You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

சோழம்பேட்டையிலிருந்து அறிவியல் இயக்க தலைவராக….

சோ. மோகனா “மனிதனின்  சமுதாய  வாழ்வே..அவனுடைய  சிந்தனையை  உருவாக்கி, நிரணயிக்கிறது”  – மாவோ “மனிதன் பிறந்து பயனின்றி  அழியக்கூடாது”                                                                 லெனின். “உன்னை எவராலும்  தோற்கடிக்க முடியாது..உனது நம்பிக்கையில்  தோற்காத வரை”                                            நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் “நாங்கள்  எதார்த்தவாதிகள்.. அதனால் அசாத்திய கனவுகளைக் காண்கிறோம்”     – சே குவேரா.. “ஒரு புத்தகம், ஒரு பேனா, ஓர் ஆசிரியர் ”  என்பவை உலகை மாற்றும் வல்லமை வாய்ந்த கருவிகள், இவற்றைக் கருத்தில் கொண்டு தொடருவோம்.. இன்றைய இந்த நிலையையும்,, ஒரு 60 ஆண்டுகளுக்கு முன் உள்ள எனது நிலையையும் எண்ணிப் பார்க்கிறேன். ரொம்பவே பிரமிப்பாக உள்ளது. இன்று  சமூகத்தால்  மதிக்கக்கூடிய நிலையிலும், அதைவிட முக்கியமாக, மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடும், அவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை…

Read More
கட்டுரை 

இல்லந்தோறும் நூலகம்

பேரா.என்.மணி இன்று முதல் நான், 20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன். எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள். எமது பேரக்குழந்தைகள் குடும்ப நூலகத்தை 2000 புத்தகங்களாக்குவார்கள். நான் எங்களுடைய நூலகத்தை வாழ்க்கைக்கான செல்வமாகவும் விலைமதிப்பற்ற சொத்தாகவும்  கருதுவேன். நாங்கள் எங்களுடையகுடும்ப  உறுப்பினர்களுடன் படிப்பதற்கு குடும்ப நூலகத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் செலவழிப்போம். டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அது ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி. நகரத்தில் இருக்கும் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் கல்லூரி. ‘ தாண்டிய பொது வாசிப்பு எத்தனை பேருக்கு உண்டு?” என்பதுதான் கேள்வி. கேள்விக்கு இருவர் மட்டுமே கையை உயர்த்தினர். அதில் ஒருவர் வேதாகமம் உள்ளிட்ட நூல்களைப் படிப்பவர், மற்றொருவர் சற்றே பொதுவாசிப்புப் பழக்கம் உள்ளவர் என்று தெரிந்தது. மூன்றாம் ஆண்டு பட்ட வகுப்புப் பயிலும் 35 மாணவர்களின்…

Read More
அஞ்சலி 

அஞ்சலி: ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அநாதைகளாயின…

   மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் கடந்த 27.07.2015 அன்று ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாடிக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக இயற்கை எய்தினார். அவருக்கு புத்தகம் பேசுது இதழ் ஆசிரியர் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. திரு. கலாம் அவர்கள் 2011 பிப்ரவரி 16 அன்று, தில்லியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழாவின் போது ஆற்றிய ‘சாம்வத்ஷார்’ உரையில், புத்தக வாசிப்பு மற்றும் குடும்ப நூலகம் குறித்து செறிவான பல கருத்துகளைக் கூறியிருந்தார். அந்த உரை புத்தகம் பேசுது 2011 ஆகஸ்ட் இதழிலில் பிரசுரமாகியிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதியை இங்கு மறுபிரசுரம் செய்துள்ளோம். திரு. கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம் எல்லோருடைய இல்லங்களிலும் குடும்ப நூலகம் ஒன்று அமைப்போம்!     நண்பர்களே, இங்கே ஒரு அனுபவத்தைக் கூற…

