You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

”இயற்கையைப் பொதுவுடமையாகக் காணும் மார்க்ஸின் சிந்தனையை நிலை நிறுத்த வேண்டும்”

– நக்கீரன்    கேள்விகள்: ப.கு. ராஜன் “அரசியல் சாராத கவிதைகளிலும் அரசியல் உண்டு” என்ற விஸ்லாவா ஸிம்போர்ஸ்க்காவின் முகப்பு வரியோடு வந்த ‘என் பெயர் ஜிப்சி’ எனும் கவிதைத் தொகுப்பு மூலம் கவனிப்பும் பாராட்டுகளும் பெற்ற கவிஞராக அறிய வந்தவர் நக்கீரன். ‘பென்சிலை சீவ சீவ சுருள் சுருளாய் பூக்கிறது ஒரு பூ பென்சிலை சீவ சீவ சுருள் சுருளாய் விரிகிறது ஓர் சிறகு’ என்று எளிமையும் தனித்துவமும் கொண்ட அழகியலோடு கவிதைகள் எழுதிவந்த நக்கீரன் எழுதிய அடுத்த நூலோ ‘மழைக்காடுகளின் மரணம்’ எனும் சூழலியல் நூல். நக்கீரன் அடுத்து எழுதியது தமிழில் முன்னுதாரணம் இல்லாத ‘காடோடி’ எனும் நாவல்(அடையாளம் பதிப்பகம் பக்.340 ரூ.270). நாவல் என்பதன் சாதாரணமான எதிர்பார்ப்பிற்கு மாறான விவரணங்களோடும் விளக்கங்களோடும் ஆனால் ஒரு புனைவிற்கு மட்டுமே உரித்தான உணர்வுமயமான இழைகள் நெகிழ்ந்தோடும்…

Read More
மற்றவை 

எல்லா இலக்கியங்களுக்கும் மேலாகத் ததும்பி வழிவதுதானே வாழ்க்கை…

நந்தஜோதி பீம்தாஸ் கேள்விகள்: ப.கு.ராஜன் ஆதவன் தீட்சண்யா அறிமுகம் செய்து வைத்துள்ள இந்திய, இலங்கை, தமிழ் எழுத்தாளர் நந்தஜோதி பீம்தாஸ். ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர். இந்தியாவில் பிறந்து, இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்து அல்லற்பட்டு ஐரோப்பாவில் பால்டிக் கடலில் எங்கோ ஒரு சிறு தீவில் கரை ஒதுங்கியவர். மீசை என்பது வெறும் மயிர் உள்ளிட்ட பல நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவரது நாவல்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பு மற்றும் ‘விளிம்புநிலை’ இலக்கிய வட்டாரத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. வரலாறு, அரசியல், சமூகம், இலக்கியம் ஆகியவை ஆதவன் மூலம் அறிமுகம் ஆகியுள்ளன. ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவல் குறித்து அவரிடம் கேட்ட வினாக்களுக்கான பதில்கள் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளன. 1.எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா நாடு திரும்பா எழுத்தாளர் வரிசையில்  ‘மீசை என்பது வெறும் மயிர் –…

Read More
நூல் அறிமுகம் 

”நாம் தேடி அலைந்த தெளிந்த விடியல் – இதுவல்ல”

நூற்றாண்டு விழா நாயகர்கள் பலரை நாம் கவனத்திற் கொள்ளாமலே கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். இன்றைய பாகிஸ்தானின் மேற்குப் பஞ்சாப்பில் உள்ள சியால் கோட்டில் பிறந்தவர் ஃபெய்ஸ் அஹமத் ஃபெய்ஸ். பிறந்த நாள், பிப்ரவரி 13, 1911ஆம் ஆண்டு. அவருடைய நூற்றாண்டுவிழா 2011இல் கொண்டாடப்பட்டதாக இப்புத்தகம் வாயிலாகத் தான் நாமறிகிறோம். தமிழில் Ôதுரோகத்தின் தருணம்’ என்ற பெயரில் ஃபெஸ்ஸின் கவிதைகள் சிலவற்றை 1994-ல் முதன் முறையாக மொழி பெயர்த்துத் தந்தவர் ப.கு.ராஜன்தான். ‘சவுத் விஷன்’ வெளியீட்டகத்தின் சார்பில¢ தோழர் பாலாஜி அத்தொகுப்பை வெளியிட்டிருந்தார். இன்று மீளவும் ப.கு.ராஜன், ஃபெய்ஸின் தேர்வு செய்யப்பட்ட 49 கவிதைகள், கவிஞரின் நூற்றாண்டையொட்டி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி பீப்பிள்ஸ் டெமாக்ரஸி இதழில் எழுதியிருந்த கட்டுரை, ஃபெய்ஸின் வாழ்க்கைக் குறிப்புகள், கவிஞரின் சமகாலத்துக் கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலருடைய நினைவலைகள்,…

Read More
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று- 3: வேறு கவலைகள் வேறு மகிழ்வுகள்

