இலண்டனிலிருந்து ஒரு இந்தியக்கனவு

என்.குணசேகரன் இங்கிலாந்து நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான தலைவராகவும் மார்க்சிய சித்தாந்த அறிஞராகவும் விளங்கியவர் ரஜினிபாமிதத் (1896-1974). இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக 1939-41 -ஆம் ஆண்டுகளில் ரஜினிபாமிதத் பணியாற்றினார். அவரது தந்தை இந்தியர். அவர்,1930-ஆம் ஆண்டுகளிலேயே இந்தியாவிற்கு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பரிபூரண சுதந்திரம் கிடைக்க வேண்டுமென லண்டனிலிருந்து  போராடியவர்.  அவர், ஆசிரியராகப் பணியாற்றிய லேபர் மந்த்லி (Labour Monthly) இதழில் இந்தியாவின் தொழிலாளர்கள்  விவசாயிகள் பிரச்சனைகள் பற்றியும், ஆங்கிலேய ஆட்சி இழைத்து வந்த அநீதிகள் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். ரஜினிபாமிதத்,பென் பிராட்லி உள்ளிட்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்கள் எழுப்பிய குரலின் எதிரொலியாக இந்தியாவிலும் ‘முழுச் சுதந்திரம் அடைந்தே தீருவோம்’ என்ற இலட்சியம் வலுவடைந்தது.இந்திய கம்யூனிஸ்ட்கள் பரிபூரண சுதந்திரத்திற்காக முதற்குரல் எழுப்பினர். பென் பிராட்லி. பிலிப் ஸ்பிராட் ஆகிய இரு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் தலைவர்கள்…

Read More