You are here
நூல் அறிமுகம் 

ஹைக்கூவின் புதிய தலைமுறைக் கவிஞர்களுக்கு கிடைத்த வேர்ப்பலா

கன்னிக்கோவில் இராஜா ஹைக்கூவின் தொடர் ஓட்டத்தில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் கவிஞர் ஆரிசன்.  தான் பார்க்கும் காட்சிகளின் அனுபவப் பகிர்வுகளை ஹைக்கூவாக்குவதில் கைதேர்ந்த ஆரிசனின் சமீபத்திய தொகுப்பு ‘உழைப்பின் நிறம் கருப்பு’. நூலின் தலைப்பைப் படித்ததும், எளிதாக விளங்கிக்கொள்கிற பொருளைப் போலவே, இத்தொகுப்பில் உள்ள பல ஹைக்கூக்களும் இயல்பாய் நெஞ்சில் பதிகின்றன. இறக்கைகளை அசைக்க அசைக்க அருகில் வருகிறது வானம். ஒரு கவிதை எழுத ஒரு மாதம்கூட ஆகும் என்பது ஜப்பானியர்கள் கூற்று. ஒரு ஆண்டு முழுவதும் ஹைக்கூவோடு பயணித்திருக்கிற கவிஞர் ஆரிசனுக்கு, அதன் நெளிவு சுளிவு மட்டுமின்றி நெகிழ்வு தளர்வு, உணர்வு, புனைவு என எண்ணற்ற நிலைகள் புலப்பட்டிருக்கும் என்பதற்கான சான்றாகவே மேற்கண்ட ஹைக்கூவைப் பார்க்கிறேன். அக்கவிதையில் யதார்த்தத்தின் தொனி ஒலித்துக் கொண்டே வருவதை கண்கூடாகக் காணமுடிகிறது. இறக்கைகளை அசைக்க அசைக்க,…

Read More
நூல் அறிமுகம் 

பழமையின் புதிய கவி அவதாரம்

மு. முருகேஷ்   தமிழ் மரபின் செறிவோடும் புதுமையின் அழகோடும் தொடர்ந்து கவிதைத் தளத்தில் இயங்கி வருபவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். மரபுக் கவிதையின் சமூகத் தாக்கமும் புதுக்கவிதையின் அர்த்தமிக்க எளிமையையும் கைவரப் பெற்றவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சோர்வுறாமல் எழுதிக் கொண்டிருப்பதும், புதுப்புதுக் கவிதை வடிவங்களை அறிமுகம் செய்து வருவதும் சற்றே சவாலான ஒன்றுதான். எண்பதாவது வயதில் கால் பதித்திருக்கிற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இந்த சவால்களை தனது உறுதியான இலக்கியக் கொள்கையாலும் எழுத்தின் சமூகத் தேவை குறித்த சரியான பார்வையாலும் வென்றெடுத்து நிற்பவர். ‘உலராது பெருகும் உலகின் விழிநீர்த் துடைக்க ஒரு விரல் தேவை’ என்கிற வரிகளில் ஒலிக்கிற மானுட விடுதலையை விரும்பும் கவிக்குரலும், ‘சுதந்திரத்தை என்னால் சாப்பிட முடியவில்லை சோறு கொடு…’ என்பதிலான மனிதநேயக் குரலும், இன்றைக்கும் ஈரோடு தமிழன்பன் கவிதைகளில் விடாது…

Read More