You are here
சமூக உணர்வுடன் கூடிய படைப்புகளே தற்போதைய தேவை நிகழ்வு 

சமூக உணர்வுடன் கூடிய படைப்புகளே தற்போதைய தேவை

சமூக உணர்வுடன் கூடிய படைப்புகளை கொண்டு வருமாறு படைப் பாளிகளுக்கும், பதிப்பாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இளங்கோ சாலையில், புத்தகங்களுடன் புத்தாண்டு கொண் டாட்டத்திற்கு பாரதி புத்தகாலயம் ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் யூமா வாசுகியை ஜி.ராமகிருஷ்ணன் கவுரவித்தார். பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதி, பத்திரிகையாளர் அ.குமரேசன் மொழிபெயர்த்த “மூலதனம் நூலை எதற்காகப் படிக்க வேண்டும்?” என்ற சிறுநூலையும் வெளியிட்டார்.இந்நிகழ்வில் பேசிய ராமகிருஷ்ணன், “நம் முன்னோர்கள் நமக்கு அளித்த சமூகத்தை விட, சிறந்த சமூகத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் தர வேண்டும்.அதற்கான சிந்தனையை, சமூக மாற்றத் திற்கு பாடுபடக்கூடிய உணர்வை இந்தத்தலைமுறைக்கு ஊட்ட வேண்டும். அந்த வகையில் படைப்பாளிகள் படைப்புகளையும், பதிப்பகங்கள் புத்தகங்களையும் கொண்டு வரவேண்டும்” என்றார். கவிஞர் ஈரோடு தமிழன்பன்…

Read More
மறுசுழற்சி செய்! பயன்படுத்து! வீணாக்காதே! நிகழ்வு 

மறுசுழற்சி செய்! பயன்படுத்து! வீணாக்காதே! – பொன். தனசேகரன்

பழைய காகிதம், பாட்டில்கள், தீக்குச்சி, நூல், ஸ்ட்ரா, வால் டியூப், போன்று நம்மால் தூக்கி எறியப்படும் சாதாரணப் பொருள்களிலிருந்து அறிவியல் விளையாட்டுப் பொருட்களை உருவாக்கி அதனைப் பள்ளிக் குழந்தைகளிடம் பிரபலப்படுத்தி அவர்களுக்கு அறிவியல் பாடங்களில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறார் கான்பூர் ஐஐடி முன்னாள் மாணவர் அரவிந்த் குப்தா. ஒரு நாள் புத்தர் மடாலயத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.  “எனக்கு புதிய போர்வை வேண்டும்” என்றார் சீடர் ஒருவர். “உனது பழைய போர்வை என்ன ஆனது” என்று கேட்டார் புத்தர். “அது பழையதாகி நைந்து போய்விட்டது. அதனால் அதனை தற்போது விரிக்கப் பயன்படுத்துகிறேன்.” என்றார் சீடர். புத்தர் மீண்டும் கேட்டார். “உனது பழைய விரிப்பு என்ன ஆனது?” “விரிப்பு பழையதாகி விட்டதால், நைந்து போய்விட்டது. எனவே, அதை வெட்டி தலையணை உறையாகப் பயன்படுத்தி வருகிறேன்” இது சீடரின் பதில். …

Read More
vaskodakama கட்டுரை 

வாஸ்கோடகாமா – மயிலம் இளமுருகு

பூமியில் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் மற்றொரு பகுதியில் வாழ்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் தொடக்க காலத்தில் ஆர்வமற்று இருந்தனர். காலப்போக்கில் நாம் இந்த நாட்டில் வாழ்வதைப் போன்றே வேறொரு நாட்டிலும் மக்கள் இருப்பார்களோ என்ற ஆவல் தோன்றியது. அதன் காரணமாக பிற நாடுகளைக் கண்டறிவதில் விருப்பம் காட்டினர்.மட்டுமன்றி வியாபாரத்திற்காகவும் மற்ற நாடுகளைக் கண்டறிவதில் முனைந்தனர். அதில் நாடுகளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு நாட்டினருக்கும் போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் வேட்டை எஸ்.கண்ணன் அவர்கள் தொடக்ககால பயணம், மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி அதனூடாகப் உலகச் சந்தை தோற்றம் போன்றவற்றை சுருக்கமாக கூறியுள்ளார். பிறகு தான் எடுத்துக் கொண்ட பொருளான வாஸ்கோடகாமா குறித்தும் அவருடைய கடற்பயணம் பற்றியும் விரிவாகச் சொல்லியுள்ளார். சிறந்த மொழியியலாளர் சாம்ஸ்கி கூறியுள்ள கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். இப்போது நடப்பது கலாச்சாரங்களின் போர் என்று சொல்லியுள்ளவை சிந்திக்கத்தக்கவை….

