கடந்து சென்ற காற்று- 3: வேறு கவலைகள் வேறு மகிழ்வுகள்

ச.தமிழ்ச்செல்வன் விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று பயிலரங்குகளில் அவர்களோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் எப்போதும் முதலிடம் பிடித்து வந்த அக்கல்வி மாவட்டம் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக முதலிடத்தை இழந்து கீழே இறங்கிவிட்டது. ‘விட்ட இடத்தை’ப் பிடிக்கும் போராட்டத்தின் பகுதியாக முதன்மைக்கல்வி அலுவலரின் (சில சமயம் கல்வியோடு மனரீதியான தொடர்புள்ள அதிகாரிகளும் கல்வித்துறையில் வந்து விடுகிறார்கள்தான்)முன் முயற்சியில் இந்த முகாம்கள் நடந்தன. இயற்பியல், வேதியல் மற்றும் வரலாற்று ஆசிரியர்களோடு உரையாடினேன். பள்ளிகளில் குழந்தைகளோடு பேசும் வாய்ப்பும் எனக்குத் தொடர்ந்து வாய்க்கிறது. குழந்தைகளோடு பேசுவதற்கும் ஆசிரியர்களோடு பேசுவதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக பல சமயங்களில் தோன்றும். அதிகாரிகளின் உயிரற்ற பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுக் கேட்டுக்கேட்டு ஒருவித மந்த மனநிலைக்குப் போய்விட்ட அவர்களை (கண்கள் நம்மை நோக்கி விழித்தபடி  இருக்க மனதையும்…

Read More