You are here
நூல் அறிமுகம் 

சென்னைக்கு மிக அருகில்

த. ஜீவலட்சுமி சமீபத்தில்  ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள கடுவஞ்சேரி எனும் கிராமத்தைச் சேர்ந்த தோழியிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன விஷயங்கள் சென்னைக்கு மிக அருகில்  நாவலின் பேசுபொருளை நடைமுறையில்  சாட்சியொருவர் ஒத்தேற்பு செய்வது போலிருந்தது. அவரது கிராமம் நாற்பதே வீடுகளையும் வயல்வெளியையும் ஒரு குளத்தையும் கொண்டது. சென்னைக்கு இரண்டு மணி நேரப்பயணத் தொலைவில் இந்தப் பெருநகரின் எந்தவொரு சுவடுமற்ற ஊர். இயற்கையின் அமைதியும்  ரம்மியமான சூழலுமாக இருந்த ஊரை இன்று கான்கிரீட் காடாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார். ஒருபுறம் நோக்கியா ஹூண்டாய் நிறுவனங்கள் ஏரி குளங்களில் இருந்து நன்னீரை உறிஞ்சிக் கொண்டு கழிவு நீரை அந்த ஏரிகளில் நிரப்பும் அக்கிரமத்தைச் செய்து வரும் அதேவேளையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வயல்களை, காலி நிலங்களை விவசாயிகளிடம்  பணத்தாசை காட்டி  வஞ்சித்துப் பறித்துக் கொள்ளும் வேலையைச்…

Read More
நூல் அறிமுகம் 

கால்களின் கீழே சுழலும் உலகம்

விநாயகமுருகன் தமிழ் இலக்கியப்பரப்பில் இதுவரை மாற் றுத்திறனாளிகள் உலகையும்,அவர்கள் இருப்பையும், இருப்பிற்கான தத்தளிப்பையும், அவர்களின் உடல் வலியையும்,வலி சார்ந்த தகவல்களையும்   இவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்த  நாவல்கள் எதுவும் வந்துள்ளதா என்று தெரியவில்லை.  அந்தவகையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவலாக அபிலாஷின் கால்கள் நாவலைச் சொல்லலாம். தனது இளம்பிராயத்தில் போலியோ அட்டாக் வந்து கால்கள் பாதிக்கப்பட்ட மதுக்‌ஷரா என்ற மதுவின் அகவுலகமும் அவள் புறவுலகில் சந்திக்கும் வேறுபட்ட குணங்கள் கொண்ட எண்ணற்ற மனிதர்களும், அவர்களுக்குள் நடக்கும் இடையறாத உரையாடல்களுமே நாவலின் மையப்புள்ளி. அழகென்றும் சொல்லமுடியாத அழகி இல்லையென்றும் சொல்லமுடியாத சராசரித் தோற்றமுடைய மதுவின் அகஉலகத்தை இரண்டு அடுக்காகப் பிரித்துக்கொள்ளலாம். மது தனது வீட்டில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட தனியறையில் அமர்ந்து தனது உடலின் ஒருபகுதியாக இருக்கும் காலிப்பரையும் அது ஏற்படுத்தும் வலியையும் தொடர்ந்து கவனித்தபடியே இருக்கிறாள். ஒவ்வொரு முறை காலிப்பரைப்…

Read More

தகர்க்கப்படும் ஐ.டி. நிறுவன பிம்பங்கள்

சா.சுரேஷ் விநாயக முருகனின் ராஜீவ்காந்தி சாலை நாவலை சமீபத்தில்தான் வாசித்து முடித்தேன். துறைசார் நாவல்கள் என்பன இதுவரைக்கும் வரலாறு, பூகோளம், அறிவியல் போன்ற ஏதேனும் ஒரு துறையின் கண்டுபிடிப்புகளை அல்லது அது நோக்கிய பாய்ச்சலை அல்லது துணிகரச்செயல்களை மையமாகக் கொண்டு நகர்வனவாக இருக்கும். ஆனால் ஐ.டி. துறையைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த பிம்பங்களை எல்லாம் அடித்து நொறுக்குகின்ற ஒரு ஐ.டி. துறைசார் நாவலாக நீண்டு கிடக்கிறது ராஜீவ்காந்தி சாலை. பிம்பங்களை விதந்தோதும் மரபார்ந்த நடையிலிருந்து முரண்பட்டு எதார்த்தங்களை வெளிப்படுத்தும் ஒரு எதிர்ப் பண்பாடுதான் இந்த நாவல். இதே போன்று வருவாய்த் துறை, பாதுகாப்புத்துறை போன்ற துறைகள் பற்றியும் அத்துறைகளில் பீடித்திருக்கும் லஞ்சம், ஊழல் போன்றவைகளை உலகிற்கு வெளிக்கொணரும் துறைசார் நாவல்கள் நிறைய வெளிவர வேண்டியிருக்கிறது. செய்திகளாய் படிப்பதில் நாட்டமற்ற மனம் ஒரு இலக்கியப் படைப்பினூடாக ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில்…

Read More