கடந்து சென்ற காற்று – 5 வாசிப்பில் முக்கியமானதும் முக்கியமற்றதும்

ச.தமிழ்ச்செல்வன்    கடந்த இரு மாதங்களும் பரபரப்பான நாட்களால் நிரம்பியிருந்தன. புத்தகங்களால் வந்த பரபரப்புத்தான் அதிகம்.. ஒரு இரவு நேரத்தில்  கரூரிலும் ஒரு எழுத்தாளர் தூக்கிச் செல்லப்பட்டு அடிக்கப்பட்டார்.அவர் பெயர் புலியூர் முருகேசன் என்கிற செய்தி கிடைத்தது. கிடைத்த அரைகுறைச் செய்தியோடு கரூர் மாவட்டத்தோழர்களைத் தொடர்பு கொண்டு புலியூர் முருகேசனைக் கண்டுபிடியுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தூக்கிக் கொண்டுபோய் பல இடங்களில் வைத்து அடித்தது உண்மை. காவல்துறையே வேறு எங்கோ வைத்திருப்பதுபோல் தெரிகிறது என்று தோழர்கள் தகவல் சொன்னார்கள். தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கொடுத்த தகவலின் அடிப்படையில் புலியூர் முருகேசனின் மைத்துனரைத் தொடர்பு கொண்டேன். நள்ளிரவுவாக்கில் முருகேசனிடமே பேச முடிந்தது. போலீசுடன் போராடி அரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்ட கதையை அவர் சொன்னார். மனதில் ஏற்பட்ட பதட்டம் முடிவுக்கு வந்தது. அவர் எழுதிய ‘பாலச்சந்திரன்…

Read More