விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் – 18

பால் ஸ்வீசி: மார்க்சிய அறிவுஜீவிக்கான இலக்கணம் என். குணசேகரன் அறிவுத்துறை வளர்ச்சியை உயர்ந்த சிகரங்களை நோக்கிக் கொண்டு சென்ற பெருமை மார்க்சியத்திற்கே உரியது. தத்துவம், சமூகவியல், பொருளியல், வரலாற்றியல் அனைத்திலும் வளமிக்க சிந்தனைகள், மகத்துவமிக்க பங்களிப்புகள், எல்லையற்று விரிவடைந்து வரும் விவாதப்பரப்பு என மார்க்சியம் இடையறாது இயங்கி வருகின்றது. இவ்வாறு விண்ணைத்தாண்டி வளரச் செய்திடும் பணியை அறிவுத்துறையில் செயல்படும் அறிவாளர்களும், புரட்சி இலட்சியத்துடன் களப்பணி ஆற்றுவோரும் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் முக்கியமானவர் அமெரிக்க மார்க்சியரான பால் ஸ்வீசி. ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பதவியையும், எதிர்கால வாய்ப்புக்களையும் உதறிவிட்டு, 1949ம் ஆண்டு மற்றொரு மார்க்சிய அறிஞரான லியொ ஹூயுபெர்மன் உடன் சேர்ந்து ‘மன்த்லி ரிவ்யூ’ துவங்கினார். தற்கால முதலாளித்துவத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் மார்க்சிய அடிப்படையில் ஆராய்ந்து அயராது எழுதி வந்தவர்  பால் ஸ்வீசி.  உலக முதலாளித்துவத்தின் குரலான…

Read More