காலத்தை விஞ்சி நிற்கும் அரசியல் படைப்புகள்

பேரா. ஆர். சந்திரா ரோசா பற்றிய இந்த நூல் இருபகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி ரோசாவின் வாழ்க்கை பற்றியது. ரோசாவின் இளமைக் காலத்தின் அரசியல் நிகழ்வுகளும், சமூகக் கட்டமைப்பும் விரிவாகத்  தரப்பட்டுள்ளது. மிகச் சிறந்த மாணவியான ரோசா, அதிகார வர்க்கத்தை விமர்சிக்கும் கலக மனப்பான்மை உடையவராக இருந்ததால், தங்க மெடல் மறுக்கப்பட்டது. இளம் வயதிலேயே மார்க்ஸ், எங்கெல்சின் எழுத்துக்களை வாசித்து  சோஷலிசத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாள். அவளது தந்தையும் ஜார் ஆட்சிக்கெதிராக செயல்பட்டார். போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக சோஷலிச இயக்கம் வளர்ந்தது. ஜோகிச்சுடன் இணைந்த ரோசாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இதில் ஏதும் குறிப்பிடவில்லை. ரோசாவின் எழுத்துக்களை செழுமைப்படுத்துவதில் ஜோகிச்சுக்கு பங்கு இருந்தது. ரோசா மிகவும் திறமைவாய்ந்த பேச்சாளர். முற்றிலும் மாற்றுக் கருத்து கொண்டவரைக் கூட தன் பக்கம் வென்று விடுமளவுக்கு, கோர்வையாக வாதம் செய்பவர். அதேபோல், ரோசாவைப்…

Read More