Read More
கட்டுரை 

ஷோபா சக்திக்கு சர்வதேச விருது

கான் திரைப்படவிழா (Cannes Film Festival) ஒவ்வோர் ஆண்டும் பிரான்சில் உள்ள கான் நகரில் நடக்கும். சர்வதேசத் திரைப்பட விழா. ஆஸ்கார் விருதுகள் பரவலாக அறியப்பட்டவை என்றாலும் அவை அடிப்படையில் அமெரிக்க-ஹாலிவுட் திரைப்படங்களுக்கு அமெரிக்க திரைப்படக் கழகம், அதன் உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் வழங்கப்படுபவைதான். அங்கு ஒரே ஒரு விருதுதான் அமெரிக்காவிற்கு வெளியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு (Best Foreign Flim) வழங்கப்படும். கான் திரைப்பட விழாவில் வழங்கப்படும் விருதுகள் உண்மையிலேயே சர்வதேச விருதுகள். விருதுகள் ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனர் குழு தேர்வு செய்து வழங்குபவை. அந்த வகையில் பெரும் பெருமைக்குரியவை. இந்த ஆண்டு சிறந்த படத்திற்கான பாம் டியோர் (Palme d’or)  விருது ஃபிரெஞ்சு இயக்குநர் ஜாக் ஓட்யர் (Jacques Audiard)  இயக்கிய தீபன் படத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. ‘சிறீலங்காவின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்க ஒரு முன்னாள்…

Read More

கோடை வசந்தமான பொழுதுகள்

புதுவை ஹேமா எந்த முன் திட்டமும் இல்லாமல் கோடை விடுமுறை சாதனாவிற்கு துவங்கியது…. அன்றைய மாலை முழுவதும் விடுமுறை வந்தாயிற்று.. என்று குதூகலம் பொங்கி வழிந்தபடி கொண்டாட்ட திட்டங்கள் வடிவம் பெறத் துவங்கியது.                         அவளின் புத்தக சேகரிப்பு கலைந்து கிடந்த புத்தக அலமாரியின் முன் அமர்ந்தபடி என்னுடன் (அம்மா) பேசத் துவங்கி, தன்னூக்கமாக புத்தகங்களை அடுக்கும் பணி துவங்கியது. இப்படி ஒரு சுகானுபவமாக ஒரு சலிப்பூட்டும் வேலை எப்படி மாறும் என்ற திகைப்பிலிருந்து இந்த நிமிடம் வரை நாங்கள் மீளவில்லை.                         சூழலை மறந்து, கிள்ளியெடுக்கும் பசியைத் தாங்கி, கார்டூன்களை புறக்கணித்து மூன்று பொழுதுகள் புத்தக அலமாரி பணியினை மனம் கோர்த்து தாயும், மகளும் கிடந்தோம்.                         ஒவ்வொரு புத்தகமாய் துடைப்பதற்கு கைகள் ஏறி வந்து, மடியில் கிடந்து, விரல் வருடல்களுக்கு உள்ளாக, கண்கள் பிடித்த…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 1 மனதில் தோன்றிய முதல் தீப்பொறி

எஸ். மோகனா ‘நம் சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்களைக் கொண்டு வரவியலாது. அப்படி மாறுதல்கள் ஏற்பட்டாலும் முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்றவேண்டும். பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாததும் ஆகும். பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது’ –   பெரியார் நான் என்னை, நான் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன். கொஞ்ச நஞ்ச ஆண்டுகளா? 67ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது…? வாழ்க்கையில் நடந்ததெல்லாம் நிஜம்தானா? அதற்கும் மேல்தான் தாக்குப்பிடித்து நிற்கிறேனா? ம். ..ம்… ஒரு பெருமூச்சுதான் பதில். ஆனால் அனைத்தும் உண்மை. பூமி சுற்றுவது எப்படி உண்மையோ.. சூரியன் இந்த பால்வழியை சுற்றுவது எப்படி உண்மையோ… அதுபோல்தான் இதுவும் நிஜம்தான்.. ஆனால் இப்போது அனைத்தையும் நினைத்துப் பார்த்தால் ஒரு…

Read More

எழுத்தால் எழுவோம்! கலையால் ஒன்று கூடுவோம்!

‘நம் எதிரிகள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்று மக்கள் சோர்வும் சலிப்பும் அடைந்திருக்கும் நேரத்தில் அவர்களை சிந்திக்க வைக்கவும் செயலில் இறங்குமளவு உத்வேகம் அளிக்கவும் தேவைப்படுவது எழுத்தும் மக்கள் கலையும் சார்ந்த உழைப்பாளர் அமைப்பு’         அஸ்திரா டோனி குளோவர் (மன்த்லி ரிவ்யூ)  கார்ல்மார்க்ஸ் தனது வாழ்நாளின் பெரும்பகுதியில் ஒரு பத்திரிகையாளராகவே இருந்தார். எழுத்தை தனது வாழ்வின் பிரதான அம்சமாக்கிக் கொண்டவர்களே மக்களின் போராட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெற முடிந்திருக்கிறது. ‘ஒரு பத்திரிகை கூட்டுப் பிரச்சாரகன்… கூட்டுப் போராளி மட்டுமல்ல.. அது ஒரு கூட்டு அமைப்பாளனும்கூட’ என்று லெனின் அறிவித்தார். 1848ல் தொடங்கி மார்க்சும் எங்கெல்சும் ட்ரிப்யூன் இதழில் எழுதிக் குவித்த கட்டுரைகளே அந்த இதழை லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் மக்கள் இதழாக்கியது. தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி தனது அனைத்துப் போராட்டங்களின் அடித்தளஅம்சமாக மகாத்மா காந்தி எழுத்தையே…

