You are here
நிகழ்வு 

புதிய புத்தகங்களின் அணிவகுப்பில் ​13வது திருப்பூர் புத்தகத் திருவிழா!

திருப்பூரின் அடையாளங்களில் ஒன்றாக பெயர் பெற்றுவிட்ட 13வது திருப்பூர் புத்தகத் திருவிழா ஜனவரி 29 ஆம் தேதி கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் கோலாகலமாகத் தொடங்கியது. சமூக முன்னேற்றத்திற்காக வாசிப்புப் பழக்கத்தை இளைய தலைமுறையிடம் பரவலாக வலுப்படுத்தும் வகையில் பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றன. ஆண்டுக்கு ஆண்டு இந்த புத்தகத் திருவிழா திருப்பூர் மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் இக்கண்காட்சியில் இடம் பெற விற்பனையாளர்களும், பதிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவதே இதற்குச் சான்று. திருப்பூர் வாசிக்கிறது இந்த புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே ‘திருப்பூர் வாசிக்கிறது’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. “மனிதன் மகத்தானவன்” என்ற புத்தகம் 15 ஆயிரம் பிரதிகள் திருப்பூர் வட்டாரக் கல்விநிறுவனங்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு பல்லாயிரம்…

Read More
நூல் அறிமுகம் 

புலப்படாத கொள்ளை…

என். சிவகுரு மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றிய சுகுமார் இப்புத்தகத்தை அழகுற எழுதியுள்ளார். மருந்துகளைப் பயன்படுத்தாத மனிதன் இன்று யாரும் இருக்க முடியாது. அதுவும் ஆங்கில மருந்துகளைத் தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். ஒரு பக்கம் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோய், பத்தில் ஒருவருக்கு, இரத்த அழுத்தம், ஊட்டசத்து இல்லாத குழந்தைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை, கடன் வாங்கி மருத்துவம் செய்து கொள்ளும் அவலம் என நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்புத்தகம், ஒரு இருள் இந்தியர்களை எவ்வாறு கவ்வுகிறது என சொல்லுகின்றது. நல்வாழ்வு அரசு எனும் சொல்லுக்கு இன்று அர்த்தமே இல்லாத நிலையில் தன் கடமைகளிலிருந்து, அரசுகள் படிப்படியாக ஒதுங்கிக் கொள்கின்றது. மக்களின் அடிப்படைத் தேவைகளை ஓரளவுக்கு செய்து கொண்டிருந்த அரசுகள் தாராளமய காலத்தின் துவக்கத்திலேயே, தனியாரை சேவைத் துறைகளில் கொண்டு வந்து,…

Read More
நூல் அறிமுகம் 

இருட்டைத் தின்றவர்கள்

 சேகு சேலத்து எழுத்தாளர் இலா. வின்சென்ட் அவர்களுடைய இருட்டைத்  தின்றவர்கள் சிறுகதைத் தொகுப்பை வாசித்த அனுபவம் அலாதியானது. இக்கதைகளின் களம் அத்தனையும் சேலம் சார்ந்த பகுதிகளாக இருப்பது இன்னும் சிறப்பைக் கூட்டுகிறது. இலா.வின்சென்ட் சிறுகதைகள், கட்டுரைகள், ஆய்வு நூல்கள் எனப் பல நூல்களை எழுதியவர். சேலம் த.மு.எ.க.சவின் சாளரம் சிற்றிதழின் பொறுப்பாசிரியர். அந்த வகையில் அவருடைய அனுபவ நடை, இந்த நூலில் உள்ள சிறுகதைகளில் சிறப்பாக வந்திருக்கிறது. சிறுகதைக்கான களமும் சமூகத்தின், எதார்த்தமான, அடித்தட்டு மக்களுடைய பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்வதால் இதில் உள்ள 12 கதைகளுள், ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் நமது மனத்தை ஊடுருவுகின்றது. ‘விதைகள் உறங்காது’ என்னும் சிறுகதை நம் சுதந்திர இந்தியாவின் முதல் அரச பயங்கரவாதத்தைத் தோலுரிக்கிறது. சேலம் சிறையில் நிராயுதபாணியான 22 கம்யூனிஸ்ட் தோழர்கள், அரசியல் கைதிகளுக்கான உரிமையைக் கோரியதற்காக, சிறைத்துறை காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கிச்…

