அறிவியலாளர்கள் சமூகப் பணியாளர்களாகத் தங்களை உணரவேண்டும்

ராக்கேஷ்சர்மா நேர்காணல்: நிர்மல்கவுத்ரிகவுர்தமிழில்: இரா. நடராசன்   ஸ்குவாட்ரண்ட் லீடர் ராக்கேஷ் சர்மா இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் எனும் வரலாறு படைத்தவர். 1984 ஏப்ரல் 3 அன்று அவரது பயணம் தொடங்கியது. அது ஒரு பெரிய வெற்றிக்கதை. நமது நாட்டு சந்ததிகள் அவசியம் அறிய வேண்டிய அறிவியலின் வரலாற்று நாயகன் ராக்கேஷ் சர்மா. சோவியத் அறிவியலின் சாதனைகளை எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் பேசும் அவரை நமது பாடப் புத்தகங்கள்கூட ஒருவரி குறிப்பிட்டுக் கைவிடுவது வேடிக்கை, வாடிக்கை. விர்ரென்று விண்ணளவு புகழ் பெற வேண்டிய இந்தியாவின் ஒரே விண்வெளி வீரருக்கு பாரதரத்னா விருது இதுவரை வழங்கப்படாததும் கூட அவரது இடது சார்ந்த அரசியலால் தான் என்பது பலரின் கருத்து. பலர் வெறுமனே விண்வெளியில் உலாவந்து திரும்பிய அந்த நாட்களில் வேதியியலின் முக்கியமான இரண்டு சோதனைகளை ஈர்ப்பு விசை…

Read More