Read More
மற்றவை 

ஜெயமோகனுக்கு இயல் விருது

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2014ஆம் ஆண்டுக்கான இயல் விருது எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வழங்கப்படுகிறது. பத்துக்கும் அதிகமான நாவல்கள் சிறுகதைத் தொகுப்புகள், விமர்சன நூல்கள், கட்டுரைகள், திரைப்படப் பங்களிப்பு எனத் தொடர்ச்சியாக இயங்கி வரும் ஜெயமோகன் ஏற்கெனவே கதாவிருது, சம்ஸ்கிருதி சம்மான் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். இயல் விருது பெறும் அவரை புத்தகம்பேசுது ஆசிரியர்குழு வாழ்த்துகிறது.

Read More
மற்றவை 

பூமணிக்கு சாகித்திய அகாதெமி விருது

கருவேலம் பூக்கும் கரிசல் மண்ணின் மணத்தை மக்கள் வாழ்வை தன் எளிய சரளமான மொழி வளத்துடன் படைப்புக்களாகத் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் பூமணிக்கு 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. பூமணி 1970-களில் தனது தொடர்ச்சியான படைப்புச் செயல்பாட்டின் காரணமாக கவனம் பெற்றவர். அவருடைய சமீபத்திய நாவலாகிய ‘அஞ்ஞாடி’க்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அஞ்ஞாடி இருநூற்றாண்டு தமிழ்ச்சமூக வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகத் தமிழ்வாசகனை வந்தடைந்த பிரதி. அடித்தட்டு மக்களின் பாடுகளை பரிதவிப்பை அழுத்தமாகப் பேசிய பூமணியின் பிறகு, வெக்கை, நைவேத்தியம், வாய்க்கால், வரப்புகள், இவை ஐந்தும் அஞ்ஞாடிக்கும் முந்தைய நாவல்கள். வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் போன்ற சிறுகதைத் தொகுப்புகள், கருவேலம்பூக்கள் என்கிற ஆவணப்படம் என அவருடைய படைப்புலகம் விரிவானது. அஞ்ஞாடிக்குப் பிறகான அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கும் பூமணியை விருதுபெற்ற இத்தருணத்தில் புத்தகம்பேசுது ஆசிரியர்குழு…

Read More
தலையங்கம் 

ஆசிரியர் தினத்தின் ஆணிவேர்… வாசிப்பு!

எழுத்தறிவிப்பது என்பதை நமது முன்னோர்கள் ஒரு  வேலைக்கான படிநிலையாகக் கருதவில்லை. அதை ஒரு வாழ்க்கையாகக் கருதினார்கள். அதை வகுப்புகள், பாடங்கள், வருட அடிப்படைப் படிநிலைகள் எனப் பிரித்தது ஒரு வசதிக்காகத்தான். ஏதோ ஒரு குறிப்பிட்ட வயதில் தொடங்கி ஒரு குறிப்பிட்ட வயதில் பொதுத் தேர்வு அல்லது பல்கலைக்கழகப் பட்டம் பெற்றதும் முடிந்துவிடும் இயந்திர சுழற்சியாக  இன்று கல்வி பார்க்கப்படுவதில் நியாயம், தர்க்கம் ஏதுமில்லை. கல்வி, வாழ்க்கை முழுவதும் நடைபெறுவது ஆகும். வெகுஜன மக்களின் பெருந்திரள் இந்தியாவில் கல்வியறிவு பெறாமல் இருப்பதே வறுமைக்கும் பிணிக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் காரணம் என்பது அமர்தியா சென் உட்பட்ட உலக அறிஞர்களின் கருத்து. எனவே சமூகத்தின் உயர்நிலை நோக்கி புதிய சிந்தனை மரபுகளைத் தோற்றுவித்தவர்களுக்கும் ஆசான்கள் என்றே பெயர் வந்தது. ஆசிரியர் பணி அப்படிப்பட்டது. சமீபத்தில் காலமான தோழமையின் சின்னமான நீலமேகம் போன்ற…

Read More