You are here
Uncategorized 

லெனினியம் கற்றிட ஒரு கையேடு

என்.குணசேகரன்  லெனினுடைய வாழ்க்கையை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக வாசிப்பது பலன் தராது.கார்ல் மார்க்சின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தத்துவத்தை   ஒரு நாட்டில் புரட்சியை நிகழ்த்தும்  நடைமுறையோடு இணைத்த மகத்தான வாழ்க்கை லெனினது வாழ்க்கை.ஒரு நாட்டில் நிகழ்ந்த புரட்சி அனுபவத்தில்  உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம் லெனினது வாழ்க்கை.இந்த வகையில் லெனின் வாசிப்பு நிகழ வேண்டும். உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஒரு மிகப் பெரிய சவாலாக நீடித்து வருகிற ஒரு பிரச்சனை உண்டு.அது,என்ன பிரச்சனை? தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்து, எவ்வாறு வெற்றியை சாதிப்பது என்பதுதான், ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்நோக்கும் முக்கிய சவால்.இதற்கு லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது. இதற்கு உதவிடும் நோக்கத்துடன்தான் மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் லுகாக்ஸ் “லெனினது ஒருங்கிணைந்த சிந்தனையைப் பற்றிய ஆய்வு” (Lenin:A study in the Unity of…

Read More
நூல் அறிமுகம் மற்றவை 

சமூக உற்பத்தியின் ஒரு வடிவமே கலை

ந. இரவீந்திரன் மனித சமூகம் பெற்று வந்த வளர்ச்சிச் செல்நெறியின் வெளிப்பாடாக உற்பத்தியானது கலை. அதன் எழுத்து வடிவமாய்ப் பரிணமித்த இலக்கியம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் உண்டு. மனிதப்படைப்பு என்பதைக்கடந்து உள்ளொளி வாயிலாகக் கடவுள் வெளிப்படுத்தும் கொடையெனக் கொள்வோரும் உளர். மனுக்குலம் எதிர்நோக்கிய பிரச்சனைகளை மக்கள் போராட்டங்கள் வாயிலாக தீர்க்கும் மார்க்கம் கண்டறியப்பட்ட போது, அத்தகைய இயங்காற்றல்களின் செயல்திறன் கலை – இலக்கியத்தின் பேசு பொருளான போது, இவை அருள் கொடைகளல்ல சமூகம் உற்பத்திசெய்கின்ற இன்னொரு வடிவமே எனக்கண்டறிய இயலுமாயிற்று. சமூக மாற்றத்துக்கான அந்த இயங்காற்றலில் பங்கேற்று அதனைக் கோட்பாட்டுருவாக்கம் செய்த மார்க்ஸியத்தின் மூலவர்களான மார்க்சும் ஏங்கெல்சும் இலக்கியம் குறித்தோ அதனைத் திறனாய்வு செய்யும்  முறையியல்கள் பற்றியோ தனியாக எழுதி வைக்கவில்லை. எரியும் பிரச்சனையாகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் எழுச்சிகொண்டு இயங்கிய அனுபவங்கள் சார்ந்த எழுத்தாக்கங்களே அவர்களது…

Read More
மார்க்சியம் 

விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்- 20 : மீண்டும் மீண்டும் லெனினியம்

என். குணசேகரன் நாட்டின் அதிபராக,ஒரு புதிய அமைப்பினை நிர்மாணிக்கும் மாபெரும் கடமையில் ஈடுபட்டுள்ளார், அவர். ஓவ்வொரு நிமிடமும் அவருக்குப் பொன்னானது. திடீரென்று அவர் அலுவலகத்திலிருந்து வெளியே தெருவிற்கு வந்து,கொட்டும் மழையில் நடனம் ஆடத் துவங்கினார். என்னவாயிற்று அவருக்கு? மகிழ்ச்சிக் களிப்பில் நடனம் ஆடியவர்,லெனின்! அவர் ஆட்டம் போட்ட நாள்,பாரிஸ் கம்யூன் எழுச்சி தினத்திற்கு அடுத்த நாள்.1871 ஆம் ஆண்டு நிகழ்ந்து, 72 நாட்கள் மட்டும் நீடித்த பாரிஸ் கம்யூன் ஆட்சியை விட ஒரு நாள் கூடுதலாக தனது சோவியத் ஆட்சி நீடித்த மகிழ்ச்சியில் தான் அவர் நடனமாடினார்! ​   சோவியத் ஆட்சி அமைந்தது,வெறும் நபர் அல்லது ஒரு கட்சியின் மாற்றம் அல்ல.அந்த ஆட்சி,பல ஆயிரம் ஆண்டு நீடித்து வந்த சமூக சமத்துவமின்மையை அதிரடியாக மாற்றும் முயற்சி. உழைக்கும் மக்களின் குடியரசை, அமைக்கும் வரலாற்றுப் பணி. சுற்றியுள்ள பல…

