You are here
வாங்க அறிவியல் பேசலாம் 

டார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்…

– டாக்டர்ஜேன்கூடல் நேர்காணல்: மரியன்ஷெனால் தமிழில்: இரா. நடராசன் உலகிலேயே மிகக் கடினமான வேலை என்று வானியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒப்புக் கொண்ட விஷயம் மனிதக் குரங்குகள் பற்றிய சமூக ஆய்வு. காரல் சாகன் தனது அறிவியல் கட்டுரை ஒன்றில் (அது நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்தது) உயிரைப் பணயம் வைக்கும் அறிவியல் ஆராய்ச்சி என்று அதையே வர்ணித்தார். மனிதக் குரங்குகளான உராங்கொட்டான், கொரில்லா, சிம்பன்ஸிகளுடனே வாழ்ந்து வருடக்கணக்கில் அவற்றின் வாழ்க்கை ரகசியங்களை சமூகவியல் சாதனைகளை உலகிற்கு கொண்டு வருதல் சாதாரண வேலையல்ல. 1960ம் ஆண்டு மனிதக்  குரங்கிலிருந்து தொடங்கிய மனிதத் தோற்றம் குறித்த கல்வியாளர்  (Paleanthropologist)  லூயிஸ் லீக்கி தனது மாணவிகள் மூவரை இப்பணிக்கு கானகம் நோக்கி அனுப்புகிறார். லீக்கியின் தேவதைகள் (Leakey’s Angels) என்று அவர்களை அறிவியல் உலகம் அழைத்தது. அவர்களில் ஒருவர்தான் டாக்டர்…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

அறிவியலாளர்கள் சமூகப் பணியாளர்களாகத் தங்களை உணரவேண்டும்

ராக்கேஷ்சர்மா நேர்காணல்: நிர்மல்கவுத்ரிகவுர்தமிழில்: இரா. நடராசன்   ஸ்குவாட்ரண்ட் லீடர் ராக்கேஷ் சர்மா இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் எனும் வரலாறு படைத்தவர். 1984 ஏப்ரல் 3 அன்று அவரது பயணம் தொடங்கியது. அது ஒரு பெரிய வெற்றிக்கதை. நமது நாட்டு சந்ததிகள் அவசியம் அறிய வேண்டிய அறிவியலின் வரலாற்று நாயகன் ராக்கேஷ் சர்மா. சோவியத் அறிவியலின் சாதனைகளை எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் பேசும் அவரை நமது பாடப் புத்தகங்கள்கூட ஒருவரி குறிப்பிட்டுக் கைவிடுவது வேடிக்கை, வாடிக்கை. விர்ரென்று விண்ணளவு புகழ் பெற வேண்டிய இந்தியாவின் ஒரே விண்வெளி வீரருக்கு பாரதரத்னா விருது இதுவரை வழங்கப்படாததும் கூட அவரது இடது சார்ந்த அரசியலால் தான் என்பது பலரின் கருத்து. பலர் வெறுமனே விண்வெளியில் உலாவந்து திரும்பிய அந்த நாட்களில் வேதியியலின் முக்கியமான இரண்டு சோதனைகளை ஈர்ப்பு விசை…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

எந்த மனித மொழியும் புனிதமானது அல்ல!

நோம் சாம்ஸ்கி ஒரு மொழியியல் விஞ்ஞானி. அரசியல் அரங்கில் ஐன்ஸ்டீனைப் போலவே தன்னை ஒரு இடதுசாரியாக அணிவகைப் படுத்துவதில் தயங்காதவர். அமெரிக்க வல்லரசின் மக்கள் விரோத அம்சங்களைத் தோலுரிக்கத் தவறாத அமெரிக்க அறிஞர் என்பதில் முன்னுதாரணமாக இருப்பவர்.

Read More

பரிணாமவியலும் சார்பியலும் பிரபஞ்சத்தைக் காண உதவும் இரு கண்கள்

காரல் சாகன் காரல் சாகன் அண்டத்தின் ஏனைய இண்டுஇடுக்குகளில் வசிக்கும் வெளிக்கிரக உயிரிகள் குறித்து உலகின் கவனத்தை திருப்பியவர். நட்சத்திரங்களின் கதிர்வீச்சு அமினோ அமிலங்களை தோற்றுவிக்கும் இயல்புடையது என்பதை நிரூபித்ததன் மூலம் புவியில் உயிரிகளின் தோற்றத்திற்கு கூறப்பட்ட, கூறப்படும் Ôபுனித’ காரணிகளை உடைத்தவர். வெள்ளி கிரகத்தின் மேற்தரை வெப்பநிலையை துல்லியமாக நிறுவிய இவரது மற்றொரு கண்டுபிடிப்பு டாப்ளர் விளைவை நட்சத்திரங்களிலிருந்து கோள்களின் தொலைவு ஏற்படுத்தும் விளைவுகளுக்குப் பொருத்தி மற்றொரு சர்ச்சையை முடித்துவைத்தது. அயல்கிரகவாசிகள் ஏதேனும் இருப்பின் அவற்றுக்கு விளங்கும் ஆரம்ப சமிக்ஞை தகட்டை(Pioneer plaque) தயாரித்தவர் சாகன். அது வியேஜர் விண்கலத்தில் அனுப்பப்பட்டது. அறிவியலை வெகுஜனங்களுக்கு எடுத்துச் செல்வதை தன் 600 அறிவியல் ஆய்வுரைகள், 20 அறிவியல் நூல்கள் மற்றும் அறிவியல் புனைகதைகள் வழியே பதிவுசெய்து வாழ்நாள் முழுவதும் அறிவியல் விழிப்புணர்வுப் போராளியாய் விளங்கிய காரல் எட்வர்ட்…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

ஹிரோஷிமா-நாகசாகியின் ஒரே சாட்சி நான்.!

— ட்சுடோமு யாமகுச்சி நேர்காணல்: டேவிட் மெக் நீல் தமிழில்: இரா.நடராசன் ட்சுடோமு யாமகுச்சி என்ற ஒரு மனிதர் பேசி விடக்கூடாது என்று சி.ஐ.ஏ.விலிருந்து பிரிட்டன் உட்பட அமெரிக்க ஆதரவு நாடுகளின் உளவு அமைப்புகள் பல சொல்லொண்ணா நிர்பந்தங்களை ஜப்பானிய அரசுக்கும் உலக தகவல் தொடர்பு அமைப்புகளுக்கும் தந்தன. 1945 ஆகஸ்ட் ஆறு, யாமகுச்சி, ஹிரோஷிமாவின் மிட்சுபுட்சி நிறுவன பொறியாளராக காலை வேலைக்கு கிளம்பி அமெரிக்க அμகுண்டு வீச்சில் சிக்கினார். யாமகுச்சியின் ஊர் ஹிரோஷிமா அல்ல. குற்றுயிரும் கொலையுயிருமாக நகரம் செத்துக் கொண்டிருந்த போது ஓடிய ஒரே ரயிலில் ஏறி தன் சொந்த ஊருக்கு ரத்தம் சொட்ட சொட்ட போய் இறங்கினார். அவரது சொந்த ஊர் எது தெரியுமா நாகசாகி மறுநாள் உள்ளூரிலிருந்த மிட்சுபுட்சி அலுவலகம் செல்லும் வழியில் அதேபோல மீண்டும் புகைக் காளான்; இரண்டையும் அனுபவித்து…

Read More