நேயமும் தோழமையும் சமத்துவமும் விழையும் குரல்….

எஸ்.வி. வேணுகோபாலன் நாம் சாதாரணமாகக் கடந்து போகின்ற தருணங்களைக் கொஞ்சம் அருகே அமர்ந்து கவனித்து நம்மைச் சலனப்படுத்தும் ஓர் அற்புத கணத்தை சிறுகதைகள் ஏற்படுத்துகின்றன. ஜனநேசனின் ‘கண்களை விற்று’ தொகுப்பில் அப்படியான அனுபவங்களுக்கான சன்னல்களை அவர் திறந்து வைக்க எடுத்திருக்கும் முயற்சிகள் சிறப்பானவை. நகரமயமாக்கலில் நாம் இழக்கும் நேயத்தை, பறிகொடுக்கும் பறவை உறவுகளைப் பேசுகிறது தலைப்புக் கதை. வெளுப்பான தலையை சாயமிட்டுக் கருப்பாக்கிக் கொள்வதை குழந்தைகள் செல்லக் கிண்டலுடன் நிராகரிப்பதைச் சொல்கிறது ‘நரைப்பூ’.   புறக்கணித்த பெற்றோரும் பிள்ளைகளின் கஷ்ட காலத்தில் துணைக்கு வரும் அன்பை எடுத்துரைக்கிறது ‘தொப்புள் கொடி’. ‘மீட்பு’ கதை, வழியில் கிடைக்கும் பணப் பையை நாமே வைத்துக் கொள்ளலாமா, உரியவரிடம் சேர்த்து விடலாமா என்ற மனித மனத்தின் சஞ்சலத்தை விவாதிக்கிறது. இறுதியில் நேர்மை மேலோங்குமிடத்தில், மனித நேயமும் பொங்குவதை ஜனநேசன் முன்னிலைப்படுத்துகிறார். ‘உறுத்தல்’ கதை, …

Read More