Read More
மார்க்சியம் 

விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் -19 : கம்யூனிஸ்ட் கருதுகோள்

என்.குணசேகரன் கம்யூனிச எதிர்ப்பும், வெறுப்பும், இன்றளவும் நீடித்து வருகிற மேற்கத்திய உலகில், மார்க்சியத்தின் மகத்துவத்தை உயர்த்தி, உரக்கப் பேசி வரும், மார்க்சிய அறிஞர்  அலென் பதேயு. “கம்யூனிஸ்ட் கருதுகோள்” எனப்படும் அவரது முக்கிய கருத்தாக்கம் அதிக விவாதத்திற்கு உள்ளானது. 2008-ஆம் ஆண்டில், நியூ லெப்ட் ரிவியு இதழில் எழுதிய கட்டுரையில் இந்த கருத்தாக்கத்தினை அவர் முதலில்  வெளியிட்டார். பிறகு அதனை விரிவாக விளக்கி நூல்களும் கட்டுரைகளும் எழுதினார். அவர் சார்ந்த பிரெஞ்சு அறிவுலகத்தில் மட்டுமல்லாது, ஐரோப்பிய, அமெரிக்க அறிவுத்துறையினர் மத்தியிலும் இக்கருத்து மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளது. அவரது கருத்துக்கு மார்க்சிய எதிரிகளின் எதிர்ப்பு இயல்பானது. ஆனால், மார்க்சியர்கள் பலரும் கூட அவரது  கருத்தில் முரண்பட்டு, விவாதித்து வருகின்றனர். எனினும், இந்த விவாதத்தின் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க, மார்க்சியத்தின் மீதான  ஆர்வம் பல தரப்பினரிடமும் பரவலாக எழுந்துள்ளது. இந்த…

Read More
மார்க்சியம் 

சீர்திருத்தம் பலனளிக்குமா?

என். குணசேகரன் இன்றைய ஆளும்வர்க்க முகாமைச் சார்ந்தவர்களும்,கார்ப்பரேட் ஊடகங்களில் உள்ள உயர்நடுத்தர வர்க்கம் சார்ந்தோர் பலரும் இடதுசாரி எதிர்ப்பைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகின்றனர். வேறுசிலர்,இடதுசாரிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இடதுசாரிகள் முன்னேற வேண்டுமெனில் இப்படியெல்லாம் இருக்க  வேண்டுமென்று  ஏராளமான  அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். இவர்களில்  பலர் அமைப்புரீதியாக, அமைப்புக்கோட்பாடுகள் கொண்டு செயல்படும் இடதுசாரி இயக்கங்கள் மீது அதிக ஆத்திரத்தை  வெளிப்படுத்துவார்கள். சோசலிச இலட்சியம் கொண்ட இடதுசாரிகள் இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கம்  பற்றிய பிரச்சனைகளை எப்படிப் புரிந்து கொள்வது? சரியான  புரிதல் ஏற்பட ரோசா லக்சம்பர்க் துணை நிற்கிறார். சோசலிசம் என்பது சிலரின் நல்லெண்ண நடவடிக்கைகளால் உருவாவது அல்ல; திறமையும் ஆற்றலும் கொண்ட, மிகக் “கவர்ச்சிகரமான” தலைவர்களால் உருவாக்கப்படுவதும் அல்ல. அதற்கு அறிவியல் அடிப்படை உள்ளது என்று கூறும் ரோசா, மூன்று முக்கிய…

Read More

இடதுசாரி அரசியல் கலை!

வரலாற்றில் சோசலிச இயக்கங்களுக்கு வளர்ச்சியும் உண்டு; வீழ்ச்சியும் உண்டு.ஆனால், வீழ்ச்சிகள் என்றுமே நிரந்தரமாக இருந்ததில்லை. பாரீசில் முதலாவது தொழிலாளிவர்க்க அரசு 72 நாட்கள் இருந்தது. அது மிகவும் குரூரமாக முதலாளிகளால் நசுக்கப்பட்ட பிறகு, “சோசலிசம்”, “தொழிலாளி வர்க்க அரசு” என்பதெல்லாம் சாத்தியமில்லை என்ற கருத்து, பேயாட்டம் போட்டது.ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு “யுகப்புரட்சி”யாக ரஷியப் புரட்சி எழுந்து மனிதகுல வரலாற்றைப் புரட்டிப்போட்டது.

