மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு!

உலகெங்கும் பல இடங்களில் குண்டுகள் வீசப்படுவதாக நாம் தினமும் படிக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் இப்படி குண்டு வீசப்பட்டது இதுதான் முதல் தடவை. இந்த குண்டு எட்டு மணி நேர வேலை இயக்கத்திற்கு எந்த வகையிலும் உதவவில்லை. உண்மையில் அது முதலாளிகளாலும், செய்தித்தாள்களாலும் தொழிலாளர் இயக்கத்தையும், குறைந்த வேலை நேரப் போராட்டத்தையும் அழிக்கப் பயன்படுத்தப்பட்டது. மறுநாள் காலை, மே 5 புதனன்று, கார்ட்டர் ஹாரிசனே ‘ராணுவச் சட்டத்தைப்’ பிரகடனப்படுத்த நேர்ந்தது. ‘சட்டம் ஒழுங்கு’ பிரச்சனையில் மென்மையாக நடந்து கொள்வதாகத் தோற்றமளித்துவிடக் கூடாது என்பதற்காக பல வாரங்கள் அவர் போன்ஃபீல்டுடனும், முதலாளிகளுடனும் உடன்பட்டுச் செல்ல நேர்ந்தது.

Read More