மரம் ஏறும் யானை

ச.தமிழ்ச்செல்வன் எ   ம்மாதமும் போல இம்மாதமும் சுழன்றடித்த காற்று எல்லாத் திசைகளிலும்  தூக்கிப்போட்டுக் கொண்டிருந்தது. விதவிதமான கூட்டங்கள் விதவிதமான மனிதர்களுடனான சந்திப்புகள் எனக் கடந்து சென்றது காற்று. மயிலாடுதுறையில் இயங்கும் ஏ.வி.சி. கல்லூரியில் மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் பணம் வசூல் செய்து விளம்பரங்கள் சேகரித்துத் தங்கள் படைப்புகளை வெளியிட ‘இளந்தூது’ என்கிற ஒரு இதழை நடத்தி வருகிறார்கள். அதன்  27 ஆவது இதழை வெளியிட்டுப்பேச என்னை அழைத்திருந்தார்கள்.  120 பக்கங்களுக்கு மேல் கொண்ட பெரிய அளவிலான இந்த இதழில் “இளைஞனே! வீழ்வது வெட்கமில்லை..  வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்” என்கிற பாணியிலான எண்ணற்ற கவிதைகளும் மாணவ மாணவியர் வரைந்த ஓவியங்களும் அறிவியல் தகவல்களும் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு கூட்டு முயற்சி என்கிற அளவில் இது மிகவும் பாராட்டத்தக்க முன்னுதாரணம். கல்லூரி நிர்வாகத்திடம் பணம் வாங்கினால் சுதந்திரம் போய்விடும் என்பதால்…

Read More