இது ஆண்களின் உலகமாக மட்டும் இருக்கக்கூடாது…

கவின் மலர்

கேள்விகள் : கொங்கு நாடன்

1. ஊடகவியலாளராகிய நீங்கள் புனைவெழுத்தின் பக்கம் வர நேர்ந்த சந்தர்ப்பம் குறித்து கூறுங்கள்…

என் முதல் கவிதை, சிறுகதை இரண்டுமே சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைந்தன. கட்டுரைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையில் நேர்ந்த மறக்க முடியாத ஒரு வேதனையான அனுபவம் உள்ளுக்குள் சீற்றத்தை உண்டுபண்ணியது. அந்த சீற்றத்தையே ‘முகவரியற்றவள்’ என்று தலைப்பிட்டு கவிதையாக்கி ’உயிர்எழுத்து’ இதழுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தக் கவிதை வெளியாகவில்லை. அக்கவிதையோடு அனுப்பி வைத்த இன்னொரு கவிதை ‘பெருவெளி’ வெளியானது. அதுதான் பிரசுரமான முதல் கவிதை. எனினும் சில மாதங்கள் கழித்து ஆனந்தவிகடனில் ‘முகவரியற்றவள்’ கவிதை வெளியானது. சிறுகதைக்குள் செல்ல வைத்தது ஆனந்த விகடன் ஆசிரியர் ரா. கண்ணனின் வார்த்தைகள்தான். அவர் சொன்னபடி முயன்றுபார்த்தால் என்ன என்று தோன்றி எழுதியதுதான் ‘இரவில் கரையும் நிழல்கள்’ என்கிற முதல் சிறுகதை. அதுவும் ‘உயிர்எழுத்து’ இதழில்தான் வெளியானது.

Read More