Read More
Yuma Vasugi மற்றவை 

விருது பெறுகிறார் யூமா வாசுகி – சா. கந்தசாமி

இந்திய அரசு இருபத்திரண்டு மொழிகளை இந்திய மொழிகள் என்று அங்கீகாரம் செய்துள்ளது. அரசியல் சாசன அங்கீகாரம் இல்லாத ஆங்கிலம், ராஜஸ்தானி மொழிகளையும் சேர்த்துக் கொண்டு சாகித்ய அகாதமி இலக்கியப் பரிசு. மொழிபெயர்ப்பு பரிசுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தமிழ் மொழி பெயர்ப்புக்காகப் பரிசு பெறும் மொழி பெயர்ப்பாளர் மாரிமுத்து என்ற இயற்பெயர் கொண்ட யூமா வாசுகி. அவர் படைப்பு எழுத்தாளர். ரத்த உறவு என்று நாவல் எழுதி பரவலாக மதிக்கப்படுகிறவர். கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் படித்து பட்டம் வாங்கியவர். பத்தாண்டுகளுக்கு மேலாக மலையாளத்தில் இருந்து சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் கதைகள் என்று பலவற்றையும் மொழி பெயர்த்து வருகிறார். கஸாக்கின் இதிகாசம் என்று மலையாள மொழியில் ஓ.வி. விஜயன் எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாதமி மொழி பெயர்ப்பாளர் விருதை பெறுகிறார்….

Read More
mirdad-book மற்றவை 

சிந்தனை உலகில் முதலும் முடிவுமான ஞானநூல் – கவிஞர் புவியரசு

மிகெய்ல் நைமியின்      மிர்தாதின் புத்தகம் உலக ஞான நூல்களில் தலை சிறந்ததான இந்தப் படைப்பின் பெயரே, ‘மிர்தாதின் புத்தகம்தான். பத்தாண்டுகளுக்கு மேலாக, வெளிவந்த நாளிலிருந்து அடக்கமான அலையடிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்தப் படைப்பிற்கு மேலான நூல் இல்லை என்கிறார் ஓஷோ. நீண்ட ஞான தாகம் கொண்டவர்களின் தவிப்பை நிரந்தரமாகப் போக்கவல்ல சிந்தனைக் களஞ்சியம் இது.  உலகின் படைப்பாளிகள் அனைவரும் தமது மனதின் அடியாழத்தைப் படம் பிடித்துக் காட்டவே ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் தோற்றுப் போனார்கள். இவன் ஒருவன் மட்டுமே அதில் வெற்றி பெற்றான் என்கிறார் ஓஷோ. இந்த மகத்தான நூலைப் படைத்தது, எந்த இந்திய மகரிஷியும் அல்ல. இதன் ஆசிரியர் ‘மிகெல் நையி’ இவர் லெபனான் நாட்டுக்காரர்! கலீல் ஜிப்ரானின் அருமை நண்பர். ஜிப்ரானின் உழைத்தவர். நைமியின் உறவு இல்லாமற் போயிருந்தால் அவன் எப்போதோ…

