கல்வியின் நோக்கம் வாசிப்பு! வாசிப்பின் நோக்கம் கல்வி!

மக்கள் கல்வியில் தலையீடு செய்து பெரிய சூன்யத்தை, அழிவை உண்டாக்கி, வெற்று வெறுப்பை, வெறியைத் தூண்டும் விதமாக இரண்டு காரியங்களை இன்றைய ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள். ஒன்று உழைக்கும் மக்களின் பொது வாசிப்பை பேரழிவுக்கு உட்படுத்தும் விதமாக நூலகத் துறையை முடங்கவைப்பது; இரண்டாவது வாட்ஸ்-அப் போன்ற தகவல் தொழில்நுட்ப ஊடக அம்சங்களின் மூலம் துவேஷத்தை விதைக்கும் பொய்த் தகவல்களை வெகு ஜனங்களுக்கு இடையே தூவி பீதியைக் கிளப்பிவிடுதல். இவை சமூகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. கருத்துத் திணிப்பு பொதுக் கல்வி அல்ல. கோடி கோடியாக அரசும் ஆட்சியில் இருக்கும் மதவாத கட்சியும் இதற்காக செலவு செய்கின்றன. இந்திய மக்களின் மனதை இருளடையச் செய்து மதக்கலவரங்கள் மூலம் மனிதநேயத்தைக் கொன்றிட இரத்த ஆறுகளை உற்பத்தி செய்ய அவர்கள் அந்தச் செலவை திட்டமிட்டு செய்கிறார்கள். ட்விட்டர், இன்ஸ்டோகிராம், வாட்ஸ்-அப்,…

Read More