பாட்டிகளின் குரல்வளைகளில் கசிகின்ற கதைகள்…

கமலாலயன் நென்மேனி மேட்டுப் பட்டிக்கும், திண்டுக்கல்லுக்கு மிடையே ஓடும் வண்டிப்பாதை, வளைந்தும் நெளிந்தும் வேறு வேறு ஊர்களின் வழியே தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. பயண வழியினூடே மதுரையையடுத்த கீழக்குயில்குடி சமணமலையின் பாறைகள் சமைத்த செட்டிப்புடவினருகே, மாடுகள் இளைப்பாற வேணுமென வண்டியை நிறுத்திவிட்டு அந்த மலைக்குகையொன்றில் ஓய்வாக உடலைக் கிடத்தியிருக்கிறார் கோணங்கி என்கிற இளங்கோ. இந்த நவீன கலைஞன், எதற்கு இப்படிப் பழைய மாட்டு வண்டியிலேறி நொம்பலப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறான் என்ற கரிசனத்துடன் ஜாகிர்ராஜா வேறு வேறு பேருந்துகளேறிப் பயணப்பட்டுப் போய் கோணங்கியைச் சந்தித்திருக்கிறார். இரண்டு பேரும் சமதையான பலசாலிகள். எதைக் கேட்டால் தான் எதிர்பார்க்கிற பதில் கிடைக்குமென்கிற சூட்சுமம் அறிந்த ஜாகிர்ராஜா கேள்விகளைத் தொடுத்திருக்கிறார்.    தமிழ்ச் சிறுகதைகள், நாவல்களுக்கென்று நீண்ட காலமாய் ஒரு மரபான நேர்கோட்டு மொழியும், தேய்ந்து பழையவையாகிப் போய்விட்ட சொல்லாடல்களுமே புழக்கத்தில் இருந்து…

Read More