புரட்சி இலக்கியங்கள்:ஒரு மீள்வாசிப்பு-3: புரட்சி வரலாற்றுக்கு ஒரு முன்னோடி நூல்

   என்.குணசேகரன் உலக வரலாற்றில்,சமூகத்தை அடியோடு மாற்றிய வரலாற்று நிகழ்வுகள் ஏராளம். மக்கள் எழுச்சியினால், அதிகார மாற்றங்கள், சமூகப் புரட்சிகள் நிகழ்ந்திடாத நாடுகளே இல்லை. ஆனால், அவற்றைப் பதிவு செய்துள்ள  பல வரலாற்றாசிரியர்கள், இந்த நிகழ்வுகளில் சாதாரண மனிதர்கள் ஆற்றிய  பங்கினை சரியாக  சித்தரிப்பதில்லை.‘வரலாற்றைப் படைப்பவர்கள் சில தனிநபர்கள்தான்; வரலாற்று நிகழ்வுகள்  தற்செயலானவை’ போன்ற பார்வைகளுடன்  நீடித்துவரும்  வரலாற்று நோக்குகளாக உள்ளன. சாதாரண மனிதர்களின் இயக்கம் வரலாற்று நிகழ்வுக்கு அடிப்படையானது. இந்தப் பார்வையை நிலைநிறுத்த, மார்க்சிய வரலாற்று ஆசிரியர்கள் இன்றும் போராடி வருகின்றனர். “கீழ் மட்டத்திலிருந்து வரலாறு” எனும் வரலாற்று நோக்குடன் வரலாறுகளை எழுதிய இ.பி.தாம்சன், எரிக் ஹப்ஸ்வம் போன்றோருக்கும் முன்னோடித்    தலைமுறையைச் சார்ந்தவர், ஜார்ஜ் லெபிவர். அவர் எழுதிய “பிரெஞ்ச் புரட்சி” எனும் நூல், ஐரோப்பிய சமூகத்தை முற்றாக மாற்றி, மன்னராட்சிகளையும், பிரபுத்துவத்தையும் தூக்கியெறிந்த ஒரு மாபெரும்…

Read More