Read More
அஞ்சலி 

ஆர். உமாநாத் : வரலாற்றுச் சான்றாகத் திகழும் வாழ்க்கை

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், செங்கொடித் தொழிற்சங்க இயக்கம் இவற்றின் வளர்ச்சியில் ஒரு அடையாள முகமாகிவிட்டவர் அருமைத் தோழர் ஆர். உமாநாத். நாட்டின் வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தோடும் சுதந்திர இந்தியாவில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தோடும் கடல் நீரில் உப்புப் போலக் கலந்திருக்கிறது அனைவராலும் “”””ஆர்.யு.”” என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கை.

Read More

இரு துருவமான மனித சமூகம்

என்.குணசேகரன் ஹாரி பிரேவர்மன் இறப்பதற்கு சிறிது காலத்துக்கு முன்பு மேற்கு வெர்ஜினியா தொழில்நுட்பக் கல்லூரியில்  உரை நிகழ்த்தினார். மிகச்  சிறந்த  அந்த உரையில் நிறைவாக முடிக்கிறபோது கீழ்க்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்: “…..இது அனைத்தும் தெரிவிப்பது என்னவென்றால், முதலாளித்துவ சமூகத்தின் ஒரு துருவத்தில் சொத்து அதிகரிப்பு நிகழ்கிறது;அதற்கு ஏற்றவாறு,ஏழ்மை அதிகரிப்பு மற்றொரு துருவத்தில் நிகழ்கிறது….” சொத்து அதிகரிப்பில் முதலாளித்துவம் எவ்வாறு உழைப்புச் சக்தியை மலிவாக்கிட முயல்கிறது?அதற்கு, உழைப்பு மேலாண்மையை அது எவ்வாறு நவீனப்படுத்தியது? இதன் காரணமாக, தொழிலாளி  எவ்வாறு மனரீதியாக, உடல்ரீதியாக, மலினமாக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழக்கிறார்? இதனால், ஏழ்மை அதிகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்ததுதான் ஹாரி பிரேவர்மனின் வாழ்க்கைச் சாதனை. இந்தத் துறையில் இருபதாம் நூற்றாண்டுக்கு முந்தைய போக்குகளை மார்க்ஸ் கண்டறிந்தார். இருபதாம் நூற்றாண்டுக்கு அதனைப் பொருத்தி மார்க்சிய சிந்தனை முறையில்  ஆய்வை மேற்கொண்டவர்…

Read More

மனிதம் மரிக்கும் ‘வேலை’

உழைப்போரின் ‘வேலை’ நிலைமைகள் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வினை மார்க்ஸ் மேற்கொண்டார். தனது சிந்தனைகளை மூலதனம் முதல் தொகுதியில் அவர் பதிவு செய்திருக்கிறார். மார்க்சைப் பற்றி பேசுகிற பல பொருளாதார நிபுணர்கள் “வேலை” குறித்த மார்க்சின் கருத்துக்களை அலட்சியம் செய்து விடுவார்கள். ‘வீழ்ச்சி அடையும் இலாப விகிதம்’ போன்ற அவரது கருத்துக்களைப் பற்றி தலைதெறிக்க விவாதித்து ‘மார்க்ஸ் தவறு செய்து விட்டார்’  என்றெல்லாம் தீர்ப்பு அளிப்பவர்கள், ‘வேலை’பற்றிய மார்க்சின் கருத்துக்கள் மீது அதிக மௌனம் சாதிப்பார்கள். ஏன் இந்த மௌனம்? ‘வேலை’யில் ஈடுபடுவது என்ற மனித இனத்தின் இன்பகரமான,மேன்மையான ஒரு இயல்பினை முதலாளித்துவம் எப்படி சீரழித்து, தனது மூலதனக் குவியலுக்குப் பயன்படுத்துகிறது என்பதை அசைக்கமுடியாத ஆதாரங்கள், உண்மைகளை அடிப்படையாகக்கொண்டு மார்க்ஸ் விளக்குகிறார். இதை ஆழமாக கிரகிக்கும் ஒரு தொழிலாளி முதலாளித்துவ அமைப்பை அகற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்துவிடுவார்….

Read More