுடன் கூடிய படைப்புகளே தற்போதைய தேவை

சமூக உணர்வுடன் கூடிய படைப்புகளை கொண்டு வருமாறு படைப் பாளிகளுக்கும், பதிப்பாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இளங்கோ சாலையில், புத்தகங்களுடன் புத்தாண்டு கொண் டாட்டத்திற்கு பாரதி புத்தகாலயம் ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் யூமா வாசுகியை ஜி.ராமகிருஷ்ணன் கவுரவித்தார். பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதி, பத்திரிகையாளர் அ.குமரேசன் மொழிபெயர்த்த “மூலதனம் நூலை எதற்காகப் படிக்க வேண்டும்?” என்ற சிறுநூலையும் வெளியிட்டார்.இந்நிகழ்வில் பேசிய ராமகிருஷ்ணன், “நம் முன்னோர்கள் நமக்கு அளித்த சமூகத்தை விட, சிறந்த சமூகத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் தர வேண்டும்.அதற்கான சிந்தனையை, சமூக மாற்றத் திற்கு பாடுபடக்கூடிய உணர்வை இந்தத்தலைமுறைக்கு ஊட்ட வேண்டும். அந்த வகையில் படைப்பாளிகள் படைப்புகளையும், பதிப்பகங்கள் புத்தகங்களையும் கொண்டு வரவேண்டும்” என்றார். கவிஞர் ஈரோடு தமிழன்பன்…

Read More
மறுசுழற்சி செய்! பயன்படுத்து! வீணாக்காதே! நிகழ்வு 

மறுசுழற்சி செய்! பயன்படுத்து! வீணாக்காதே! – பொன். தனசேகரன்

பழைய காகிதம், பாட்டில்கள், தீக்குச்சி, நூல், ஸ்ட்ரா, வால் டியூப், போன்று நம்மால் தூக்கி எறியப்படும் சாதாரணப் பொருள்களிலிருந்து அறிவியல் விளையாட்டுப் பொருட்களை உருவாக்கி அதனைப் பள்ளிக் குழந்தைகளிடம் பிரபலப்படுத்தி அவர்களுக்கு அறிவியல் பாடங்களில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறார் கான்பூர் ஐஐடி முன்னாள் மாணவர் அரவிந்த் குப்தா. ஒரு நாள் புத்தர் மடாலயத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.  “எனக்கு புதிய போர்வை வேண்டும்” என்றார் சீடர் ஒருவர். “உனது பழைய போர்வை என்ன ஆனது” என்று கேட்டார் புத்தர். “அது பழையதாகி நைந்து போய்விட்டது. அதனால் அதனை தற்போது விரிக்கப் பயன்படுத்துகிறேன்.” என்றார் சீடர். புத்தர் மீண்டும் கேட்டார். “உனது பழைய விரிப்பு என்ன ஆனது?” “விரிப்பு பழையதாகி விட்டதால், நைந்து போய்விட்டது. எனவே, அதை வெட்டி தலையணை உறையாகப் பயன்படுத்தி வருகிறேன்” இது சீடரின் பதில். …

Read More
Yuma Vasugi மற்றவை 

விருது பெறுகிறார் யூமா வாசுகி – சா. கந்தசாமி

இந்திய அரசு இருபத்திரண்டு மொழிகளை இந்திய மொழிகள் என்று அங்கீகாரம் செய்துள்ளது. அரசியல் சாசன அங்கீகாரம் இல்லாத ஆங்கிலம், ராஜஸ்தானி மொழிகளையும் சேர்த்துக் கொண்டு சாகித்ய அகாதமி இலக்கியப் பரிசு. மொழிபெயர்ப்பு பரிசுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தமிழ் மொழி பெயர்ப்புக்காகப் பரிசு பெறும் மொழி பெயர்ப்பாளர் மாரிமுத்து என்ற இயற்பெயர் கொண்ட யூமா வாசுகி. அவர் படைப்பு எழுத்தாளர். ரத்த உறவு என்று நாவல் எழுதி பரவலாக மதிக்கப்படுகிறவர். கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் படித்து பட்டம் வாங்கியவர். பத்தாண்டுகளுக்கு மேலாக மலையாளத்தில் இருந்து சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் கதைகள் என்று பலவற்றையும் மொழி பெயர்த்து வருகிறார். கஸாக்கின் இதிகாசம் என்று மலையாள மொழியில் ஓ.வி. விஜயன் எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாதமி மொழி பெயர்ப்பாளர் விருதை பெறுகிறார்….

Read More
அந்தோன் மகரெங்கோவை மற்றவை 

அறிந்து கொள்வோம் அந்தோன் மகரெங்கோவை – அன்வர்

“நீங்கள் வியப்பூட்டும் மனிதர்” அந்தோன் மகரெங்கோவுக்கு மனம் திறந்து எழுதினார் மக்சீம் கார்க்கி. மகரெங்கோ சிறந்த போதனை இயல் நிபுணர். போர், வறுமை போன்ற இடிபாடுகளுக்கிடையே புதிய சோவியத் ருஷ்யாவை நிர்மாணித்தவர்களில் ஒருவராக விளங்கினார். மிக மிகக் கடினமான காலகட்டத்தில் மனத்தெளிவுடன் பணியாற்றி நூற்றுக்கணக்கான அகதிச் சிறுவர் சிறுமியரின் உள்ளங்களில் அவர்கள் இழந்துவிட்ட மனித நம்பிக்கையை மீண்டும் தளிர்க்கச் செய்தார். அவர் அற்புதமான எழுத்தாளர், ‘வாழ்க்கைப் பாதை’ என்ற அனுபவநயம் சொட்டும் கல்விக் காவியத்தை இயற்றியவர். புது மனிதனை உருவாக்கும் முயற்சியின் மாண்பைத் தெளிவாக்கியவர். 1905-1907ல் நடந்த முதலாவது ருஷ்யப் புரட்சியின் பாதிப்பினால் இளைஞர் மகரெங்கோவின் உலகக் கண்ணோட்டமும், போதனை இயல் கருத்துகளும் மிக விரிவடைந்திருந்தன. தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த இந்த இளைஞரை மக்சீம் கார்க்கியின் எழுத்துகள் வெகுவாகப் பாதித்திருந்தன. மார்க்சீயப் பிரபஞ்ச உணர்வுடனும் தெளிந்த…

Read More