You are here
Ko Veeraiyan அஞ்சலி 

‘செங்கொடி நெஞ்சம்’ – தோழர் கோ.வீரய்யன் – ச. தமிழ்ச்செல்வன்

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் ஒப்பற்ற பொதுவுடமை இயக்கத்தலைவர் தோழர் கோ.வீரய்யன் அவர்களின் மறைவு, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும்,விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். காவிரியின் கடைமடைப் பகுதியான நன்னிலம் வட்டத்தில் உள்ள சிற்றூரான சித்தாடியில் 1932ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் பிறந்தவர் தோழர் கோ.வீரய்யன்.அருகமைப்பள்ளி ஏதும் இல்லாத காரணத்தால் பள்ளிப்படிப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. உள்ளூர் படிப்பாளி ஒருவரிடம் சில காலமும் திண்ணைப்பள்ளியில் இரண்டு ஆண்டுகாலமும் அவருக்குக் கிடைத்ததுதான் கல்வி.பகலில் மாடு மேய்த்து,குளிப்பாட்டி,மாலையில் தீனி வைத்து,மாட்டுக்கொட்டில் வேலைகளையெல்லாம் முடித்த பிறகு இரவில் திண்ணைப்பள்ளியில் படிப்பார்.அந்தக் கல்வியை வைத்துக்கொண்டுதான் அவர் இத்தனை நூல்களையும் பின்னர் எழுதியுள்ளார் என்பது மலைக்க வைக்கும் செய்தியாகும். எட்டு வயதிலிருந்து மாடுகளை மேய்த்துப் பரமாரித்து வந்த வீரய்யன்,பத்து வயதில் பண்ணை வயலில் அரையாளாக வேலை செய்யத்துவங்கினார். 12 வயதில் ஊருக்கு குடிதண்ணீர் கிணறு…

Read More
Muthusamy Image அஞ்சலி 

கூத்தின் ஞானரதம் – ச. தமிழ்ச்செல்வன்

1936ஆம் ஆண்டு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாயவரம் அருகிலுள்ள புஞ்சை கிராமத்தில் பிறந்தவர் பத்மஸ்ரீ ந.முத்துசாமி..இரண்டாமாண்டு இண்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது படிப்பைத் தொடராமல் சென்னைக்கு வந்துவிட்டார். வெங்கடரங்கம்பிள்ளை தெருவுக்கு அருகிலிருந்த மீனவர் குப்பத்தில் வசித்து வந்தார்.பக்கத்தில் விக்டோரியா ஹாஸ்டலில் தங்கி பிரஸிடன்ஸி கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்த கவிஞர் சி.மணியுடன் நட்புக்கொண்டு இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். சி.சு.செல்லப்பாவின் ’எழுத்து’ இதழே அவருக்கு இலக்கிய ஆசான் என்று அவரே குறிப்பிடுவார். “’எழுத்து’ஒரு லட்சியமாக இருந்தது.’எழுத்து’வின் புதுக்கவிதைகள் லட்சியமாக இருந்தன.புதுக்கவிதைக்கு எதிர்ப்புத் தெரிவிப்போருக்கு எதிராக ஆயுதம் பூண்டு யுத்தத்துக்குத் தயாராக இருப்பவனைப்போல,மன ஆயத்தநிலை கொண்டிருந்தது.சி.சு.செல்லப்பா என்ற தளபதிக்குப் பின்னே அணிவகுத்து நிற்பதைப்போல இருந்தது.சி.சு.செல்லப்பாவிடம் கேட்ட கதை விமர்சனங்கள் ,அவர் எழுதியதைப் படித்ததை விட நேரில் சொல்லக்கேட்ட விமர்சனங்கள் என்னை மெல்ல மெல்லத் தயாரித்துக்கொண்டு வந்திருந்தன” அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு க.நா.சுப்பிரமணியனிடம் முன்னுரை…

