You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

சுருக்கெழுத்து வருவதற்கு முன்பே சுருக்குத்தமிழ் பேசியவர்கள் எமது வடமாவட்ட மக்கள்

– கவிப்பித்தன் வட்டார வழக்குகளில் வெளிவரும் படைப்புகள் தமிழ் இலக்கிய வெளியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சூழலில், இன்னும் உரிய அடையாளம் பெறாத வடமாவட்ட வழக்காற்றில் களம் அமைத்து தொடர்ந்து படைப்புகளை அளித்துவரும் வெகு சிலரில் கவிப்பித்தனும் ஒருவர். தன் ”இடுக்கி“ சிறுகதைத் தொகுப்பின் மூலம் பயணத்தை துவங்கிய கவிப்பித்தன், பின் ”ஊர்ப்பிடாரி”, ”பிணங்களின் கதை” (2014) என்று தொடர்ந்து பயணித்து, சமீபத்தில் “நீவாநதி” நாவலின் மூலம் புதிய தடத்தை அடைந்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் வாலாஜாவைப் பூர்வீகமாக கொண்ட கவிப்பித்தன் முதலில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றி, தற்போது அரசு வணிகவரித்துறையில் பணிபுரிந்துவருகிறார். பள்ளிப்பருவ பொது இலக்கிய ஆர்வம், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தொடர்பு, களப்பணி, அதனூடாக சிறுபத்திரிகை மற்றும் எதார்த்த இலக்கிய வாசிப்பு எனத் தன் இலக்கிய அனுபவங்களை வளர்த்துக்கொண்டவர். தொண்ட வரண்ட தொண்டை மண்டலத்தின் மண்ணும் மனிதர்களுமே…

Read More
நூல் அறிமுகம் 

வெப்ப பூமியில் பூத்திருக்கும் வசந்தம்

பிணங்களின்கதைசிறுகதைத்தொகுப்பைமுன்வைத்து புல்வெளிகாமராசன் ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு காலம்தோறும் பதில்கள் மாறியவண்ணமே இருக்கின்றன. ஒரு சம்பவம் வேண்டும், ஒரு கருத்தைச்சொல்ல வேண்டும், ஒரு சூழலை சொல்லவேண்டும்,குறிப்பிட்ட பக்கங்களுக்குள் முடிய வேண்டும்,எதிர்பாராத திருப்பம் வேண்டும், குறிப்பிட்ட மனநெருக்கடியை உணர்த்தவேண்டும் என பல பதில்கள் இருந்துவந்தன. இன்று சிறுகதை தன்னுடைய உச்ச நிலையை அடைந்திருக்கிறது. எதையும் சொல்ல வேண்டாம் உணர்த்துவதே நல்ல படைப்பு என்ற நிலையை அடைந்திருக்கிறது. அதாவது நல்ல சிறுகதை என்பது வாசித்து முடித்தவுடன் வாசகரின் மனதில் கதை தொடங்கவேண்டும். இன்று இந்திய அளவில் நல்ல சிறுகதைகளைத் தருவதில் தமிழ் எழுத்தாளர்கள் முன்னணியில் இருக்கிறார்கள், இதற்கு செழிப்பான நம் கதை மரபும் ஒரு காரணம். புதிய தலைமுறை எழுத்தாளர்கள் வார்த்தையிலிருந்து கதைகளை எடுப்பதில்லை வாழ்க்கையிலிருந்தே கதையை எடுத்துவருகிறார்கள். எனவே அவர்களின் கதைகளில் மண்ணோடு…

Read More