விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் -19 : கம்யூனிஸ்ட் கருதுகோள்

என்.குணசேகரன் கம்யூனிச எதிர்ப்பும், வெறுப்பும், இன்றளவும் நீடித்து வருகிற மேற்கத்திய உலகில், மார்க்சியத்தின் மகத்துவத்தை உயர்த்தி, உரக்கப் பேசி வரும், மார்க்சிய அறிஞர்  அலென் பதேயு. “கம்யூனிஸ்ட் கருதுகோள்” எனப்படும் அவரது முக்கிய கருத்தாக்கம் அதிக விவாதத்திற்கு உள்ளானது. 2008-ஆம் ஆண்டில், நியூ லெப்ட் ரிவியு இதழில் எழுதிய கட்டுரையில் இந்த கருத்தாக்கத்தினை அவர் முதலில்  வெளியிட்டார். பிறகு அதனை விரிவாக விளக்கி நூல்களும் கட்டுரைகளும் எழுதினார். அவர் சார்ந்த பிரெஞ்சு அறிவுலகத்தில் மட்டுமல்லாது, ஐரோப்பிய, அமெரிக்க அறிவுத்துறையினர் மத்தியிலும் இக்கருத்து மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளது. அவரது கருத்துக்கு மார்க்சிய எதிரிகளின் எதிர்ப்பு இயல்பானது. ஆனால், மார்க்சியர்கள் பலரும் கூட அவரது  கருத்தில் முரண்பட்டு, விவாதித்து வருகின்றனர். எனினும், இந்த விவாதத்தின் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க, மார்க்சியத்தின் மீதான  ஆர்வம் பல தரப்பினரிடமும் பரவலாக எழுந்துள்ளது. இந்த…

Read More