You are here
நேர்காணல் 

பண்டைய இந்தியாவில் விமானம் இருந்தது போன்ற போலியான தகவல்கள் அறிவியலை வளர்க்க உதவாது

– த.வி. வெங்கடேஸ்வரன்  சந்திப்பு: இரா. நடராசன் எண்ணற்ற அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதியுள்ள த.வி.வெங்கடேஸ்வரன் தற்சமயம் டெல்லியில் மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தின் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். ஒரு ரயில்வே தொழிலாளியாகத் தன் வாழ்வைத் துவங்கிய த.வி.வெ. தன்சொந்த முயற்சியால் அறிவியலில் முதுகலைப்பட்டமும் டாக்டர் பட்டமும் பெற்றவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றி தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றவர். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற வதந்தியைக் கட்டுடைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அறிவியல் பூர்வமாக அதை விளக்கியவர். அறிவியல் கேள்வி பதில்கள், மனித குலத்தின் தோற்றம் உள்ளிட்ட பல பொருள் குறித்த நூல்களை வெளியிட்டுள்ளார்.பல்துறை அறிஞராக இந்தியா முழுவதும் சென்று அறிவியல் பணி ஆற்றி வருகிறார். தமிழகஅரசு சமச்சீர் பாடப்புத்தகம்…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

எந்த மனித மொழியும் புனிதமானது அல்ல!

நோம் சாம்ஸ்கி ஒரு மொழியியல் விஞ்ஞானி. அரசியல் அரங்கில் ஐன்ஸ்டீனைப் போலவே தன்னை ஒரு இடதுசாரியாக அணிவகைப் படுத்துவதில் தயங்காதவர். அமெரிக்க வல்லரசின் மக்கள் விரோத அம்சங்களைத் தோலுரிக்கத் தவறாத அமெரிக்க அறிஞர் என்பதில் முன்னுதாரணமாக இருப்பவர்.

Read More
நூல் அறிமுகம் 

முதல் பெண்!

முனைவர் இரா. சாவித்திரி பாரதி புத்தகாலயத்தின் குழந்தைகளுக்கான நூல் வரிசையில் பேரா. சோ. மோகனா எழுதியுள்ள “முதல் பெண்” என்ற நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அறிவியல் இயற்பியல், கணிதவியல், வானவியல், வேதியியல் ஆகிய துறைகளில் முதல் கண்டுபிடிப்புகளைச் செய்தவர்கள் பெருமைக்குரியவர்கள். உலகுக்கு நன்மை செய்த இவர்கள் பலரின் பங்களிப்பு பதிவு செய்யப்படாததால் மக்களுக்கு அறிமுகமில்லாமல் உள்ளனர். அவர்களை அறிமுகப்படுத்தும் மிகப்பெரிய சேவையினை முதல்பெண் என்ற நூல் செய்கிறது. முதல் பெண்மணிகள் அறுவரை அவர்கள் கண்டுபிடிப்புகளோடு சுவையாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மோகனா. பெண்கள் ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்தைக் கட்டிக்காக்கவும் முன்னோக்கி நகர்த்தவும் எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி அரும்பணியாற்றியுள்ளனர் என்று அணிந்துரையில் வழக்குரைஞர் இராசமாணிக்கம் கூறிய கூற்றுக்கு மிக நம்பகமான சான்று இந்நூல் என்பதை முதல் பெண் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. கிரேக்க மேதை பித்தாகரஸ் பற்றியும் அவர் தியரி பற்றியும்…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

அச்சப்படுபவர் அறிவியல்வாதியே அல்ல

மேரி கியூரி மேரி கியூரி. மேரி ஸ்க்லொடொஸ்கா கியூரி. இரு முறை அதிலும் வேறு வேறு துறைகளுக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி. தனது ஒரே குடும்பத்தில் அயர்னிகியூரி, பியரிகியூரி என நோபல் பாரம்பரியத்தை உருவாக்கியவர். 1867ல் நவம்பர் 7 அன்று வார்சாவில் (போலந்து) பிறந்தவர். அப்போது ரஷ்ய ஜார்பேரரசின் கீழ் இருந்த போலந்தில் பல்வேறு இடதுசாரி எழுச்சிகளுக்கு காரணமான குடும்பத்தில் பிறந்து ரகசியமாக நடத்தப்பட்ட வார்சா பல்கலைக்கழகத்தில் கற்று தனது சகோதரியோடு பாரீசுக்கு (பிரான்ஸ்) வேறு பெயரில் தப்பி அங்கு மிகுந்த போராட்டத்தின் நடுவில் கல்வியைத் தொடர்ந்தார் கியூரி. பெண் கல்விக்கும்  பெண் முன்னேற்றம், பங்களிப்பு இவை யாவைக்கும் முன் உதாரணமானவர். பகுத்தறிவுவாதி. பாதிரியார்களோ தேவாலயமோ செல்லாத சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தைரியசாலியாக வரலாறு அவரைப் போற்றுகிறது. தாய் மொழிப் பற்று, இனப்பற்று,…

Read More