You are here
நூல் அறிமுகம் 

ஜாதியற்றவளின் குரல்

 பாரதி செல்வா நேர்மையான சிந்தனை இங்கு மாற்று சிந்தனையாகிவிட்டது. அநீதியை எதிர்ப்பவர்களை மாற்று சிந்தனையாளரென அழைக்கிறோம். சமூகத்தின் பிரச்சனையைப் பேசுபவை இங்கே மாற்று ஊடகங்களாகி விட்டன. அப்படியெனில், இந்த பெரும்பான்மைச் சமூகமும் அதன் அரசியலும் பொருளாதாரமும், பொழுதுபோக்கும் வாழ்வியலும் நம்பிக்கையும் எத்தனை நேர்மையற்றதாக, பாகுபாடுகளைக் கொண்டாடுபவையாக இருக்கிறதென பாருங்கள். நீதியும் நேர்மையும் இங்கு மாற்றுச் சிந்தனையெனில் இந்த சமூகத்தின் நேரான சிந்தனை அநீதியும் நேர்மையின்மையும் தானே?” இப்புத்தகத்தின் முன் அட்டையில் முதல் பத்தி நேர்மையான சிந்தனை மாற்றுச் சிந்தனையாக பார்க்கப்படும் சமூக சூழலை விளக்கும், வலுவான வரிகளுடன் தன் பார்வையைப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.  சாதி இந்திய சமூகத்தின் மனித மூளைகளை ஒன்றிணைக்கவிடாமல் அணு அணுவாய் கூறுப்போட்டு வைக்கும் இழி சொல். இந்துத்துவத்தின் ஆணி வேரான வர்ணசிர்ம (அ) தர்மத்தின் அடிப்படையில் உருப்பெற்ற சாதியப் படிநிலை தன்…

Read More

திரைப்பெண்களின் பிம்பங்கள்

அ. வெண்ணிலா தமிழர்களை வெகுவாகக் கவர்ந்த கலை வடிவம் திரைப்படம். மற்ற கலை வடிவங்கள் எல்லாமே அதில் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர்களாலேயே அறியப்படுகிறது. ஓவியம் குறித்தோ, சிற்பக்கலை குறித்தோ, இசை,நாட்டியம்,இலக்கியம் குறித்தோ வெகுசன மக்கள் கூடும் எல்லா அரங்கங்களிலும் பேசிவிட முடியாது. அதற்கான கவனத்தைக் கோருவதே பெரும் கடினமான முயற்சியாகவோ, தோல்வியடையும் முயற்சியாகவோ இருக்கும். திரைப்படம் குறித்தே இடம்,பொருள், ஏவல் இல்லாமல் பேச முடியும். இன்றைக்குப் பிரபலம் என்றால், திரைப்படத்துறை சார்ந்தவர்களைக் குறிப்பதாக மாறிவிட்டது. 25 ஆண்டுகள் அரசியலில், அதிகாரத்தில் அறியப்படும் ஒருவரைவிட ஓர் ஆண்டுக்குள் திரைத்துறையில் நுழைந்தவர்களை நம் மக்கள் எளிதாக நினைவு கூர்கிறார்கள். காரணம் காணும் திசையெங்கும் அவர்களுடைய பிம்பம் நம் கண்களில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது மட்டுமல்ல. அசையும் பிம்பங்களால் உயிரூட்டப்பட்ட  காட்சிகள் மனித மனதை வசீகரிக்கத் துவங்கிய காலத்தின் வசீகரத்தில் இருந்து…

Read More

ஆணாதிக்கத்திற்கு எதிரான சித்தரிப்பு

( ஓல்காவின் சுஜாதா நாவல்தரும் அனுபவங்கள் ) பேரா. ஆர். சந்திரா தெலுங்கு எழுத்துலகில் பிரபலமாக விளங்கும் ஓல்கா, பெண்ணியக் கருத்துக்களை, யதார்த்தமான சூழலில் பொருத்திப் பதிவு செய்வதில் திறமையானவர். Ôசுஜாதா’ என்ற புதினமும் அதற்கு விதிவிலக்கல்ல. சுஜாதா என்ற முற்போக்கான சுயமாக சிந்திக்கும் பெண், அவளது சிநேகிதிகள் சாரதா, உஷா, ரமா ஆகியோரையும் அவர்கள் குடும்பங்களைச் சுற்றியும் கதை பின்னப்பட்டுள்ளது. சுஜாதா பல ஆண்டுகள் கழித்து தனது நெருங்கிய சிநேகிதி சாரதாவை சந்திப்பதுடன் கதை துவங்குகிறது. எடுத்த எடுப்பிலேயே சாரதா நல்ல ஓவியர் என்ற அறிமுகம் நமக்கு கிடைத்து விடுகிறது. ஆனால் திருமணம் குழந்தைகள், குடும்பவேலை காரணமாக அவள் வரைவதை நிறுத்தி விட்டாள் என்பதை விட, நான் வரைவது அவருக்குப் பிடிக்காது” என்று சுஜாதாவிடம் கூறுவதன் மூலம் எவ்வளவு திறமைகள் இருப்பினும், திருமணமானவுடன், அவை பின்…

