You are here

குட்டிச்சுவர் கலைஞன் ஒருவனல்ல 13 பேர்…

க.வை.பழனிசாமி ஒரு படைப்பாளியின் அனுபவம் சும்மா இருப்பதில்லை. மனதை சதா கீறி உழுது சுயமான விதைகளைத் தூவித்தூவி புதுப்புது விளைச்சல்களைக் கண்டுகொண்டே இருக்கிறது. பயிர்களைக் கண்டு பரவசம்கொள்ளும் மனம் மேலுமான விளைச்சல்களை நோக்கி நகர்கிறது. அனுபவம்… அனுபவம் கிளர்த்தும் எண்ணம்…. எண்ணம் கூட்டிச்சென்று காட்டும் கண்படாத இடங்கள். இந்த இடமிருந்து எழுதுகிறவர்கள் அரிதினும் அரிது. இப்படியான அரிதான எழுத்தில் தொடர்ந்து பயணிக்கும் படைப்பாளி கீரனூர் ஜாகிர்ராஜா. ஜாகிர்ராஜா தனது எழுத்தை ‘ஜின்னாவின் டைரி’ நாவலில் கொண்டாடி மகிழ்ந்திருப்பார். பகடியும் விமர்சனமும் கலந்த கொண்டாட்டமாக வாசகனைக் கவர்ந்த நாவல் அது. இப்போது “குட்டிச்சுவர் கலைஞன்” அதேவேகத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த இரண்டு நாவல்களிலும் புனைவின் பேரழகை நாட்டிய அழகில் அதிரவிடுகிறார். எப்படி இப்படியொரு பாய்ச்சல்? கோள்களில் கால் பதிக்கும் பெரு நகர்தல் என்று வியக்கிறோம். தெருவில் குழந்தைகள் குதித்து கும்மாளமிட்டு…

Read More
நூல் அறிமுகம் 

கரும்பலகை

ச. மதுசுதன் சாமானியர்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் இயங்கு விசையாய் விளங்கும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் இன்னபிற தேவைகளுக்கும் கிடைத்த வேலைக்கு தங்களைப் பொருத்திக்கொள்ளும் அநேகமானோரின் வாழ்வியல் பலப்பலவான பிரச்சனைகள் வந்து போய்க் கொண்டிருந்தாலும் அதுவெல்லாம் பெரிதாய் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. அலைச்சலும் ஓய்வுமில்லாமல் பணியாற்றும் சூழல் சமகால நிதிமூலதன ஆதிக்கத்தில் சுழன்றுகொண்டிருக்கும் நம் அனைவரது வாழ்வும் நம் விருப்பம் போலல்லாமல் அகப்பட்ட நீரோட்டத்தினூடே நாமும் மௌனக் குவியலாய் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற எதார்த்தம் எத்தனை உன்மையானதோ அதே அளவு குறைவிலாத பிரச்சனைகளைக் கொண்டது  அரசு வேலை என்கிற மாயபிம்பம். வருத்தப்பட்டு பாரம் சுமந்தும் இன்னல்களை வெளியே சொல்லமுடியாத சூழலில் அரசு வேலை என்கிற வெற்று  கவுரவத்திற்க்காக அலைக்கழிப்புகளை உள்ளுக்குள் புதைத்துக்கொண்டு போலித்தனமான புன்னகையோடு திரியும் பலபேரை அன்றாடம் நாம் கடந்து கொண்டுதானிருக்கிறோம் அத்தகையதொரு பெண்ணான ராஜலட்சுமியின் வாழ்வையும்…

Read More
நூல் அறிமுகம் 

எழுதப்படாதவர்களின் வரலாறு

சோளகர் வாழ்வும் பண்பாடும் நூலை முன்வைத்து ச. லெனின் விளிம்பு நிலை மக்கள் குறித்த எழுத்துக்கள் மிகுந்த போராட்டத்திற்கிடையே அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் காலம் இது. இது வரை புறக்கணிக்கப்பட்டு, எழுதப்படாதவர்களின் வரலாற்றை, வாழ்க்கையை எழுதுவதே விளிம்பு நிலை மக்கள் சார்ந்த எழுத்தாகும். அப்படி எழுதப்படாத, பலரின் சிறுகவனத்தில் கூட இல்லாத சோளகர் பழங்குடி மக்களைப் பற்றிய நூல் தான் பகத்சிங்கின் சோளகர் வாழ்வும் பண்பாடும். தமிழகத்தின் மக்கள் தொகையில் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை ஒரே ஒரு சதம்தான். பழங்குடியின மக்கள் தொகையிலேயே சோளகர்கள் வெறும் ஒரு சதம்தான். இப்படி மிகச்சிறிய எண்ணிக்கையிலான ஒரு பழங்குடியின மக்களின் வாழ்வு குறித்த இந்நூல் வரவேற்கதக்கது. இன்னும் தமிழகத்தில் உள்ள மற்ற 35 பழங்குடி மக்கள் குறித்தும், பழங்குடிகளாக வாழ்ந்தும் பழங்குடிப் பட்டியலில் அரசால் சேர்க்கப்படாத இனங்கள் குறித்தும் பல…

Read More