You are here
தூரத்து புனையுலகம் 

தூரத்துப் புனைவுலகம் – 16 சாம்பல் படிந்த துயரப் பொழுதுகள்

ம. மணிமாறன் ரத்தம் கசிகிற வரலாற்றுப் பக்கங்களை எழுதிச் சென்றபடியே இருக்கிறது மத அடிப்படைவாதம். அன்பு, கருணை, நல்வழி என பசப்பிக் கொண்டு கச்சிதமாக நாம், பிறர் என்கிற பேதத்தை நீடித்திருக்கச் செய்வதில் வெற்றியும் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. தன்னையும், தான் சார்ந்த மதப் பற்றாளர்களையும் தவிர மற்றவரெல்லாம் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் உறுதியாகவும் இருந்து வருகிறது. இந்த மனநிலையை வைரஸ் கிருமியாகப் பரப்பி வெற்றிகொள்ளவும் அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டாக மதத்தைப் பயன்படுத்துவதிலும் தொடர்ந்து விதவிதமான திட்டமிடல்களை நிகழ்த்திக் கொண்டே வருகிறது. நம்முடைய காலத்தின் கண்ணீர்த் துளிகளாக வரலாறு முழுக்க நிறைந்திருப்பது மத அடிப்படைவாதம் நிகழ்த்திய யுத்தங்களே. மனித குல அழிவினை நிகழ்த்திடத் துடித்தலையும் மத அடிப்படை வாதம் நிகழ்த்திய ஆறாத வடுவாக இந்தியத் துணைக் கண்டத்தின் பக்கத்தில் “டிசம்பர் 6” எனும் கருப்புநாள் எழுதப்பட்டு விட்டது…

Read More
தூரத்து புனையுலகம் 

கலையாத காற்றின் சித்திரங்கள்

ம.மணிமாறன் சொற்கள் யாவும் அர்த்தம் தருபவையே. தான் எழுதிச் செல்கிற வரிகளில் படர்கிற வார்த்தைகள் வலிமையானது, கூடற்ற ஒற்றைச் சொல்லைக் கூட நான்  எழுதுவதில்லை என்றே நினைத்துக் கொள்கின்றனர் எழுத்தாளர்கள். மனதிற்குள் மூழ்கி முத்தெடுப்பதைப் போல நான் எடுத்து எழுதிக்கோர்த்த சித்திரம் என்னுடைய படைப்பு என்ற பெருமிதம், எழுதுகிற எல்லோருக்குள்ளும் மிதந் தலைகிறது. மனதின் சொற்கள் காகிதங்களில் படிவதற்கான கால இடைவெளி  சில பல ஒளி ஆண்டுகள் தொலைவிலானது என்பதை பல சமயங் களில் எழுத்தாளனே புரிந்து கொள்கிறான். தனக்குள் சமாதானமாகி அடுத்தடுத்த பக்கங்களுக்குள் கரைகிற போது அவனுடைய போதாமை ஏற்படுத்திய சுமை எழுத்தாளனில் இருந்து மெதுவாக வெளியேறி விடுகிறது. உலகைப் புரட்டப் போகும் புத்தகம் இது என்கிற  அதீத துணிச்சலின்றி ஒரு படைப்பை உருவாக்கிட முடியாது தான். இருந்தபோதும் எப்போதோ, எழுதிப்பார்த்து சுகித்து ரசித்த விஷயங்கள்…

Read More
தூரத்து புனையுலகம் 

கட்டுடைத்தலும் இட்டுக்கட்டலும்

ம. மணிமாறன் காலமே கலைகளின் நிலைக் கண்ணாடி. போரும், ரத்தப்பலியுமாகிக் கிடந்த இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகான நாட்களில் சகமனிதர்களிடம் அன்பு செய்யுங்கள் என்றுரைக்க வேண்டிய அவசியம் படைப்பாளிகளுக்கு ஏற்பட்டது. அன்புவழியும், மதகுருவும் தமிழில் பெயர்க்கப்பட்டதற்கான காரணமும் கூட இதுதான். பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட அதிகாரத்தின் சுவடுகள் இப்போது நூதனமாக வெளிப்படத் துவங்கியிருக்கின்றன. கண்களுக்குப் புலனாகாத மர்மம் கொண்டதாகியிருக்கிறது அதிகாரம். சக மனிதர்கள் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்வதில் கூட அதிகாரத்தின் சுவடு மறைந்திருக்கிறது என்று பூக்கோ உரைத்தபோது தடுமாறியது அறிவுலகம். படைகளும், போர்க்கருவிகளும் உலகெங்கும் அதிகாரத்தை நிலைநிறுத்தப் போதுமானதில்லை என்கிற புரிதலுக்கு அதிகார வர்க்கம் வந்தடைந்திருக்கிறது. மனங்களைத் தகவமைத்திட அதனுடைய கருவிகள் மாற்று வடிவம் பெறத் துவங்கியிருக்கின்றன. லாபமும், நுகர்வு வெறியும் கொண்ட மனிதக்கூட்டத்தை உருவாக்கினாலே போதுமானது என்கிற அதிகார வர்க்கத்தின் புரிதலைக் கலைத்துப் போட வேண்டிய அவசியத்தைக்…