Read More
நூல் அறிமுகம் 

நான் ஏன் என் தந்தையைப் போல் இல்லை

பேரா.என்.மணி   மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய்களும், பாலியல் வன்கொடுமைகளுமே மரபணு பற்றி பொதுவெளியில் தெரியக் காரணமாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு DNA, RNA, mDNA, ஜீன், குரோமோசோம்கள் பற்றி பெயர் பரிச்சயம் மட்டுமே இருக்கும். அவை என்ன செய்யும், என்ன செய்து கொண்டிருந்தது, அவற்றால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று பலருக்கும் தெரியாமலே உள்ளது. மரபியல் பற்றிய ஆய்வு மிகச் சமீபத்தியதே என்று நினைப்போரையும் மலைக்க வைக்கிறது, ஆயிஷா இரா. நடராசனின் ‘’நான் ஏன் என் தந்தையைப் போல் இல்லை’ என்னும் சமீபத்திய நூல். இந்நூல் மரபணு அறிவியலின் தோற்றம், வளர்ச்சி எதிர்காலம் பற்றி மட்டுமே பேசவில்லை. அத்தகைய ஒரு சுத்த அறிவியல் நூலை மட்டுமே படைத்தளிக்கும் மனம் நடராசனுக்கும் இருக்காது. ஒரு 64 பக்க நூலில் எத்தனை விசயங்களைப் பதியம் செய்துவிடுகிறார் நடராசன். மரபணுவியலுக்கும், பரிணாமவியலுக்கும்…

Read More
நூல் அறிமுகம் 

கம்பராமாயணமும் ஒரு மறுவாசிப்புத்தானோ….

எஸ்.பி.கல்யாணசுந்தரம் சுப்பாராவின் வனபுத்திரியைப் படித்தேன். நல்ல மறுவாசிப்பு நாவல். வால்மீகி ஆசிரமத்தில் தங்க நேரும் சீதை, வால்மீகி எழுதி வைத்திருக்கும் தன் கதையைப் படித்து, அவரிடம் தன் சந்தேகங்களையும், பிற பாத்திரங்கள் பற்றியும் வால்மீகியிடம் கேள்வி கேட்பதாக சுவாரஸ்யமாகப் போகும் கதை. சுப்பாராவின் கடினமான உழைப்பும், மூலத்தை முற்றாக உள்வாங்கி தனது மாற்றுப் பார்வையை சிக்கலில்லாமல் படைக்கும் உத்தியும் பாராட்டுக்குரியது. நாவலின் சில காட்சிகள் அற்புதமானவை. சீதை வால்மீகியிடம் ஏன் தன் சம்பந்தப்பட்ட பல விபரங்கள், மகிழ்ச்சியான துக்கமான பல சம்பவங்கள் இருட்டடிப்பு செய்யப் பட்டிருக்கின்றன என்று கேட்கிறாள். உதாரணமாக சீதை தன் தாயாரின் பெயர் என்ன என்று கேட்பதும், அது பற்றிய குறிப்பு எங்குமே இல்லை என்பதும் வியப்பிற்குரியது. வளர்ப்புத் தாயார் சுனைனா பற்றியும் மிக லேசான குறிப்பு மட்டுமே. அது ஏன் என்ற கேள்வி…

Read More
நூல் அறிமுகம் 

”நாம் தேடி அலைந்த தெளிந்த விடியல் – இதுவல்ல”

