உடல் திறக்கும் நாடக நிலம்-11 அவன் காகிதத்தில் வர்ணம் பூசிய பனைத்தொப்பியுடன் வருகிறான்…

ச. முருகபூபதி    யாசகர்களையும் பித்தமேறிய அனாதைகளையும் கூவி விற்றலையும் தெருவோர வியாபாரிகளை குப்பை சுமந்தலையும் தெருவோர மனிதர்களையும் குருடர்களையும் ஊமைகளையும் குடிகாரர்களையும் அரவாணிகளையும் பெற்றோர்களையும் உறவுக்காரர்களையும் தன் வயது ஒத்த ஜீவன்களாக தன் உலகு சார்ந்த கனவுலகவாசிகளாக என்றும் மதிப்பது இப்பூமியின் கடவுள்களான குழந்தைகளே. பழகும் விதத்திற்குள் இருக்கும் குழந்தமையைக் கண்டுவிட்ட அவர்கள் அதனால் வசீகரப்பட்டு அடக்கோழிபோல ஒரே இடத்தை சுற்றிச்சுற்றி பெரியவர்களையும் தளிர் மனிதர்களாக்கி விடுகிறார்கள். பெற்றோர்களும் வயோதிகர்களும் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில் தனக்குப் பிடித்த குழந்தையைத் தேர்வு செய்து அவர்களை மட்டும் கிடையாய்க் கிடந்து கொஞ்சி மற்ற குழந்தைகள் தனிமைப்பட்டு கண்ணீர் சிந்த வைக்கவும் செய்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட பெரியவர¢களையும் பெற்றோர்களையும் தொலைக் காட்சிப் பெட்டி பெத்துப் போட்ட முட்டாள்கள் என்பேன். வடிவமைக்கப்பட்ட நேர்த்தியும் அழகும் அடக்கும் நேர்மையும் சொல்லிக்…

Read More