Read More
iravatham-mahadevan அஞ்சலி 

‘தமிழ் எழுத்துள்ளவரை இறப்பில்லை’ – ஐராவதம் மகாதேவன் – சுந்தர் கணேசன்

நானும் எனது மனைவியும் ஐராவதம் மகாதேவன் அவர்களைக் காண கடந்த 25ஆம் தேதி அவர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அவரால் பேச இயலவில்லை. எங்கள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். சைகையால் ஒரு வெள்ளை அட்டையைக் கேட்டார். அதில் “When shall I die? I. M”. (நான் என்று இறக்க வேண்டும்) என எழுதினார். பின் 26.11.2018 என தேதியைக் குறிப்பிட்டார். அந்த அட்டையை என்னிடம் காண்பித்துவிட்டு தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு எங்களைக் கையசைத்து வழி அனுப்பி வைத்தார். 12 மணி நேரம் கழித்து 26 ஆம் தேதி காலை இறந்து போனார். F.W.எல்லீஸ், ராபர்ட் சீவல் போன்ற அரசு அதிகாரிகளும் ஆராய்ச்சியாளர்களுமாக இருந்தவர்கள் வரிசையில் மகாதேவனும் இடம் பெறுவார். மகாதேவனின் தமிழ் பிராமி, சிந்துவெளி குறியீட்டு ஆராய்ச்சிகள் திராவிடவியல் ஆராய்ச்சிக்கான மிகப்பெரிய ஆய்வுக் களஞ்சியங்களாகவும் முதன்மை ஆதார…

Read More
Naan Oru Troll கட்டுரை 

பிஜேபியின் டிஜிட்டல் ராணுவம்: இணையத்தில் விரிந்திருக்கும் விஷ சிலந்தி வலை – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

இரண்டாண்டுகால ஆய்வின் அடிப்படையில் புலனாய்வு நிருபர் ஸ்வாதி சதுர்வேதியின் கடுமையான உழைப்பில் உருவான “நான் ஒரு ட்ரால் − பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகுக்குள்ளே” என்ற புத்தகம் இன்றைய சூழலில் அனைவரிடமும் செல்லவேண்டிய புத்தகம். ஆனால் சமூக வலைதளங்களில் இல்லாதவர்களுக்கு நிச்சயம் இந்தப் புத்தகம் புரியாது. சமூக வலைதளங்களில் செயல்படும் யாரும் இந்தப் புத்தகத்தைப் படித்தால் அதிர்ந்துதான்போவார்கள். ஏனெனில் இந்த நூலில் சொல்லப்படும் தாக்குதலுக்கு நிச்சயம் எல்லாரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் சமூக வலைதளத்தில் தங்கள் சித்தாந்தத்தை நிலைநிறுத்த தர்க்கங்களோடு, ஆதாரங்களோடு அறிவுபூர்வமாக விவாதிப்பது ஒரு முறை. ஆனால் தங்கள் கருத்துகளுக்கு எதிரானவர்களை விரட்டவேண்டும் எனத் திட்டமிட்டு பொய்க் கணக்குகளை துவக்கி ஆபாசமாக, அருவருக்கும் முறையில் தனிநபர் தாக்குதலில் இறங்குவது இரண்டாவது முறை. இதில் கைதேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இதை ஒரு பிரும்மாண்டமான…

Read More
Pavannan Book கட்டுரை 

பொல்லாச் சூழ்ச்சியின் புற்றுகள் – பாவண்ணன்

சங்கப்பாடல்களை எடுத்துக்காட்டாகச் சொல்லி பேசாதவர்களோ, பெருமைப்படாதவர்களோ தமிழ்ச்சூழலில் இல்லை. அந்த அளவுக்கு அவற்றின் அறிமுகம் வேரூன்றியிருக்கிறது. அவை கருத்தாழம் கொண்டவை. காலத்தால் மிகவும் பழைமை வாய்ந்தவை. அப்பாடல்களில் அமைந்திருக்கும் நயங்களை எளிய வாசிப்புப்பழக்கம் கொண்டவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இதுவரை ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பல மேடைகளில் அவை மீண்டும் மீண்டும் முழங்கப்பட்டுள்ளன. பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். சங்ககாலத்தில் தாவரங்கள், சங்ககாலத்தில் விலங்குகள், சங்ககாலத்தில் போர்கள் என ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை சங்ககாலத்தைப் பின்னணியாகக் கொண்டு தமிழில் யாரும் ஒரு நாவலை எழுத முயற்சி செய்ததில்லை. ஜெயமோகன் எழுதிய கொற்றவை நாவல் சங்ககாலத்துக்கும் முந்தைய பண்பாட்டுக்கூறுகளை பல கோணங்களில் தொகுத்தளிக்கும் முயற்சியை முன்னெடுத்த முக்கியமான படைப்பு. இப்படிப்பட்ட சூழலில் மனோஜ் குரூர் என்னும் மலையாள நாவலாசிரியர் சங்ககாலத்தைக் களமாகக் கொண்டு சில ஆண்டுகளுக்கு…

