நீ எழுத மறுக்கும் எனதழகு கவிதைகள் – இளம்பிறை

நீ எழுத மறுக்கும் எனதழகு கவிதைகள் இளம்பிறை, டிஸ்கவரி புக்பேலஸ் | பக். 247, விலை ரூ. 230 ‘என்னை நீ ஆக்காமல்/ இருப்பாயா நீ’ என நெஞ்சுக்கு நேராக ஆட்காட்டி விரலை காட்டி எச்சரித்த மவுனக்கூடு. தொகுப்பு நாட்களில் இருந்து கவிஞர் இளம்பிறை பரிட்சயம். பிறகு ஒரு போதில் தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற சென்ற நாளில் நானும் பெறுகிறேன் என்று இணைந்த வரை அப்புறம் பத்து பதினைந்து ஆண்டு கழித்து இப்போது இந்த கவிதைத் தொகுப்பின் மூலம் முழுமையாய் அறிகிறேன். மனசாட்சிக்கு எரியூட்டும் கனப்பு. பிறகென்ன/ வார்த்தை கிடைத்தவரை/ எழுத்தாய் வடித்துவிட்டு மிக்க நிதானமாக விறகுகளுடன் சேர்த்து எரிப்பேன் எனது வீணையையும்/ என பொங்கும் வரிகள் சமூகத்தின் அடிமை சட்டங்களை எரிக்கத் துடிக்கின்றன. உழைக்கும் மக்களை சித்தரிக்கும் நேர்மையை சிற்பி பாராட்டுகிறார். தூயகாற்றை சுவாசித்து…

Read More