You are here
நூல் அறிமுகம் 

தொய்வில்லாது உழைத்த தோழர்களின் சரிதம்

இரா. ஜவஹர் ‘களப் பணியில் கம்யூனிஸ்டுகள்’ என்ற இந்தப் புத்தகம் ஓர் சாதனை என்று சொன்னால் அது கொஞ்சம் மிகையாக உங்களுக்குத் தோன்றக் கூடும். நிச்சயமாக மிகையில்லை. தலைவர்களைப் பற்றித் தொண்டர்கள் எழுதிய ஆயிரமாயிரம் புத்தகங்கள் உள்ளன. ஆனால் எளிய தொண்டர்களின் வாழ்க்கை வரலாறுகளை விவரித்துத் தலைவர்கள் எழுதிய புத்தகங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா ? அதை அந்தத் தொண்டர்கள் படித்து நெஞ்சம் நெகிழ்வதையும், இளைய தலைமுறையினர் படித்து எழுச்சி அடைவதையும் நீங்கள் கண்டதுண்டா?  அந்த வகையில் இதுவே முதல் புத்தகம். நான் அறிந்த வரையில். தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்று விவரங்களைத் தேடித் தேடிச் சேகரித்தும், சேகரிக்கச்செய்து பெற்றும் இதை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன். ஏராளமான தொண்டர்களைப் பற்றி இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும்…

Read More
நூல் அறிமுகம் 

காலத்தை விஞ்சி நிற்கும் அரசியல் படைப்புகள்

பேரா. ஆர். சந்திரா ரோசா பற்றிய இந்த நூல் இருபகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி ரோசாவின் வாழ்க்கை பற்றியது. ரோசாவின் இளமைக் காலத்தின் அரசியல் நிகழ்வுகளும், சமூகக் கட்டமைப்பும் விரிவாகத்  தரப்பட்டுள்ளது. மிகச் சிறந்த மாணவியான ரோசா, அதிகார வர்க்கத்தை விமர்சிக்கும் கலக மனப்பான்மை உடையவராக இருந்ததால், தங்க மெடல் மறுக்கப்பட்டது. இளம் வயதிலேயே மார்க்ஸ், எங்கெல்சின் எழுத்துக்களை வாசித்து  சோஷலிசத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாள். அவளது தந்தையும் ஜார் ஆட்சிக்கெதிராக செயல்பட்டார். போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக சோஷலிச இயக்கம் வளர்ந்தது. ஜோகிச்சுடன் இணைந்த ரோசாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இதில் ஏதும் குறிப்பிடவில்லை. ரோசாவின் எழுத்துக்களை செழுமைப்படுத்துவதில் ஜோகிச்சுக்கு பங்கு இருந்தது. ரோசா மிகவும் திறமைவாய்ந்த பேச்சாளர். முற்றிலும் மாற்றுக் கருத்து கொண்டவரைக் கூட தன் பக்கம் வென்று விடுமளவுக்கு, கோர்வையாக வாதம் செய்பவர். அதேபோல், ரோசாவைப்…

Read More

மே தினத்தை எழுச்சி தினமாய்க் கொள்வோம்!

“தொழில் மூலதனமும் நிதிமூலதனமும் ஒன்றாகி பொருளாதார அடிப்படையில் முதலாளிகளே அரசுகளை நடத்தி அடக்குமுறையில் ஈடுபடுவர்” லெனின்

Read More

உலக மய கொம்பனும் இடதுசாரி அங்குசமும்

க.சுவாமிநாதன் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடந்த 15 ஆண்டுகளாக கடைப்பிடித்த உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற வகையிலான கொள்கைகள் எத்தகைய பொருளாதார நிலையை உருவாக்கி உள்ளது? இதற்கு திமுக, அதிமுக போன்ற கட்சிகள் எப்படி காவடி எடுத்தன? என்பதையும் மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் இந்தக் கொள்கைகளை சமரசமின்றி இடதுசாரிகள் எதிர்த்து வந்ததையும், இன்று இந்த நாசகார கொள்கைகள் தொடர்வதை தடுக்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் மெல்லிய நகைச்சுவையுடன் விளக்குகின்றார், க.சுவாமிநாதன். இன்றைக்கு,மெகா ஊழல்களையும் மக்களுக்கு சொல்லொணாத் துயரையும் கொண்டு வந்துள்ள பொருளாதாரக் கொள்கைகள் எல்லாம் காங்கிரசால் கொண்டுவரப்பட்டு பின் பா.ஜ.க வால் தொடரப்பட்டவை; அல்லது பா.ஜ.க  ஆரம்பித்து வைக்க காங்கிரஸால் தொடரப்பட்டவை. இரண்டும் ஏதோ ஜென்ம விரோதிகள் போல நாடகம் ஆடினாலும் ஒரெ ’கிளப்பின்’ இரு அணிகள்தாம். இரண்டும்…

Read More

மத நல்லிணக்கம் காக்க

க.கனகராஜ் உலகின் ஏழு பெரிய மதங்களையும் தன்னுள் கொண்ட நாடு, சுமார் 12 கோடி இஸ்லாமிய மக்கள் வாழும்நாடு; அந்த வகையில் உலகின் இரண்டாவது பெரிய ’முஸ்லீம்நாடு’. இத்தகைய  இந்திய சமூகக் கட்டமைப்பின் பண்முகத் தன்மைகள், இந்த பண்முகத் தன்மையைக் காக்க வேண்டிய அவசியம், இந்தப் பண்முகத் தன்மையைத் தான்சார்ந்த வர்க்க, சாதி நலன்களுக்காக அழிக்க முனையும் பாஜக, அதன் பின்னணியில் இருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ், இந்தப் போக்கோடு சமரசம் செய்யும் காங்கிரஸ், தத்தம் சுய நலன்களுக்காக இது குறித்து துரோகம் செய்யும் திராவிடக் கட்சிகள் என விளக்கி இவற்றுக்கு எதிராக இடதுசாரிகளின் உக்கிரமான போராட்டதில் இணைய தமிழ் மக்களுக்கு அறைகூவல் விடுகின்றார், க.கனகராஜ். ஃபாசிசமாய் மாறும் அபாயம் இருந்தும் இந்திய பெருமுதலாளித்துவத்தால் ஊட்டி வளர்க்கப்படும் மதவெறி சக்திகள் சிறுபான்மை மதத்தை சாக்குக் காட்டி சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும்…

Read More