நூற்றாண்டு விழா நாயகர்கள் பலரை நாம் கவனத்திற் கொள்ளாமலே கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். இன்றைய பாகிஸ்தானின் மேற்குப் பஞ்சாப்பில் உள்ள சியால் கோட்டில் பிறந்தவர் ஃபெய்ஸ் அஹமத் ஃபெய்ஸ். பிறந்த நாள், பிப்ரவரி 13, 1911ஆம் ஆண்டு. அவருடைய நூற்றாண்டுவிழா 2011இல் கொண்டாடப்பட்டதாக இப்புத்தகம் வாயிலாகத் தான் நாமறிகிறோம். தமிழில் Ôதுரோகத்தின் தருணம்’ என்ற பெயரில் ஃபெஸ்ஸின் கவிதைகள் சிலவற்றை 1994-ல் முதன் முறையாக மொழி பெயர்த்துத் தந்தவர் ப.கு.ராஜன்தான். ‘சவுத் விஷன்’ வெளியீட்டகத்தின் சார்பில¢ தோழர் பாலாஜி அத்தொகுப்பை வெளியிட்டிருந்தார். இன்று மீளவும் ப.கு.ராஜன், ஃபெய்ஸின் தேர்வு செய்யப்பட்ட 49 கவிதைகள், கவிஞரின் நூற்றாண்டையொட்டி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி பீப்பிள்ஸ் டெமாக்ரஸி இதழில் எழுதியிருந்த கட்டுரை, ஃபெய்ஸின் வாழ்க்கைக் குறிப்புகள், கவிஞரின் சமகாலத்துக் கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலருடைய நினைவலைகள்,…

Read More
நூல் அறிமுகம் மற்றவை 

சமூக உற்பத்தியின் ஒரு வடிவமே கலை

ந. இரவீந்திரன் மனித சமூகம் பெற்று வந்த வளர்ச்சிச் செல்நெறியின் வெளிப்பாடாக உற்பத்தியானது கலை. அதன் எழுத்து வடிவமாய்ப் பரிணமித்த இலக்கியம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் உண்டு. மனிதப்படைப்பு என்பதைக்கடந்து உள்ளொளி வாயிலாகக் கடவுள் வெளிப்படுத்தும் கொடையெனக் கொள்வோரும் உளர். மனுக்குலம் எதிர்நோக்கிய பிரச்சனைகளை மக்கள் போராட்டங்கள் வாயிலாக தீர்க்கும் மார்க்கம் கண்டறியப்பட்ட போது, அத்தகைய இயங்காற்றல்களின் செயல்திறன் கலை – இலக்கியத்தின் பேசு பொருளான போது, இவை அருள் கொடைகளல்ல சமூகம் உற்பத்திசெய்கின்ற இன்னொரு வடிவமே எனக்கண்டறிய இயலுமாயிற்று. சமூக மாற்றத்துக்கான அந்த இயங்காற்றலில் பங்கேற்று அதனைக் கோட்பாட்டுருவாக்கம் செய்த மார்க்ஸியத்தின் மூலவர்களான மார்க்சும் ஏங்கெல்சும் இலக்கியம் குறித்தோ அதனைத் திறனாய்வு செய்யும்  முறையியல்கள் பற்றியோ தனியாக எழுதி வைக்கவில்லை. எரியும் பிரச்சனையாகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் எழுச்சிகொண்டு இயங்கிய அனுபவங்கள் சார்ந்த எழுத்தாக்கங்களே அவர்களது…

Read More
நூல் அறிமுகம் 

தொய்வில்லாது உழைத்த தோழர்களின் சரிதம்

இரா. ஜவஹர் ‘களப் பணியில் கம்யூனிஸ்டுகள்’ என்ற இந்தப் புத்தகம் ஓர் சாதனை என்று சொன்னால் அது கொஞ்சம் மிகையாக உங்களுக்குத் தோன்றக் கூடும். நிச்சயமாக மிகையில்லை. தலைவர்களைப் பற்றித் தொண்டர்கள் எழுதிய ஆயிரமாயிரம் புத்தகங்கள் உள்ளன. ஆனால் எளிய தொண்டர்களின் வாழ்க்கை வரலாறுகளை விவரித்துத் தலைவர்கள் எழுதிய புத்தகங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா ? அதை அந்தத் தொண்டர்கள் படித்து நெஞ்சம் நெகிழ்வதையும், இளைய தலைமுறையினர் படித்து எழுச்சி அடைவதையும் நீங்கள் கண்டதுண்டா?  அந்த வகையில் இதுவே முதல் புத்தகம். நான் அறிந்த வரையில். தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்று விவரங்களைத் தேடித் தேடிச் சேகரித்தும், சேகரிக்கச்செய்து பெற்றும் இதை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன். ஏராளமான தொண்டர்களைப் பற்றி இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும்…

