You are here
நேர்காணல் 

வாசிப்பில் அமெரிக்க ஐந்தாம் வகுப்பும் தமிழக பத்தாம் வகுப்பும் …

எஸ்.எஸ். ராஜகோபாலன் சந்திப்பு : ஜி. செல்வா நேற்றைய பேட்டி மகிழ்ச்சி அளிக்கிறது. நாளைய பேட்டியின் போது  கீழ்க்காண்பவற்றை விவரிக்க விரும்புகிறேன்…   – SSR                              22 அக்டோபர் 2015  –  7:26 am மிக்க மகிழ்ச்சி, உங்களோடு உரையாடக் காத்திருக்கிறேன்.           22 அக்டோபர் 2015  –  8:47 am ‘புத்தகம் பேசுது’ இதழுக்கான பேட்டி என்பதை மறந்து கல்வி பற்றியே அதிகம் பேசினேன். நாளை  நூல்களோடு எனது உறவுபற்றி ஒரு சிறு விளக்க கட்டுரை அனுப்புகிறேன். அதன்மீது அதிகம் தெரிய விரும்பினால் கேட்கவும். இரண்டு நாட்களை வீணடித்ததற்கு வருந்துகிறேன். – SSR                                                                                                                23 அக்டோபர் 2015  –  6:12 pm இரண்டு நாட்களை வீணடித்துவிட்டீர்களா…? உங்களது வாழ்க்கைப் பயணம் மதிப்பீடுகளும், விழுமியங்களும் கொண்டவை. இந்த தலைமுறையினரால் இவ்வாறு…

Read More
கடந்து சென்ற காற்று மற்றவை 

கடந்து சென்ற காற்று -4: வாழ்வனுபவமும் வாசிப்பனுபவமும்-மாதொருபாகனை முன்வைத்து…

ச.தமிழ்ச்செல்வன்  கடந்த மாதம் முழுவதும் தலையில் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவல்தான் இருந்தது. ஊர் ஊராகப்போய்ப் பேசிக்கொண்டே இருக்க வேண்டிய காலச்சூழல். புத்தகத்தைப் படிக்காமலேயே அது சாதியையும் திருச்செங்கோட்டுப் பெண்களையும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலையும் இழிவுபடுத்துவதாக அப்பகுதியின் சாதிய, மதவாத சக்திகள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதைப்போலவே புத்தகத்தைப் படிக்காமலேயே அதை ஆதரித்துப் பேசிய நண்பர்களையும் எல்லா ஊர்களிலும் பார்க்க முடிந்தது. இதை காலத்தின் நகைச்சுவை என்றுதான் குறிப்பிட வேண்டும். படிக்காமல் எதிர்த்தவர்களுக்கு ஓர் எதிர்மறை அரசியல் இருந்தது. படிக்காமல் ஆதரித்தவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் காக்கப்படவேண்டும் என்கிற நேர்மறை அரசியல் இருந்தது. அப்புத்தகத்தை முன்வைத்து நாம் யோசிக்கவும் பேசவும் வேண்டிய சில முக்கியமான புள்ளிகள் இருக்கின்றன. நாவலின் மையம் குழந்தைப்பேறு இல்லாத  தம்பதிகளின் (காளி-பொன்னாள்) உளவியல் நெருக்கடிதான். சமூகம் அவர்களின் அந்நியோன்யமான காதல் வாழ்வைப் போற்றாமல் ‘புழு பூச்சி இல்லாத…

Read More

கருத்து சுதந்திர உரிமைப் போர் தொடரட்டும

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நடத்தி வரும் எழுச்சிமிகு உரிமைப் போர் வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். 2010ல் எழுதப்பட்ட ஒரு படைப்பு மாதொரு பாகன். குழந்தைப் பேறில்லா தம்பதியர் கோவில் தேர் இழுத்தால் பிரார்த்தனை நிறைவேறும்  எனும் நம்பிக்கைக்குப் பின்னால் நடக்கும் உலகறிந்த உயர்சாதி வக்கிரத்தைத் தோலுரித்த படைப்பு. ஆனால் 2014ல் எழுத்தாளர் பெருமாள் முருகன், தனது மாவட்டமான நாமக்கல் (திருச்செங்கோடு) தனியார் மேல்நிலைப் பள்ளிகளின் பணமுதலைகள் அடிக்கும் பகல் கொள்ளையைக் கடுமையாக விமர்சித்து எழுதியதும், பிரச்சனையை எதிர்கொள்ளவும் பதில் தரவும் திராணியற்ற பணம் படைத்தோர் கூட்டம் அவரது படைப்புகளுக்கு சாதி வர்ணம் பூசி இந்துத்வா வெறியாட்டத்தைத் தொடங்கி  அதை அரசின் அதிகார அமைப்புகள் ஆதரவோடு தனது ‘சிவ தாண்டவத்தை’ காவி தர்பாரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த உண்மைகளை…

Read More