ச.தமிழ்ச்செல்வன் விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று பயிலரங்குகளில் அவர்களோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் எப்போதும் முதலிடம் பிடித்து வந்த அக்கல்வி மாவட்டம் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக முதலிடத்தை இழந்து கீழே இறங்கிவிட்டது. ‘விட்ட இடத்தை’ப் பிடிக்கும் போராட்டத்தின் பகுதியாக முதன்மைக்கல்வி அலுவலரின் (சில சமயம் கல்வியோடு மனரீதியான தொடர்புள்ள அதிகாரிகளும் கல்வித்துறையில் வந்து விடுகிறார்கள்தான்)முன் முயற்சியில் இந்த முகாம்கள் நடந்தன. இயற்பியல், வேதியல் மற்றும் வரலாற்று ஆசிரியர்களோடு உரையாடினேன். பள்ளிகளில் குழந்தைகளோடு பேசும் வாய்ப்பும் எனக்குத் தொடர்ந்து வாய்க்கிறது. குழந்தைகளோடு பேசுவதற்கும் ஆசிரியர்களோடு பேசுவதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக பல சமயங்களில் தோன்றும். அதிகாரிகளின் உயிரற்ற பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுக் கேட்டுக்கேட்டு ஒருவித மந்த மனநிலைக்குப் போய்விட்ட அவர்களை (கண்கள் நம்மை நோக்கி விழித்தபடி  இருக்க மனதையும்…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

படைப்பு மனநிலைக்கான குழந்தைமையைக் காப்பாற்றிக்கொண்டு உயிர்ப்புடனிருக்கிறேன்…

சமயவேல் கேள்விகள்: ப.கு.ராஜன் இதுவரை யாரும் எழுதி விடாத அற்புதக் கவிதையை எழுதிவிட பேனா எடுத்தேன். பக்கென்று இருள். மின்சாரம் போயிற்று… ……. வெளியே வந்தால் வெண்ணிற விளக்கெரியும் சுண்டல் வண்டியில் ……. ஓரத்தில் தெருவின் இருள் முழுவதும் உறிஞ்சி வண்டி முழுவதும் வெள்ளொளி உமிழும் பெட்ரோமக்ஸ் மேல் உட்கார்ந்திருந்தது நான் எழுத நினைத்த கவிதை. இப்படி சுண்டல் வண்டியின் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் இருந்தெல்லாம் தன் கவிதையைக் கண்டெடுக்கின்றார் கவிஞர் சமயவேல். பிளாங்க் பொயட்ரி (Blank Poetry) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஓசை நயத்தை நம்பாத நேரடிக் கவிதைக்குள்ளேயே தனக்கென்று தனித்ததொரு கவிமொழியும் தனது கவிதைகளுக்கென்று மிகச் சாதாரணமான பரப்புகளையும் நிகழ்வுகளையும் கொண்டுள்ள சமயவேலின் கவிதைகள் ஏமாற்றக் கூடிய எளிமை கொண்டவை. சமகாலத் தமிழ் வாழ்வின் அலுப்பும் அசதியும் கோபமும் கழிவிரக்கமும் மெல்லிய மகிழ்ச்சிகளும் இவரது…

Read More

சீனா தன் வழியில் சோசலிசத்தைக் கட்டியமைத்துக் கொண்டிருக்கும் ஒரு நாடுதான்

பேராசிரியர்- முனைவர் வெங்கடேஷ். பா. ஆத்ரேயா, சென்னை ஐ.ஐ.டி யில் வேதிப் பொறியியலில் பட்டம் பெற்றவர். சாதாரணமாக ஐ.ஐ.டி. பட்டதாரிகள் போல அல்லாது ‘வறுமையின் காரணம் அறிய’ அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் பயிலச் சென்றார்.

அங்கே பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். பல்கலைக் கழகப் பாடத்திட்டம் போதிக்காத உண்மைப் பொருளாதாரத்தை அவரைப் போன்ற மாணவர்களோடு இணைந்து ‘மூலதனம்’ நூலைக் கற்பதன் மூலம் கற்றறிந்தார். கல்லூரி வளாகம் விளக்காத உலகத்தை அங்கு வீறுகொண்டு நடந்த வியாட்நாம் போர் எதிர்ப்பு மாணவர் போராட்டங்கள் மூலம் விளங்கிக் கொண்டார்.

Read More

துன்பக்கேணியில் தமிழகம்

‘என் கழிப்பறை
எங்கிருந்து தொடங்குகிறது?
வாயிலிருந்து
மலக்குடல் வழியாக’

Read More

சில அறிவுஜீவிகளின் மௌனமும் மயக்கமும்

சாதி இன்று – அறிக்கை நூலை முன்வைத்து… ப.கு. ராஜன் தலித் நோக்கு நிலையில் இருந்து வெளிவந்துள்ள இந்த அறிக்கை வடிவிலான சிறுநூல் மிக முக்கியமான விவாதப் புள்ளிகளைக் கொண்டுள்ளது. வெளிவந்து மூன்று மாதங்கள் ஆகிய பின்னரும் தீக்கதிர் நாளிதழில் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் எழுதியதொரு விமர்சனத்தைத் தவிர நூலை வேறு யாரும் பொதுத்தளத்தில் எதிர் கொள்ளவில்லை எனத் தோன்றுகிறது.  பாராமுகத்தை சிலர் உத்தியாகப் பயன்படுத்தத் தலைப்பட்டிருக்கலாம். அல்லது எதிர்வினை ஆற்றினால் சாதியவாதி எனும்  குற்றச்சாட்டிற்கு ஆளாகி விடுவோமோ எனும் அச்சமிருக்கலாம். சாதியவாதியாக இருப்பதற்குத் தயாராக இருப்போரும்கூட சாதியவாதி எனும் பட்டத்துடன் இருக்க விரும்பாத காலம் அல்லவா? சாதிச் சங்கங்களின் கிச்சடிக் குவியலும்கூட தன்னை சமூக ஜனநாயக இத்யாதி இத்யாதியாக அழைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருக்கும் பூமி அல்லவா? இந்தக் காலமும், பூமியும் தானாக விளைந்ததல்ல; அல்லது இந்த…

Read More