Read More
நூல் அறிமுகம் 

எமது புதிய வெளியீடுகள்

மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் டெரி ஈகிள்டன் , தமிழில்: அ.குமரேசன், பக். 96 | ரூ.65 மானுடத்தின் முழு விடுதலைக்குப் போராடும் உறுதியை வலுப்படுத்தவே மார்க்சியத் திறனாய்வு என்பதை வாதத்திற்கான கருத்தாக இல்லாமல் வரலாற்றுச் சான்றாகவும் விளக்கி வாழ்க்கைப் பாடமாக்கியிருக்கிறார் டெரி ஈகிள்டன் இந்நூலில். விடுதலைப் போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள் சீத்தாராம் யெச்சூரி , தமிழில்: ஹேமா, பக்.224 | ரூ.140 நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போராடியபோது, அந்தப் போராட்டத்தை வலுவாக்கித் தீவிரப்படுத்தியதில் கம்யூனிஸ்டு களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அத்தகைய 25 தியாகிகளின் விடுதலைப் போராட்ட நினைவலைகளே இந்நூல். ரோசா லக்ஸம்பர்க் தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி, பக்248 | ரூ.160 14 தொகுதிகளில் விரியும் ரோசா லக்ஸம்பர்க்கின்  ஆழமும் ஒளியும் நிரம்பிய எழுத்துகள் பெருமளவு தமிழுக்கு…

Read More
நூல் அறிமுகம் 

பாரதி ஆய்வில் அடுத்தகட்ட நகர்வு

பாரதிபுத்திரன் ஆய்வுக்களத்தில் விடுபட்டிருக்கும் பகுதியைக் கண்டடைவதிலேயே பாதி வெற்றியை ஆய்வு பெற்றுவிடுகிறது. 90 விழுக்காடு விளக்கமுறையில் அமைந்துவிடும் தமிழியல் ஆய்வுலகில் முன்னிகழ்ந்த ஆய்வுகளைக் கணக்கில் கொண்டு, தேடுதலோடு செய்யப்பெறும் ஆய்வுகள் மிகக்  குறைவு. அவற்றுள்ளும் பாரதியியல் ஆய்வு என்பது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலமாக எல்லா முனைகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட, பரந்துபட்ட ஒன்றாகும். அவற்றுள் சலிப்பின்றி இன்னும் கொணரப்படும் அவன் ஆக்கங்களும் அவற்றுடன் தொடரப்படும் ஆய்வுகளும் வியக்கச் செய்கின்றன. முனைவர் ய.மணிகண்டன் அவர்களது இந்நூலும் அத்தகைய ஒன்றாகும். இதிலுள்ள பதினொரு கட்டுரைகளும் பாரதியின் அறியப்படாத, அறிய வேண்டிய உண்மைகளை ஆய்வுநோக்கில் புலப்படுத்துகின்றன. ‘பாரதியின் முழுமை ஆராய்ச்சி  உலகால் இன்னும் கண்டு காட்டப்பெறவில்லை’ என்கின்ற எண்ணத் தூண்டுதலுடன் கவிதைகள், கட்டுரைகள், புனைகதைகள், வாழ்வியல் நிகழ்வுகள் எனப் பாரதியின் படைப்புகளுக்குள் பெரும் ஊடாட்டத்தை நிகழ்த்தியுள்ளார்  ஆசிரியர். அவர் எடுத்துக் காட்டுவனவற்றுள் பலவும்…

Read More