You are here
நூல் அறிமுகம் 

மலாலா தலிபான்களுக்கு எதிராக ஒலித்த வீரியக்குரல்

எம். வசந்தி மலாலா யுசப்சாய் என்ற பெயரைத் தெரியாதவர்கள் எவரும் இலர். தனது 11 வயதிலிருந்தே பெண் கல்விக்காவும், அவர்களின் உரிமைக்காகவும் பாகிஸ்தான¤ல் உள்ள தலிபான்களுக்கு எதிராகப் போராடி, தலிபான்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையி ல் அனுமதிக்கப்பட்டார்.  பல மாதங்கள் மருத்துவ மனையிலே கழித்தார். தனது 15ஆம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசானது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த புத்தகம் மலாலா தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், தலிபான்களின் நிலைபற்றியும் 265 பக்கங்கள¤ல் கூறுவதாக அமைத்துள்ளது. மலாலா 12 ஜூலை 1997ல் பாகிஸ்தானில் உள்ள மிக்கோரவில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே  திறமையானவள், தைரியசாலி. பெண்களின் கல்விக்காக, அவர்களின் உரிமையைப் பெற்றுத் தர பல முயற்சிகளை செய்து வந்தவர். பாகிஸ்தானில் கோடிக்கணக்கான பெண்கள் பள்ளிக் கூடமே சென்றதில்லை. பெண்கள் யாரும் ஆண்களிடம் பேச அனுமதியில்லை.  உறவினர்களாக இருந்தாலும்கூட. ஆண்…

Read More

ஆணாதிக்க அறிவியலே அழிவு அறிவியல்

– பார்பாராமெக்லின்டாக் பார்பாரா மெக்லின் டாக், மரபியலின் இரண்டு முக்கியத் திருப்பு முனைகளைச் சாதித்தவர். 1927ல் கார்னல் பல்கலைக்கழகத்தில் தனது அயராத உழைப்பில் குரோமோசோம் விட்டு குரோமோசோம் தாவும் மரபணுக்களின் முக்கியப் பண்பைக் கண்டுபிடித்து வெளியிட்டார். ஒருவகை மரபணு மற்றொரு வகை மரபணுவைக் கட்டுப்படுத்தும் எனும் அடுத்த திருப்புமுனைக் கண்டுபிடிப்பை சோள-தாவர மரபணுக்கள் வழியே அடைந்த மெக்லின்டாக்கின் ஆய்வு முடிவுகளை அன்று 1930களின் விஞ்ஞான உலகம் ஏற்கவில்லை. கிரிகர்மெண்டலுக்கு நேர்ந்ததைப் போலவே தனக்கு, ஆண்களே அதீத ஆதிக்கம் செலுத்திய அறிவியல் உலகால் கிடைத்த அவமானங்களைத் தாங்கமுடியாமல் 1951லிருந்து தனது ஆய்வு முடிவுகள் எதையும் வெளியிடாமல் மெக்லிண்டாக் நிறுத்திக் கொண்டார். தாவும் மரபணு (Jumping Gene)  மற்றும் கட்டுப்படுத்தும் மரபணு (Controlling Gene)ஆகிய இரண்டுமே சரிதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, மக்காசோளத்தின் மரபணு வரைபடத்தை (The…

Read More
கட்டுரை சா.க. பக்கம் 

சிற்றிதழ்கள்!

சிற்றிதழ்கள் தங்கள் மீது சொல்லப்படும் குற்றம் குறைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு படைப்பிலக்கியத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கின்றது. சிற்றிதழ் என்பது புதிய சோதனை, புதிய முயற்சி என்பதைச் சார்ந்தது. அது ஒரு நவீன இயக்கியம். மரபு என்பதற்கும், ஏற்கப்பட்டது, அங்கீகாரம் பெற்றது என்பதற்கும் எதிரானது. அதற்கு எழுத்தாளனே முக்கியம் கிடையாது, எழுத்து என்பதுதான் முக்கியமானது. புத்தம் புதிய படைப்பு எந்த வயதினரால் எழுதப்பட்டாலும் அதனை ஏற்று வெளியிட்டு நிலைநாட்டுவது என்பது சிற்றிதழ் மரபு.

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

அச்சப்படுபவர் அறிவியல்வாதியே அல்ல

மேரி கியூரி மேரி கியூரி. மேரி ஸ்க்லொடொஸ்கா கியூரி. இரு முறை அதிலும் வேறு வேறு துறைகளுக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி. தனது ஒரே குடும்பத்தில் அயர்னிகியூரி, பியரிகியூரி என நோபல் பாரம்பரியத்தை உருவாக்கியவர். 1867ல் நவம்பர் 7 அன்று வார்சாவில் (போலந்து) பிறந்தவர். அப்போது ரஷ்ய ஜார்பேரரசின் கீழ் இருந்த போலந்தில் பல்வேறு இடதுசாரி எழுச்சிகளுக்கு காரணமான குடும்பத்தில் பிறந்து ரகசியமாக நடத்தப்பட்ட வார்சா பல்கலைக்கழகத்தில் கற்று தனது சகோதரியோடு பாரீசுக்கு (பிரான்ஸ்) வேறு பெயரில் தப்பி அங்கு மிகுந்த போராட்டத்தின் நடுவில் கல்வியைத் தொடர்ந்தார் கியூரி. பெண் கல்விக்கும்  பெண் முன்னேற்றம், பங்களிப்பு இவை யாவைக்கும் முன் உதாரணமானவர். பகுத்தறிவுவாதி. பாதிரியார்களோ தேவாலயமோ செல்லாத சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தைரியசாலியாக வரலாறு அவரைப் போற்றுகிறது. தாய் மொழிப் பற்று, இனப்பற்று,…

Read More