Read More
Book release நிகழ்வு 

சர்க்யூட் தமிழனுக்கு ஒரு சல்யூட் – வை. இராஜசேகர்

கடலூர் புத்தகத் திருவிழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ‘சர்க்யூட் தமிழன்’ நூலை வெளியிட்டபோது என் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் தொடராக எழுதிய, என் இனிய இயந்திரா நான் படித்த முதல் அறிவியல் புனை கதை (Science Fiction) ஆங்கிலத்தில் எச்.ஜி.வெல்ஸ், ஜூல்ஸ் வெர்ன், தொடங்கி, ஐசக் அஸிமவ், ஆர்தர் சி.கிளார்க் முதலாக பற்பல அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் எண்ணற்ற படைப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். என்றாலும் மொழிபெயர்ப்புகளை தவிர்த்து பார்த்தால் தமிழில் அறிவியல் புனைகதைகள் என்பவை குறைவாகவே உள்ளன. இக்குறையை முதலில் நீக்கியது எழுத்தாளர் சுஜாதா அவர்களே. எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்து அவ்வழியில் 21ம் நூற்றாண்டில் நமக்கு கிடைத்துள்ள முத்து பிரபல எழுத்தாளர் ஆயிஷா. இரா.நடராசன் அவர்கள். இவருடைய ஆயிஷா என்ற குறுநாவலை 1996 ஆம் ஆண்டு கணையாழியிலேயே படித்திருந்தேன். இந்நூலை இருபதிற்கும் மேற்பட்ட…

Read More
WOLF GANG STREECK 2 நேர்காணல் 

மார்க்ஸின் எழுத்துகள் – நேர்காணல் – தமிழில் : கமலாலயன்

முன் எப்போதையும் விட இன்றுதான் அதிகமாகப் பொருந்துகின்றன – வுல்ஃப்காங் ஸ்ட்ரீக் நேர்காணல் : ஜிப்சன் ஜான் மற்றும் ஜித்தீஷ் பி.எம். புதிய தாராளமயவாத முதலாளித்துவத்தை விமர்சனம் செய்யும் உலகின் முன்னணி விமர்சகர்களுள் வுல்ப்காங் ஸ்ட்ரீக்கும் ஒருவர். ‘நியு லெப்ட் ரெவ்யு’-இதழுக்காக 2014-இல் இவர் எழுதிய ‘முதலாளித்துவம் எப்படி முடிவுக்கு வரும் ?’ என்ற கட்டுரைக்காக சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டவர். இக்கட்டுரை மிக அதிக அளவில் விவாதிக்கப்பட்டபின், புத்தக வடிவிலும் வெளியானது. முதலாளித்துவத்தின் தற்போதைய செல்நெறித் தடத்தை மிக ஆழ்ந்த கவனத்துடன் பகுப்பாய்வு செய்து வருகிறவரான ஸ்ட்ரீக், “ஜனநாயகத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையே நடைபெற்ற திருமணம், இரண்டாம் உலகப் போரின் நிழலில் பொருத்தமேதும் இன்றி இணைக்கப்பட்ட பங்குதாரர்களை ஒன்றிணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி. அந்தப் பொருந்தாத் திருமணம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது . நிதித்துறைப் பகுதியின் அத்துமீறல்களை ஒரு…