Read More

வசந்தி என்றொரு பெண்ணின் வாழ்க்கைச் சரிதம்

பி. சுகந்தி தெலுங்கு எழுத்தாளர் ஓல்கா அவர்களின் மானவி என்ற நாவல் ‘தொடுவானம் தொட்டுவிடும் தூரம்’ என்ற தலைப்பில் கௌரி கிருபானந்தன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நாவலைப் படிக்க விரித்தால் படித்து முடிக்காமல் மூட மனமில்லை. வாசிப்பை வேகமாக்கும் எழுத்து நடையும் கதை அம்சமும் நிறைந்துள்ள நாவல். முதல் பாதியைப் படித்துமுடிக்கும் போது சின்னத்திரையில் பார்க்கும் மெகா சீரியல் போல கதையில் அடுத்தடுத்த பகுதியைத் தெரிந்து கொள்ள மனம் ஆவல் கொள்கிறது. கதையின் கதாநாயகி வசந்திக்கு இரண்டு பெண் குழந்தைகள், மூத்தவள் லாவண்யா, தன் தாயைப் போலவே கணவன், வீடு, மாமியார், குடும்பம் என உலகையே வீட்டிற்குள் சுருக்கிக் கொண்டவள், இளையவள் சவிதா வைசாக்கில் இஞ்சினியரிங் படிப்புடன் மாணவர் சங்கத் தலைவியும் கூட. சவிதா தன்னம்பிக்கையான பெண் ஆதலால், பட்டப்படிப்பை முடித்து விட்டு, கிணற்றுத் தவளையாய்…

Read More

இது ஆண்களின் உலகமாக மட்டும் இருக்கக்கூடாது…

கவின் மலர்

கேள்விகள் : கொங்கு நாடன்

1. ஊடகவியலாளராகிய நீங்கள் புனைவெழுத்தின் பக்கம் வர நேர்ந்த சந்தர்ப்பம் குறித்து கூறுங்கள்…

என் முதல் கவிதை, சிறுகதை இரண்டுமே சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைந்தன. கட்டுரைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையில் நேர்ந்த மறக்க முடியாத ஒரு வேதனையான அனுபவம் உள்ளுக்குள் சீற்றத்தை உண்டுபண்ணியது. அந்த சீற்றத்தையே ‘முகவரியற்றவள்’ என்று தலைப்பிட்டு கவிதையாக்கி ’உயிர்எழுத்து’ இதழுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தக் கவிதை வெளியாகவில்லை. அக்கவிதையோடு அனுப்பி வைத்த இன்னொரு கவிதை ‘பெருவெளி’ வெளியானது. அதுதான் பிரசுரமான முதல் கவிதை. எனினும் சில மாதங்கள் கழித்து ஆனந்தவிகடனில் ‘முகவரியற்றவள்’ கவிதை வெளியானது. சிறுகதைக்குள் செல்ல வைத்தது ஆனந்த விகடன் ஆசிரியர் ரா. கண்ணனின் வார்த்தைகள்தான். அவர் சொன்னபடி முயன்றுபார்த்தால் என்ன என்று தோன்றி எழுதியதுதான் ‘இரவில் கரையும் நிழல்கள்’ என்கிற முதல் சிறுகதை. அதுவும் ‘உயிர்எழுத்து’ இதழில்தான் வெளியானது.

Read More
தலையங்கம் 

முதலில் பெண்… பெண்ணே முதல்!

பிளேட்டோ குறிப்பிடுவதுபோல உலகின் முதல் குடியரசை ஜனநாயகப் பொருளில் நிர்மாணித்தவர் ஒரு பெண், அஸ்டாசியா… கி.பி. முதலாம் நூற்றாண்டில் வசித்த மரியாவை உலகின் முதல் விஞ்ஞானியாக வரலாறு போற்றுகிறது. நவீன உலகின் முதல் கணித மேதை ஒரு பெண் – ஹிப்பாஷியா. முதல் கவிஞர் கி.மு.600களில் வசித்து அச்சாக்கப் பாடல்களுக்கு வழி வகுத்த கிரேக்க கவிதாயினி சாப்போ. உலகின் முதல் மத போதகர் புத்தருக்கு முன்பே தத்துவப் புதையலாகத் திகழ்ந்தவர் ஹில்டெகார்ட். தனது மண்ணிற்காக உயிர் நீத்த தியாகிகள் என ஒரு பட்டியல் உலக அளவில் தயாரானால் முதல் பெயர் பிரான்ஸ் நாட்டிற்காக 1412-ல் உயிரோடு எரிக்கப்பட்ட வீராங்கனை ஜோன் ஆஃப் ஆர்க்! உலகில் பெண் விடுதலைக்கான முதல் குரல் எல்லாரும் சொல்வதுபோல ஆணுடையதல்ல.  எ வின்டிகேஷன் ஆஃப் தி  ரைட்ஸ் ஆப் உமன் (A Vindication…

Read More