கடந்து சென்ற காற்று – 8: வகுப்புவாதக் காற்று

ச.தமிழ்ச்செல்வன் சென்னை ஐஐடி பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததைக் கண்டித்து சரிநிகர் கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒருவர் எல்லோருக்கும் ஒரு நூலை இலவசமாக-விலையில்லாமல்-விநியோகித்துக்கொண்டிருந்தார்.எனக்கும் ஒன்று கொடுத்தார்.கொடுத்தவர் ரயில்வே தொழிற்சங்கத்தலைவர் தோழர் இளங்கோ.கொடுத்த  புத்தகம் பிபன் சந்திராவின் வகுப்புவாதம்- ஓர் அறிமுக நூல். தமிழாக்கம் மு.அப்பணசாமி.முந்நூறு பிரதிகள் வாங்கி வைத்துக்கொண்டு இப்படிப் பலருக்கும் அளித்து வருகிறார் இளங்கோ. நல்ல கரசேவை. கடந்த பத்தாண்டுகளில் நான் அதிகத்தடவைகள் மீண்டும் மீண்டும்  வாசித்த புத்தகம் பிபன் ச்ந்திராவின் COMMUNALISM IN MODERN INDIA . புத்தகம் கிழிகிற நிலைக்கு வந்து விட்டது.நம் மனதோடு எளிய மொழியில் பேசுபவர் பிபன் சந்திரா.பெரிய ஆங்கில வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரடியான மொழியில் இருக்கும். COMMUNALISM-A PRIMER  என்கிற நூலே இப்போது அப்பணசாமி மொழிபெயர்த்திருப்பது. இது…

Read More