You are here
மற்றவை 

தமிழும் மலையாளமும் நேருக்கு நேர்

தொகுப்பு: ஜெயஸ்ரீ இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மூன்றாம்தர எழுத்தாளர்களையும் நாமறிவோம். தொப்புள் கொடி உறவுள்ள தமிழின் இலக்கியச் சலனங்களைப் பற்றியோ, கன்னடத்தின் எழுத்து முறைகளையோ நாம் அறிவதில்லை. தெலுங்கின் 5 எழுத்தாளர்களின் பெயர் சொல்ல முடியுமா என்று கேட்டாலும் தெரியாது. இது பெரியதொரு குறைபாடுதான். இலக்கியத்தின், திரைமொழியின், இதர கலைகளின் தமிழ்ப் பார்வைகள் என்ன? அவற்றுடனான மலையாள உறவுகள் எவ்வளவு திடமானது. ‘சந்திரிகா’ ஓணப் பதிப்பிற்காக தமிழ் – மலையாள எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் திருவண்ணமலையில் பவா செல்லதுரையின் வீட்டில் ஒருங்கிணைந்தனர். பிரபல திரைப்பட இயக்குநர் மிஷ்கின், தமிழ்-மலையாள எழுத்தாளர் ஷாஜி சென்னை, மொழிபெயர்ப்பாளர்களான     கே.வி.ஜெயஸ்ரீ, கே.வி.ஷைலஜா, தமிழின் இளம் எழுத்தாளன் ராஜகோபால், திரைப்பட செயற்பாட்டாளன் தமிழ் ஸ்டூடியோ அருண், பிரபல தமிழ் இலக்கியவாதி பவா செல்லதுரை, சிஹாபுதீன் பொய்த்தும்கடவு என்று இவர்கள் உரையாடலில் பங்கேற்றனர்….

Read More

யு.ஆர். அனந்தமூர்த்தி : பண்பாட்டுத் தளத்தில் சனாதனத்திற்கு எதிராக ஒலித்த குரல்

தனது படைப்புகளுக்காகவும், அரசியல் விமர்சனங்களுக்காகவும் உலகளாவிய அளவில் கவனம் பெற்ற எழுத்தாளர் பேராசிரியர் யு.ஆர்.அனந்தமூர்த்தி (உடுப்பி ராஜகோபாலாச்சார்ய அனந்தமூர்த்தி) கடந்த 22.8.2014 வெள்ளிக்கிழமையன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 81. கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளிக்கு அருகிலுள்ள மெலிகே கிராமத்தில் 21.12.1932 அன்று ஒரு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் அவர் பிறந்தார். அனந்தமூர்த்தி தனது செறிவான கல்விப் பின்புலத்தின் காரணமாக ஆங்கிலப் பேராசிரியராகிப் பிறகு கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தரானார். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வைப் பாவித்த இந்துமதத்தின் வர்ணாசிரமக் கொள்கைகளைக் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கியதன் காரணமாக உடுப்பி ராஜகோபாலாச்சார்ய அனந்தமூர்த்தி யு.ஆர். அனந்த மூர்த்தியாகப் பரிணாமம் பெற்றார். அனந்தமூர்த்தியின் மனைவி பெயர் எஸ்தர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இருவரும் கலப்பு மணம் செய்து கொண்டனர். இவர்களது மகளின் பெயர் அனுராதா. மூர்த்தி கன்னட மொழியில் காத்திரமான பல…

Read More