உடல் திறக்கும் நாடகநிலம் – 14: பார்வையாளர்களின் பண்பாடும் பண்பாட்டுப் பார்வையாளர்களும்…

ச. முருகபூபதி உலக நாடக சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட கூட்டம் கூட்டமான பார்வையாளர்களின் மனஒப்புதலும் அவர்களது தீராத பண்பாட்டு இருப்புமே நாடகங்களை உன்னதமான வெளிக்கு இட்டுச் சென்றுள்ளது தெரியவருகிறது. குறிப்பாக தமிழ்நாடக வரலாற்றினை திரும்பிப் பார்க்கும்போது அன்று சங்கரதாஸ் சுவாமிகள்  துவங்கி வைத்த பாய்ஸ் கம்பெனியிலிருந்து இன்று வரை நாடகப்பார்வையாளர்களின் பங்களிப்பைப் பற்றி நாம் பேசத்தவறிவிட்டோம். பார்வையாளர்களின் அனுபவங்களின் நினைவுநிலத்திலிருந்து பார்க்கும்போது எனக்கு பண்பாட்டுப்பூர்வமான பார்வையாளர்கள், பார்வையாளர்களின் பண்பாடு   (audience culture, cultural audience) என்ற இரு கருத்தாக்கங்கள் நமக்கு கிடைக்கிறது.இவையிரண்டும் குறித்து நாம் கதைக்கும்போதே பார்வையாளர்கள்   குறித்த கவனம் நிலைபெறக்கூடும். அன்று பாய்ஸ் கம்பெனிகள் நாடகம் நிகழ்த்துவதற்கு ஒரு ஊருக்குள் முகாமிட்டால் குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் அங்கேயே நாடகம் போட்டு மறுஊருக்குப் பயணமாவார்கள். அந்த ஊரைவிட்டுக் கிளம்பும்போது நாடகத்தால் ஈர்க்கப்பட்ட பல பார்வையாளர்களும் அந்த…

Read More