You are here
நூல் அறிமுகம் 

வனமிழந்த கதை

ந. பெரியசாமி  புங்கை மரத்தின் சிறு கிளையை ஒடித்து வந்தவன் ஏம்பா மரத்தோட ரத்தம் கண்ணுக்குத் தெரிய மாட்டேன்கிறது என்றான். பதிலற்று அவன் கேள்வியை ரசித்தபடி இருக்கையில் ஆசிரியர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களென்று தோன்றியது. உலகம் குழந்தைகளை கடவுளாகப் பார்ப்பதால் கடவுளின் உலகோடு நெருக்கமாக இருப்பவர்கள் பாக்கியவான்கள்தானே. உடனிருக்கும் ஓரிரு குழந்தைகளின் செய்கைகளும் பேச்சுகளும் வேறுவேறு உலகை தரிசிக்கச் செய்திடுகையில் வெவ்வேறு குடும்பச்சூழல் கலாச்சாரப் பின்னணி என பல்வேறுபட்ட புதிது புதிதான குழந்தைகளோடு பழகிக் கிடக்கும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு உண்டுதானே. புதிய அனுபவங்களும், தரிசனங்களும் கிடைக்கப் பெறும் வனமிழந்த கதையோடு வந்திருக்கும் ஆசிரியர் கே.ஸ்டாலினைப் பொறாமையோடே பார்க்கிறேன். என் நினைவை மடைமாற்றி விட்டது மகனின் உற்சாகக் குரல். தூரத்தில் கிளி சோதிடர் வந்து கொண்டிருந்தார். இன்னும் சிறிது காலத்திற்க்குள் கன்னிகை ஒருத்தி உன் வாழ்வில் குறுக்கிடுவாள் என கிளி சோதிடர்…

Read More
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

ஆசிரிய முகமூடி அகற்றி… ச. மாடசாமி | அறிவியல் வெளியீடு, சென்னை- 86 | பக்.72 ரூ.60 | போன் : 044-28113630பிராங் மக்கோர்ட் (1930-2009) அமெரிக்காவில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். ஆங்கில ஆசிரியர். மக்கோர்ட்டின் வகுப்பறை அனுபவங்கள் வித்தியாசமானவை. மாணவர் ஒவ்வொருவரும் உரையாடலில் பங்கேற்கும் விதமாக எப்போதும் தம் வகுப்பறையை மக்கோர்ட் திறந்து வைத்தார். அவை கற்பனை நிறைந்த வகுப்பறைகளும் கூட. வெவ்வேறு நாட்டுச் சமையல் குறிப்புகளுக்கு இசையமைத்துப் பாடி மகிழ்ந்த வகுப்பறைகள். மட்டன் அரை கிலோ, மிளகாய்ப் பொடி 100 கிராம், உப்பு  இரு  சிட்டிகை என வரும் அட்டவணையை இசைக்கருவிகளோடு பாட்டாகப் பாடி அமர்க்களப்படுத்திய வகுப்பறைகள். மக்கோர்ட் மகா சாமர்த்தியசாலி. ஆனால் எழுதும்போது அப்பாவிபோல் எழுதுகிறார். எளிமையாகவும் வெளிப்படையாகவும் அமைந்த அவர் எழுத்தை வாசிப்பது நாட்டுப்புறக் கதை கேட்பதுபோல ஒரு குதூகலமான அனுபவம்….

Read More