தூரத்துப் புனைவுலகம் 13: மறக்க வேண்டிய ஞாபகங்கள்

ம. மணிமாறன் நம்முடைய மனதிற்குள் ஆழமாக உருவாகி இறுதிப்படும் சகலவிதமான முன்தீர்மானங் களுக்கும் நாம் மட்டுமே பொறுப்பாகிட முடியாது. மனங்கள் தகவமைக்கப்படுகின்றன. வெகு இயல்பாக நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். நம்முடைய தேர்வுகளுக்கும், ரசனைக்கும் கூட இப்படியான பழக்கங்களே பின்புலமாக இருந்து வருகின்றன. வாசிப்பதற்கான புத்தகங்களைத் தெரிந்தெடுப்பதிலும் கூட இப்படியான மனநிலைகள் இருக்கத்தான் செய்கிறது. முதல் பார்வையில் தவறவிட்டமைக்காக பின்னாட்களில் வருந்தும்படியான சூழல் எல்லோர் வாழ்விலும் ந¤கழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தவறிப்போன காதல், தவறிப்போன நட்பு, தவறிப்போன புத்தகங்களையும்கூட மறுமுறை எதிர்கொள்ளும்போது மனம் அடையும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. மகிழ்ச்சியோடு குற்ற உணர்ச்சியும் இயைந்தே சூழ்ந்திருக்கும் நிமிடங்களாகி விடுகின்றன அப்போதைய நேரம் முழுவதும். முதல் பார்வையில் தவறவிட்ட பொக்கிஷங்களின் குறியீடு ‘‘அனார்யா.’’ வாங்கிப் பலநாட்கள் ஆன பிறகும் வாசிக்காமல் வைத் திருக்கும் புத்தகங் களைப் புரட்டு உடனே என எனக்குள் கட்டளை…

Read More