Read More
எளிமையும் தியாகமும் மற்றவை 

எளிமையும் தியாகமும் – பாவண்ணன்

பாடப்புத்தகங்களுக்கு அப்பால் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை எங்கள் பள்ளிப் பருவத்திலேயே விதைத்த தமிழாசிரியர்களில் ஒருவர் ராதாகிருஷ்ணன். ஒரு வரியைச் சொல்லி, அவ்வரியை எங்கள் மனத்தில் பதியவைக்க ஒரு வகுப்பு நேரம் முழுதும் ஏராளமான விளக்கங்களையும் கதைகளையும் தங்குதடையில்லாமல் அடுக்கிக்கொண்டே செல்லும் ஆற்றல் அவருக்கிருந்தது. படிப்பதனால் என்ன பயன் என்னும் கேள்வியை முன்வைத்து ஒருநாள் எங்களோடு உரையாடினார் அவர். “எழுதப்பட்ட புத்தகம் என்பது ஒரு சிந்தனை. அதைப் படிக்கும்போது அந்தச் சிந்தனை நம்மை வந்தடைகிறது. அதைப்பற்றி யோசிப்பதன் வழியாகவும் விவாதிப்பதன் வழியாகவும் நாம் அதை நம்முடைய சிந்தனையாக ஆக்கிக்கொள்கிறோம். பிறகு நாம் அதைப்பற்றி மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்” என்றார். தொடர்ந்து “நம் மனம் ஒரு பெரிய அணைக்கட்டுபோல. ஒரு பக்கம் ஆற்றிலிருந்து தண்ணீர்வரத்தும் இருக்கவேண்டும். இன்னொரு பக்கம் மதகிலிருந்து வெளியேறிச் சென்றபடியும் இருக்கவேண்டும்” என்று சொன்னார்….

Read More
Atrai Thingal - Madhavan நூல் அறிமுகம் 

அற்றைத் திங்கள் – மாதவன்

சகோதரி கலைச் செல்வி எழுதிய அற்றைத் திங்கள் புதினத்தை வாசித்தேன். சமகால தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான முன்னெடுப்பு இப்புதினமென்று தாராளமாகக் கூறலாம். சாமான்யர்களுக்கான அரசியலென ஒன்று எப்பொழுதும் இருந்திருக்கவே இல்லை என்பதுவே அப்பட்டமான நிஜம். ஒவ்வொரு குடிமகனும் தத்தமது மிக எளிய வாழ்விற்கான பிரயத்தனங்களில் பல்வேறு நெருக்கடிகளுடன் உழன்று கொண்டிருக்க, ஆளும் அதிகாரசக்திகளோ எல்லையற்ற ஊழற்பணத்தில் பாரபட்சமின்றி கொழித்துக் கொக்கரிக்கின்றன. அரசுகள் அறிவிக்கிற ஒவ்வொரு மக்கள் நலத்திட்டங்களின் பின்புலத்திலும் பல்வேறு வகையான இலாப நோக்க அரசியல் விளையாட்டுகள் நிகழ்கிறதென அறிகையில் பெரும் அயர்ச்சி கொள்கிறது மனம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் வியாதிகள் பெட்டிகளுக்காக இடமும் வலமும் மாறி மாறி அலைகின்ற அவலச்சூழல் பெரும் அசூயையை ஏற்படுத்துகிறது. கொள்கைகளுக்காக அன்றி கோடிகளுக்காகவே இடம்விட்டு இடம்தாவுகின்ற குரங்குகளாக அவர்கள் மாறிவிட்டமை நமது அரசியலமைப்பின் வெட்கக்கேடுகளில் ஒன்று. பன்னாட்டு…

Read More
Puthagam Pesuthu Jan wrapper தலையங்கம் 

வாசிப்பின் திருவிழாவை வரவேற்போம் – ஜனவரி 2018

வாசிப்பின் திருவிழாவை வரவேற்போம் மன்த்லி ரெவ்யூ’ இதழில் 1949ம் வருடம் ‘சோஷலிசம் ஏன்?’ என்கிற தனது பிரபல கட்டுரையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவ்வாறு குறிப்பிட்டார். “நமது கல்விமுறை மாணவர்கள் முடங்கிப்போவது எனும் பெருந்தீங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவர் மனதில் புகட்டப்படுகிறது. தன் வருங்காலத்திற்கான தயாரிப்பிற்காக பொருளீட்டும் வெறியை வழிபட மாணவன் பயிற்றுவிக்கப்படுகிறான”’ என்று எழுதினார். இதன் மூலம் சமூகத்தின் ஓர் அங்கமாக தன்னைக் கருதாமல் தனிமனிதனாக அவன் முடங்கிப் போவான் என்றார் அவர். இக்கொடிய தீமையை ஒழிக்க ஒரே வழிதான் உள்ளது: ‘சோஷலிச குறிக்கோள்களை நோக்கிய கல்வி அமைப்பை உருவாக்குதல்; அவரது உள்ளார்ந்த திறன்களை வளர்க்கும் சுதந்திர வாசிப்பை கல்வியின் அங்கமாக்குதல்’ எவ்வளவு சரியான அணுகுமுறை. இதே நோக்கத்தோடுதான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. பாரதி புத்தகாலயம். எல்லா சமூகப் பங்களிப்புகளையும் விட…

Read More