Read More
தூரத்து புனையுலகம் 

இளம்பிராயத்து நினைவுகளும் மனப்பிறழ்வின் விசித்திரங்களும்

ம.மணிமாறன் உடைந்த வளையல்கள், வடிவமழிந்த  ஓடுகள், கிழிந்து எதிர்ப்படும் துணிகள், இவை யாவும் யாதொன்றையோ ஞாபகமூட்டும் குறியீடுகள். நீரற்ற கிணறுகளை உற்றுப்பார்க்கிற யாவரின் மனத்திரைக்குள்ளும் கிணற்றுச் சுவர்களில் இருந்து டைவ் அடித்து நீரை நிலைகுலையச்  செய்த தன்னுடைய சேக்காளிகளின் முகம் வரத்துவங்கிவிடுகிறது. எப்போதும் வ¤ழித்துக்கொள்ளக் காத்திருக்கின்றன நினைவுகள். சாணி மெழுகிய தரையினில் உருள்கிற பகடைக் காய்களுக்குள் நூற்றாண்டு கால கதைகள் உறைந்து கிடக்கின்றன. பகடைகளில் பதிந்திருக்கும் ரேகைகளுக்குள் தான் அந்த ஊரின் ரகசியங்கள் சேகரமாகியிருக்கிறது. இவற்றை அறிந்திட மேலைத்தேய தர்க்கங்களால் இயலாது. தத்துவம், கோட்பாடு, உளச்சிக்கல் என தர்க்கித்துக் கிடந்தன மேற்கத்திய கதை மொழிகள். கீழைத் தேய தொன்மங்களால் அவற்றைக் கலைத்து ஊடாடி புதிய மொழிதலைக் கண்டடைந்தவர் முரகாமி. முரகாமியின் வாசகர்கள் உலகெங்கும் விரிந்து கிடக்கிறார்கள். வெளிவந்த முதல் நாளிலேயே மில்லியன் கணக்கில் விற்கிற அவருடைய படைப்புகளின்…

Read More
தூரத்து புனையுலகம் 

அழிய மறுக்கும் அடையாளங்கள்

ம. மணிமாறன் நான் யாராக இருக்கிறேன் என்பதும், யாராக இருக்க வேண்டும் என்பதையும் நான் முடிவுசெய்வதில்லை. எங்கிருந்தோ எடுக்கப்படுகிற முடிவினை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறவனாக நான் உருவாக்கப்படுகிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தோற்றங்கள் மாறுகிறது. அழுக்கு உடை தொலைந்து போகிறது. உடலும்கூட நெகிழ்வாகவும், நாசூக்காகவும் மாறிவிடுகிறது, இருந்தபோதும் நான் எப்போதும் நானாக மட்டும்தான் இருக்க வேண்டியுள்ளது. என்னுடைய ஒவ்வொரு செயலின் போதும் நான் யார் என்பது ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறதே என்பதைத் துயரமும், எள்ளலும் கலந்த மொழியில் முன் வைத்திருக்கிறார் அரவிந்த மாளகத்தி. தன்னுடைய தன்வரலாற்று நாவலான ‘கவர்ன்மென்ட் பிராமணன்’ நூலினை அவர் 1990களில் எழுதியிருக்கிறார். 90-ம் ஆண்டு என்பது தலித் அரசியல், தலித் இலக்கியம் ஆகியவற்றைக் குறித்த தர்க்கங்களும், விவாதங்களும் தீவிரமாக எழுந்த காலம். அறிவர் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரின்…

Read More

தூரத்துப் புனைவுலகம் – 9 கால்களிலும் கண் முளைத்த பறவை

ம. மணிமாறன் பழகிய பாதையினில் பயணிப்பவர்கள் பாக்கியவான்கள். சிக்கலில்லை. உருவாக்கிப் போடப்பட்டிருக்கிற தடத்தினில் புரண்டு விடாமல் சீராக இயங்குகிறவர்கள், வாழ்க்கையொன்றும் அவ்வளவு எளிதானதில்லை என்று அச்சப்பட்டு நிலைகுலையப் போவதில்லை. இப்படியானவர்களால் நிறைந்த இப்பெரு உலகினில் விலகி நின்று யாவற்றையும் உற்று நோக்குகிறவர்கள் தனித்தவர்கள். ஒவ்வொரு நொடியையும் துளித்துளியாக ஏற்று, அதனுள் இயைந்து கரைந்து வேறு ஒன்றாகத் தானும் மாறி புறத்தையும் கூட மாற்றிடத் துடிக்கிறவர்கள் அவர்கள். அப்படியானவர்களுக்கு வாழ்க்கை வரமா? சாபமா? என்றறிந்திட முடியாத புதிராகவே அமைந்து போகிறது. தனிமனிதர்களின் புதிர்சூழ்ந்த வாழ்வெனும் விளையாட்டு வடிவம் பெறுவதில் அவனுக்கு மட்டுமே பெரும் பங்கிருக்கிறது. அவனே அவனின் அனைத்திற்கும் கா£ரணமாகிப் போகிறான் என்பதை முற்றாக ஏற்றிட இயலாது. அவனுடைய உருவாக்கத்தில் அவன் ஊடாடித் திரியும் புறச்சூழலுக்கும் சரிசமமான பங்கிருக்கிறது. இந்தப் பிரம்மாண்டமான புறஉலகம் அவனுக்குள் இறக்கியிருக்கிற பேராற்றலை உணர்ந்து…

