மார்க்ஸின் “டுசி”

எஸ். கார்த்திகேயன்  மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் இருவரும் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை 1848 பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டனர். அதன் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு 1850 இல் வெளியிடப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் விஞ்ஞான சோசலிசத்தின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பல உருவாக்கப்பட்டு வந்தன. மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸால் அன்புடன் டுசி (Tussy) என அழைக்கப்படும், அந்த காலகட்டத்தின் மிகச்சிறந்த புரட்சிகரத் தலைவர்களில் ஒருவரான மார்க்ஸின் மகள் எலினார் மார்க்ஸ், அக்கால கட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தை ஒன்றிணைப்பதில், குறிப்பாக உழைப்பாளிப் பெண்களை ஒன்றிணைப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவர் 19 ஆம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகர தலைவர்களில் ஒருவர், தொழிற்சங்கவாதி, பெண்ணியவாதி, இலக்கியவாதி மற்றும் எழுத்தாளர். எலினார் மார்க்ஸ் அவர்களின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையை, ரேச்சல் ஹோம்ஸ்,…

Read More