தமிழும் மலையாளமும் நேருக்கு நேர்

தொகுப்பு: ஜெயஸ்ரீ இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மூன்றாம்தர எழுத்தாளர்களையும் நாமறிவோம். தொப்புள் கொடி உறவுள்ள தமிழின் இலக்கியச் சலனங்களைப் பற்றியோ, கன்னடத்தின் எழுத்து முறைகளையோ நாம் அறிவதில்லை. தெலுங்கின் 5 எழுத்தாளர்களின் பெயர் சொல்ல முடியுமா என்று கேட்டாலும் தெரியாது. இது பெரியதொரு குறைபாடுதான். இலக்கியத்தின், திரைமொழியின், இதர கலைகளின் தமிழ்ப் பார்வைகள் என்ன? அவற்றுடனான மலையாள உறவுகள் எவ்வளவு திடமானது. ‘சந்திரிகா’ ஓணப் பதிப்பிற்காக தமிழ் – மலையாள எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் திருவண்ணமலையில் பவா செல்லதுரையின் வீட்டில் ஒருங்கிணைந்தனர். பிரபல திரைப்பட இயக்குநர் மிஷ்கின், தமிழ்-மலையாள எழுத்தாளர் ஷாஜி சென்னை, மொழிபெயர்ப்பாளர்களான     கே.வி.ஜெயஸ்ரீ, கே.வி.ஷைலஜா, தமிழின் இளம் எழுத்தாளன் ராஜகோபால், திரைப்பட செயற்பாட்டாளன் தமிழ் ஸ்டூடியோ அருண், பிரபல தமிழ் இலக்கியவாதி பவா செல்லதுரை, சிஹாபுதீன் பொய்த்தும்கடவு என்று இவர்கள் உரையாடலில் பங்கேற்றனர்….

Read More