Read More
Ayesha Natarasan கட்டுரை 

10 /10 வாசிப்பாயா – ஆயிஷா இரா. நடராசன்

துப்பாக்கிகளைவிட புரட்சிக்கு சிறந்த ஆயுதங்கள் உண்டென்றால் அவை புத்தகங்களே… – ஃபிடல் காஸ்ட்ரோ 1. குள்ளநரிகளும் அராபியர்களும் (உலக சிறுகதைகள்) த.வ.கீதா / எஸ்.வி.ராஜதுரை NCBH பக்: 96 விலை: ரூ.90/- அதிகாரத்திடம் உண்மையை நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேர் சொல்லும் தைரியம் மிக்க பல படைப்பாளிகளின் கதைகள் அடங்கிய தொகுப்பு இது. மானுட விடுதலை கைவரப் பெறாத சூழலில் அதை முன்னெடுக்க இறுதிமூச்சு வரை போராடும் இந்தப் படைப்புகள் தமிழின் இடதுசாரி மொழிப்பெயர்ப்பாளர்களான எஸ்.வி.ஆர். மற்றும் வ.கீதாவின் கை வண்ணத்தில் நமக்கு கிடைத்துள்ளன. நவீன சீன எழுத்தாளர் வென் யுஹோங் எழுதிய “வெறிநகரம்” தரும் அதிர்ச்சியிலிருந்து நீங்கள் மீள்வது அவ்வளவு எளிதல்ல. நரமாமிசம் உண்ணும் வென் யுஹோங் காட்டும் நகர பயங்கரம் ஆதீத சுவை தேடிகள் வெளி ரசிகர்கள் கண்மூடித்தனமான கேளிக்கை விடுதிகள் என யாவற்றையும்…

Read More
Thirumavelan கட்டுரை 

ஒரு பெருங்கடல், ஒரு நாடு, ஒரு புத்தகம் – ப. திருமாவேலன்

விஞ்ஞான சோசலிசக் கழகம் (தீட்சித் பிரிவு – மும்பை) என்ற அமைப்பைச் சேர்ந்த கோவில்பட்டி தோழர் பால்ராஜ் அவர்கள் சென்னை சென்று வரும்போது வாங்கி வந்து கொடுத்த நூல். ‘இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சனையும்!’ ஒன்றல்ல, ஐந்து பிரதிகள் வாங்கி வந்து எங்களிடம் கொடுத்தார். ஈழ மக்களின் துன்ப, துயரங்கள், தம்பி பிரபாகரனின் வீரம் என்ற எல்லையைத் தாண்டி ஈழத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு, மேற்குலக அரசியலை ஓரளவு உணர்த்துவதாக அந்தப் புத்தகம் அந்த வயதில் உதவியது. உதயன், விஜயன் என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் எழுதிய இந்நூலை 1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார்கள். இதன் தமிழகப் பதிப்பு தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் நடத்திய ரோசா லுக்சம்பர்க் படிப்பு வட்டத்தினரால் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. எஸ்.வி. ஆர். வெளியிட்ட நூலைத் தான் தோழர் பால்ராஜ் வாங்கி வந்து தந்தார். இந்நூலை 2011ம்…

Read More
Translation கட்டுரை 

மொழிபெயர்ப்புகளின் காலம் – சா. கந்தசாமி

மனிதர்களின் அறிவு, ஞானம், கருத்து, கற்பனை என்பதெல்லாம் ஒரு நாட்டிற்குள்ளோ, ஒரு மொழிக்குள்ளோ அடங்கி இருப்பதில்லை. ஆனால் அவை மனிதர்களின் அகத்தில் இருக்கின்றன. அவற்றைத் தாம் அறிந்த மொழியில் சொல்கிறார்கள். ஒரு மொழியில் சொல்லப்பட்டது என்பதால், அது அம்மொழிக்கே சொந்தமானது கிடையாது. எங்கோ, தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழி பெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அது தான் மொழி பெயர்ப்பு. எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவானதோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்துவிட்டது. தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் மொழி பெயர்ப்பு முறைகள் பற்றிச் சொல்கிறது. அதோடு மொழிபெயர்ப்பு என்ற சொல்லும் தொல்காப்பிய 1597 நூற்பாவில் இடம் பெற்று உள்ளது. மொழிபெயர்ப்பு இல்லாத மொழிகள் உலகத்தில் இல்லை. கருத்துப் பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல்…

Read More