மகாத்மாவைக் கொன்ற அதே தோட்டாக்கள்…

ஆதிக்க மதங்களின் புகழ்மிக்க அணுகுமுறை ஆயுதங்களாக கருத்து உரிமையை நிலை தடுமாற வைப்பது… நேரடியாகச் சொல்வதானால் முடித்து வைப்பது – நோம் சாம்ஸ்கி (ஐ.நா.உரை) மூட நம்பிக்கைகளை மக்களிடையே பரவச்செய்து ஒட்டச் சுரண்டும் அமைப்பாக மதம் இருக்கிறது. அதன் கையில் அதிகாரம் ஆயுதமாய்ப் புரளும்போது, வரலாறு ரத்தக்கறை படிந்ததாக ஆகிறது. பழைய சிலுவைப் போர்களிலிருந்து ஹிட்லரின் யூதப் பேரழிவுவரை அதுவே வரலாறாகி – சாத்தான்களே வேதம் ஓதுகின்றனர் எனும் பிரபல முதுமொழியாகி சமூகத்தை சிதைக்கிறது. இந்தியாவின் இதயம் ‘மதசார்பின்மை’ என்று தனது மகளுக்குக் கடிதமாக எழுதினார் ஜவஹர்லால் நேரு. ஆனால் காந்தியைக் கொலை செய்த அதே தோட்டாக்கள் இன்று வீறுகொண்டு எழுவது இந்திய மதசார்பின்மைக் கொள்கைக்கு விடப்பட்டுள்ள பெரியசவால். தன்னை விமர்சித்த அறிவுஜீவிகளை ஓசையற்ற மரணப் படுக்கையில் தள்ளிய மனித ரத்த வேட்டையாளனான ஹிட்லரின் மறுநிகழ்வு போலவே…

Read More