You are here
நூல் அறிமுகம் 

குயவன் வனையும் கோடுகள்…

எஸ்.அர்ஷியா 2009 ஆம்ஆண்டுக்குப் பின் தமிழ் இலக்கிய உலகம் எண்ணற்ற படைப்புகளின் வழியே மேலும்மேலும் வளமையும் செழுமையும் அடைந்துவருகின்றது. புவிமையத்தின் 360 கோணங்களிலிருந்தும் படைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. காலத் தாலும் சூழலாலும் இலங்கையிலிருந்து விசிறியடிக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் எழுத்துகள் வலிநிறைந்த கவிதைகளாக, பல்தரவுகள்கொண்ட கட்டுரைகளாக, துன்ப துயரங்களைச் சுமக்கும் சிறுகதைகளாக, விரிவான நாவல்களாக புதிய தளம்நோக்கி நகர்வுகொண்டு வருகின்றன. அவற்றில் சில பேரிலயக்கிங்களாகக் கண்டடையும் சாத்தியங்களைக் கொண்டவை. இதற்கிடையே, அதே இலங்கையைச் சேர்ந்த அ.முத்துலிங்கம் போன்றவர்கள் பிறநாடுகளில் இருந்துகொண்டு எழுதும் வாழ்வியல் எழுத்துகளும் வந்தபடியே இருக்கின்றன. அந்தவகையில் இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்டு தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் நடேசன் ‘வண்ணாத்திக்குளம்‘, ‘உனையே மயல்கொண்டு‘ ஆகிய இருநாவல்களை தமிழ் எழுத்துலகத்திற்குக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து மூன்றாவதாக வந்துள்ள அவரது ‘அசோகனின் வைத்தியசாலை‘ புதியதொரு வகைமையைப் பேசுகின்றது. சினிமாக்களின் வழியாகவும் சினிமா பாடல்களின் வழியாகவும் மட்டுமே…

Read More
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடக நிலம் – 12: பூ மரத்துடன் பேசவரும் தேன்சிட்டுகள்…

முருகபூபதி  உலகில் ஜீவராசிகளைத் தழுவிச் சென்றபடி அவற்றோடு சுவாசமாகிவிட்ட காற்றின் உருவற்ற உணர்நிலைகளைப் போல ஆதியில் மரங்கள் சுமந்த மனிதனின் இருப்பு இயற்கையின் அதியற்புத விதிகளில் ஒன்றாகியிருந்தது. மனித நிலை முழுதாய் புகுந்துவிட்ட அதன் பழுத்த இலைகள் உதிர்வதைப்போல உதிர்ந்து வீழ்ந்து மரத்தின் சுவாசத்திடமிருந்து தனித்து விடப்பட்டு இன்று வரை வெகுதூரம் தன்னைத்தானே துரத்திக் கொண்டிருக்கிறான். ஆனால் உலகமெங்கும் எழுந்து வரும் மரங்கள் தன்னைவிட்டுப்போன மனிதனுக்காக நாட்டிய மாடியபடி இவைகளின் படபடப்பிசையில் எதிர்கால சந்ததியர்களுக்கான ஆதிவயல்களுக்குள்ளிருந்து குலவை மொழுகிய தானியங்களின் ரேகைகளோடு பாடிக் கொண்டிருக்கிறது. பறவைகளின் மொழியிசை அறிந்த மரங்களும் கொடிகளும் செடிகளும் உலகில் இருப்பதாலேயே இவ்வுலகம் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது. நிலத்தை அன்னையின் மடியாக உறவு கொள்கிற பண்பாடு நம்முடையது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என நிலமே தமிழ் வாழ்வின் அடையாளம் எனலாம். களர்…

Read More

அந்தர நிலத்தின் தேவதைகள்

ஹோமரின் ஓடிசியில் சர்சி என்ற பாத்திரத்தின் குணாம்சத்தைக் கொண்டு சர்சி, சர்க்கஸ் என உருவாயிற்று. சர்சி எனும் தேவதையைக் காண மன்னர்களும் தளபதிகளும் அவள் கோட்டைக்குள் நுழைய தன் மீது ஆசை கொண்டவர்களுக்கு அமிர்தம் கொடுத்து அது உடலுக்குள் போனபிறகு விலங்காகி விடுகிறார்கள். இப்படி விலங்காகியவர்கள் சூழ்ந்த தனிராஜ்யத்தின் ராணியாகத் திகழ்பவளே இந்த சர்சி. பல்லுருக் கொள்ளும் கலையின் விதியினை அறிந்த சர்சி எனும் தேவதையிடமிருந்து ஜனனமானது சர்க்கஸ்.

Read More