Read More

நட்சத்திரக் கடலில் அலைவுறும் துயரம்…

ம. மணிமாறன் வரலாறு வழிநெடுக விச்திரங்களை வி¬த்தபடியே நகர்கிறது. முன்னொரு காலத்தில் கலகக்காரர்கள் என அடையாளப்படுத்தப்பட்டிருந்த ஷியா பிரிவினர் ஈராக்கின் அதிகார மையத்தில் அமர்ந்திருக்கின்றனர். அதிகாரத்தில் வீற்றிருந்த காலமெல்லாம் ஷியா பிரிவினரையும், காஜிரிக்களையும் வேட்டையாடி தீர்தத சன்னி பிரிவினர் இன்றைக்கு கலகக்காரர்களாகிப் போயிருக்கிறார்கள். அதிகாரம் யாவற்றையும் தலைகீழாக்கிடும் நூதனம். இரண்டுமே எல்லாம் வல்லான் பெயரினாலேயே நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேட்டைக்காரன் உதிர்த்திடும் சொற்றொடராக “லாயங்களில் ஏன் மோசமான விலங்குகளே எஞ்சியுள்ளன” என்பதே இன்று வரையிலும் இருந்து வருகிறது. விலங்கினங்களைப் போல சகோதரர்கள் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருப்பதற்கு மதத்தின் பெயரால் நியாயம் கற்பிக்க முயல்கிறது அதிகார மையம் எல்லாக் காலத்திலும். தொன்னூறுகளுக்குப் பிறகான நாட்களில் பிரயோகிக்கப்படும் புதிய சொற்சேர்க்கையான இஸ்லாமிய பயங்கரவாதம், ஜிகாத், புனிதப்போர் என்பவற்றை உருவாக்கிய உலக பயங்கரவாதிகளான அமெரிக்க அதிகார வர்க்கம் யாவற்றையும் ஹாலிவுட் சினமாக் காட்சியைப் போல…

Read More

நிரந்தரமில்லை இலையுதிர்தல்…

எதிர்பார்ப்புகள் நம்முடைய விருப்பத்தைப் போல பூர்த்தியாகி விடுவதில்லை. சிலபல நாட்களில் நாம் தவித்துப்போகிறோம். நம்பிக்கையும், உறுதியும் குலையும்போது பேதலித்துப் போகிறது மனம். ஏதொன்றையாவது பற்றிப் பிடித்து துயரக்குளத்தினின்று மேலேறிட எல்லோரும் தான் முயல்கிறோம். பற்றுக்கோல் எதுவென்பதை அவரவரின் மனநிலைகளும், செயல்பாடுகளுமே கண்டறிகின்றன. பெருவெளியெங்கும் காலம் உருவாக்கி வைத்திருக்கும் பிடிகயிறுகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.

Read More

சிதைவுகளிலிருந்து…

ம. மணிமாறன் நாம் பழக்கப்படுத்தப்பட்டு உள்ளோம். ஆப்பிரிக்கக்கண்டத்தைப் பற்றிய கதைகளுக்கும் கூட இப்படியான தன்மை உண்டு. நம்மில் பலரும் நம்புகிறோம். கருப்பின மக்களின் பழக்க வழக்கங்கள் அசூசையானவை. நாகரிகத்தின் சுவடுகள் தங்களின் மேல் படிவதை அவர்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள். இன்னும் இதைப்போல நிறைய…. பொதுப்புத்தியில் ஆப்பிரிக்க இனமக்களைக் குறித்த அதிர்ச்சிகளையும், வக்கிரங்களையும் பதியச் செய்ததில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் தவறுகளை அழித்து எழுதிடும் ஆற்றல் மிக்கவை புனைவுகள். இதுவரையில் உலகம் கண்டிராத ஆப்பிரிக்க மக்களின் ஆன்மாவை உலகறியச் செய்து வருகின்றனர் இலக்கிய கர்த்தாக்கள். இவர்களின் முதன்மையானவர் “சினுவா ஆச்சிபி” சினுவா ஆச்சிபியின் “ஜிபிமிழிநிஷி திகிலிலி கி றிகிஸிஜி” என்னும் ஆங்கில நாவல் “சிதைவுகள்” என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சிதைவுகளுக்கு முன்பு தமிழ் இலக்கிய உலகம் அறிந்திடச் சாத்தியமற்ற கலாச்சார, பண்பாட்டுப்…

Read More