You are here
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று-9 : உரைகளுக்கு நடுவிலிருந்து….

ச.தமிழ்ச்செல்வன் கடந்த மாதக் கூட்டங்களில் இரண்டு கூட்டங்கள் பாராட்டுக்கூட்டங்களாக அமைந்தன. இரண்டு கூட்டங்களிலும் தலா மூன்று படைப்பாளிகள் பாராட்டப்பட்டனர். இரண்டுமே இரண்டு தமுஎகச கிளைகள் நடத்திய கூட்டங்கள். ஒன்று திருப்பூர் வடக்குக் கிளை நடத்திய கூட்டம்.அதில் மின்சார வேர்கள் உள்ளிட்ட பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிய 80 வயது தாண்டிய தோழர் தி.குழந்தைவேலுவும், பாரதி புத்தகாலயத்தின் மொழிபெயர்ப்பாளர் தோழர் மிலிட்டரி பொன்னுச்சாமியும் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் தோழர் ஆர்.ரவிக்குமாரும் பாராட்டப்பட்டனர். தோழர் குழந்தைவேலு நீண்ட காலம் தொழிற்சங்க இயக்கத்தில் பணியாற்றியவர்.அந்த வாழ்க்கையிலிருந்து வார்த்தைகளை எடுத்து எழுதத் துவங்கியவர். நைனா கி.ராஜநாராயணனைப் போல வயதான பிறகு இளம் எழுத்தாளராகப் பயணம் துவக்கியவர். பெரிய அங்கீகாரமோ பாராட்டோ, பரவலான பேச்சோ இல்லாவிட்டாலும் (தமுஎகச விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கலை இலக்கியப்பெருமன்ற விருது போன்றவை கிடைத்தாலும்) என்…

Read More
நூல் அறிமுகம் 

காலத்தை விஞ்சி நிற்கும் அரசியல் படைப்புகள்

பேரா. ஆர். சந்திரா ரோசா பற்றிய இந்த நூல் இருபகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி ரோசாவின் வாழ்க்கை பற்றியது. ரோசாவின் இளமைக் காலத்தின் அரசியல் நிகழ்வுகளும், சமூகக் கட்டமைப்பும் விரிவாகத்  தரப்பட்டுள்ளது. மிகச் சிறந்த மாணவியான ரோசா, அதிகார வர்க்கத்தை விமர்சிக்கும் கலக மனப்பான்மை உடையவராக இருந்ததால், தங்க மெடல் மறுக்கப்பட்டது. இளம் வயதிலேயே மார்க்ஸ், எங்கெல்சின் எழுத்துக்களை வாசித்து  சோஷலிசத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாள். அவளது தந்தையும் ஜார் ஆட்சிக்கெதிராக செயல்பட்டார். போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக சோஷலிச இயக்கம் வளர்ந்தது. ஜோகிச்சுடன் இணைந்த ரோசாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இதில் ஏதும் குறிப்பிடவில்லை. ரோசாவின் எழுத்துக்களை செழுமைப்படுத்துவதில் ஜோகிச்சுக்கு பங்கு இருந்தது. ரோசா மிகவும் திறமைவாய்ந்த பேச்சாளர். முற்றிலும் மாற்றுக் கருத்து கொண்டவரைக் கூட தன் பக்கம் வென்று விடுமளவுக்கு, கோர்வையாக வாதம் செய்பவர். அதேபோல், ரோசாவைப்…

Read More
நூல் அறிமுகம் 

இதோ அந்த ரோஜா … இப்போது நடனமிடு

உண்மையை அடைவதற்கு சுலபமான வழிகள் இருந்தாலும், எல்லோரும் அதைக் கண்டுபிடித்து விடுவதில்லை. இந்த சிக்கல் கார்ல் மார்க்ஸ் சிந்தனைகளுக்கும் பொருந்துகிறது, இதுதான் மார்க்ஸ் எழுதியது என அறிந்துகொள்ள மிக எளிய வழிமுறைகள் வந்த பிறகும் அவர் குறித்த தவறான வியாக்கியானங்கள் எல்லா இடத்திலும் பரவியிருக்கின்றன. மார்க்சின் எதிரிகள் மட்டுமல்லாது, அவரது நண்பர்களில் சிலருமே தவறான விளக்கங்களின் பெட்டிக்குள் மார்க்சை அடைத்துவிடுகின்றனர்.

Read More